முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.027.திருஇந்திரநீலப்பருப்பதம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.027.திருஇந்திரநீலப்பருப்பதம்
2.027.திருஇந்திரநீலப்பருப்பதம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் - நீலாசலநாதர்.
தேவியார் - நீலாம்பிகையம்மை.
1753 | குலவு
பாரிடம் போற்ற வீற்றிருந் திலகு மான்மழு வேந்து மங்கையர் நிலவு மிந்திர நீலப் பர்ப்பதத் துலவி னானடி யுள்க நல்குமே. |
2.027. 1 |
விளங்கும் மான் மழுஏந்திய அகங்கையாளனாய்த் தன்னிடம் அன்பு செய்யும் பூதகணங்கள் போற்ற, விளங்கித் தோன்றும் இந்திர நீலப்பர்வதத்து வீற்றிருந்து உலாவுகின்ற சிவபிரான் தன் திருவடிகளை நினைவார்க்கு அருள் புரிவான்.
1754 | குறைவி லார்மதி
சூடி யாடல்வண் டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர் இறைவ னிந்திர நீலப் பர்ப்பதத் துறைவி னான்றனை யோதி யுய்ம்மினே. |
2.027.2 |
மேலும் குறைதல் இன்றி என்றும் ஒரு கலையாய் நிறைவுபெறும் பிறையை, வண்டுகள் இசைக்கும் சிறந்த கொன்றை மலர் சூடிய சென்னியில் சேர்த்துள்ள இறைவனும்,இந்திரநீலப் பருவதத்து உறைபவனுமாகிய சிவபிரானைப் போற்றி உய்யுங்கள்.
1755 | என்பொ
னென்மணி யென்ன வேத்துவார் நம்ப னான்மறை பாடு நாவினான் இன்ப னிந்திர நீலப் பர்ப்பதத் தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே. |
2.027.3 |
என் பொன்னே என்மணியே என்று புகழ்ந்து போற்றுவாரை விரும்புபவன், நான்கு மறைகளையும் பாடும் நாவினை உடையவன், இன்பவடிவினன், இந்திரநீலப் பர்வதத்து அன்பு உடையவன் ஆகிய சிவபிரான் திருவடிகளையே சரணாக அடைந்து வாழுங்கள்.
1756 | நாச
மாம்வினை நன்மை தான்வரும் தேச மார்புக ழாய செம்மையெம் ஈச னிந்திர நீலப் பர்ப்பதம் கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. |
2.027.4 |
நம் வினைகள் நாசமாகவும், நன்மைகளே வந்தெய்தவும், உலகளாவிய புகழுடைய செம்மையாளனாகிய எம் ஈசனும் இந்திரநீலப் பருவதத்து உறைவோனுமாகிய சிவபிரானை, நும் சிறுமையையும் அவன் பெருமையையும் எண்ணி நற்குணங்கள் பலவும் அமைய வாழ்த்துங்கள்.
1757 | மருவு
மான்மட மாதொர் பாகமாய்ப் பரவு வார்வினை தீர்த்த பண்பினான் இரவ னிந்திர நீலப் பர்ப்பதத் தருவி சூடிடு மடிகள் வண்ணமே. |
2.027. 5 |
இந்திர நீலப்பருவதத்து இறைவனது இயல்பு அருவிகளை மாலையாகச் சூடி மகிழ்வதோடு தன்னைமருவிய மான்போன்ற கண்ணளாகிய உமையம்மை ஒருபாகமாக விளங்க, தன்னைப் பரவுவார் வினைகளைப் போக்குவதாகும்.
1758 | வெண்ணி
லாமதி சூடும் வேணியன் எண்ணி லார்மதி லெய்த வில்லினன் அண்ண லிந்திர நீலப் பர்ப்பதத் துண்ணி லாவுறு மொருவ னல்லனே. |
2.027. 6 |
வெண்மையான நிலவைத் தரும் மதியைச் சூடும் சடையினனும் பகைவரின் திரிபுரங்களை அழித்த வில்லினனும், தலைமையாளனும் ஆகிய இறைவன், இந்திரநீலப்பருவதத்துள் விளங்கும் ஒருவன் அல்லனோ?.
1759 | கொடிகொள்
ஏற்றினர் கூற்று தைத்தவர் பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர் அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம் உடைய வாண னுகந்த கொள்கையே. |
2.027. 7 |
கொடியில் கொண்ட விடையை உடையவர். எமனை உதைத்தவர். பொடியணிந்த மேனியில் பாம்பினை அணிந்தவர், தலைவர். இந்திரநீலப் பருவதத்துள் வாழும் இறைவனின்இயல்புகள் இவையாகும்.
1760 | எடுத்த
வல்லரக் கன்க ரம்புயம் அடர்த்த தோர்விர லானவ னையாட் படுத்த னிந்திர நீலப் பர்ப்பதம் முடித்த லம்முற முயலு மின்பமே. |
2.027. 8 |
கயிலை மலையை எடுத்த இராவணனின் கைகள் தோள்கள் ஆகியவற்றை அடர்த்த விரலால் அவ்விராவணனை ஆட்படுத்தியவன் உறையும் இந்திர நீலப்பருவதத்தை முடிகளால் வணங்க இன்பம் எளிதின் வாய்க்கும்.
1761 | பூவி
னானொடு மாலும் போற்றுறும் தேவ னிந்திர நீலப் பர்ப் பதம் பாவி யாவெழு வாரைத் தம்வினை கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே. |
2.027. 9 |
தாமரை மலரில் எழுந்தருளிய பிரமனோடு திருமால் போற்றி வணங்கும் தேவனாகிய இந்திரநீலப் பருவதத்துள் உறையும் இறைவனை நினையாதவரை வினைகள் சினக்கும். கூற்றம்கொல்லும்.
1762 | கட்டர்
குண்டமண் டேரர் சீரிலர் விட்ட ரிந்திர நீலப் பர்ப்பதம் எட்ட னைநினை யாத தென்கொலோ சிட்ட தாயுறை யாதி சீர்களே. |
2.027. 10 |
கட்டானவும் பருமையானவுமான உடலினராகிய சமண புத்தர்கள் சிறப்பற்றவர். நம்மால் விட்டொழியத் தக்கவர். அவர்களை விடுத்து இந்தி லப் பருவதத்து உறையும் மேலான ஆதியின் சீர்களை எள்ளளவும் நினையாதிருப்பது ஏனோ?.
1763 | கந்த
மார்பொழில் சூழ்ந்த காழியான் இந்தி ரன்றொழு நீலப் பர்ப்பதத் தந்த மில்லியை யேத்து ஞானசம் பந்தன் பாடல்கொண் டோதி வாழ்மினே. |
2.027. 11 |
மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப் பதியானாகிய ஞானசம்பந்தன் இந்திரனால் வழிபடப் பெற்ற நீலமலையில் விளங்கும் அந்தம் இல்லாத பெருமானை ஏத்திய பாடல்களை ஓதி வழிபட்டு வாழுங்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஇந்திரநீலப்பருப்பதம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பர்ப்பதத், னிந்திர, இந்திரநீலப், இந்திர, பர்ப்பதம், உறையும், பருவதத்து, விளங்கும், பருவதத்துள், சூடும், வினைகள், எடுத்த, அடர்த்த, சூழ்ந்த, திருமுறை, திருச்சிற்றம்பலம், வாழுங்கள், சிவபிரான், கொன்றை, திருஇந்திரநீலப்பருப்பதம், போற்றி, உடையவன், வாழ்மினே, லார்மதி