அகப்பொருள் விளக்கம்
1.69 ஓதற்பிரிவிற்கு உரியோர்
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும் | 69 |
1.70 கல்வி பிரிவிற்கு உரியோர்
அல்லாக் கல்வி எல்லார்க்கும் உரித்தே | 70 |
1.71 படைபயில் பிரிவிற்கு உரியோர்
படைக்கலம் பயிறலும் பகடுபிற ஊர்தலும் உடைத்தொழில் அவர்க்கு என உரைத்திசினோரே |
71 |
1.72 காவல் பிரிவின் வகை
அறப்புறம் காவல் நாடு காவல் எனச்
சிறப்புறு காவல் திறம் இருவகைத்தே |
72 |
1.73 அறப்புறம் காவல்
அவற்றுள் அறப்புறம்காவல் அனைவர்க்குமுரித்தே | 73 |
1.74 நாடுகாவல்
மற்றைக் காவல் கொற்றற்கு உரித்தே | 74 |
1.75 தூதில் பிரிவு
வேதமாந்தர் வேந்தர் என்று இருவர்க்கும்
தூது போதல் தொழில் உரித்து ஆகும் |
75 |
1.76 பிரிவில் சிறப்பு
சிறப்புப் பெயர் பெறில் செப்பிய இரண்டும்
உறற்குரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும் |
76 |
1.77 துணைவயில் பிரிவு
உதவி அந்தணர் ஒழிந்தோர்க்கு உரித்தே | 77 |
1.78 யாவர்க்கும் உரிய பிரிவு
பரத்தையில் பிரிவும் பொருள்வயில் பிரிவும்
உரைத்த நால்வர்க்கும் உரிய ஆகும் |
78 |
1.79 நில மக்களுக்கு உரிய பிரிவு
இழிந்தோர் தமக்கும் இவற்றுண் மேம்பட்டவை
ஒழிந்தனவாம் என மொழிந்தனர் புலவர் |
79 |
1.80 தலைமகன் பிரிவு இயல்
கல்வி முதலா எல்லா வினைக்கும்
சொல்லி அகறலும் சொல்லாது அகறலும் உரியன் கிழவோன் பெருமனைக் கிழத்திக்கு |
80 |
1.81 ஓர் பிரிவு வகை
சொல்லாது அகலினும் சொல்லும் பாங்கிக்கு | 81 |
1.82 மற்றோர் பிரிவு வகை
குறிப்பின் உணர்த்தலும் பெறற்கரும் கிழத்திக்கு | 82 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்