அகப்பொருள் விளக்கம்
1.57 களவுவழி கற்புப் புணர்ச்சியில் ஓர் சிறப்பு
அவற்றுள்
களவின் வழிவந்த கற்பின் புணர்ச்சி கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே உடன்போய வரைதலும் உண்மையான |
57 |
1.58 கற்பில் தலைவன்கண் நிகழ்வு
மறையில் புணர்ச்சியும் மன்றப் புணர்ச்சியும்
இறைவற்கு எய்தல் உண்டு இருவகை கற்பினும் |
58 |
1.59 அத்தலைவன் கண் நிகழ்வுக்கு உரியர்
காதல் பரத்தையர் காமக் கிழத்தியர்
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தி என்று அன்னவர் உரியர் அவை இரண்டிற்கும் |
59 |
1.60 இவருள் களவில் புணர்ச்சிக்கு உரியோர்
அவருள்
காதல் பரத்தையர் களவிற்கு உரியர் |
60 |
1.61 மன்றப் புணர்ச்சிக்கு உரியோர்
ஒழிந்தோர் மன்றப் புணர்ச்சிக்கு உரியர் | 61 |
1.62 கற்பில் பிரிவு
பரத்தையின் பிரிதல் ஓதற்குப் படர்தல்
அருள்தகு காவலொடு துதில் ககறல் உதவிக்கு ஏகல் நிதியில் கிகத்தல் என்று உரைபெறு கற்பில் பிரிவு அறுவகைத்தே |
62 |
1.63 பரத்தையின் பிரிதல்
அயன்மனைப் பிரிவயற் சேரியின் அகற்சி
புறநகர்ப் போக்கு இவை புரவலர்க்கு உரிய பரத்தையின் பிரியும் பருவத்தான |
63 |
1.64 அயன்மனைப்பிரிவு
கெழீஇய காமக் கிழத்தியர் பொரட்டாத்
தழீஇய அயல்மனைத் தலைவன் பிரியும் |
64 |
1.65 அயல்சேரிப்பிரிவு
பின்னர் வரைந்த பெதும்பையும் பரத்தையும்
இன்னியல் விழவும் ஏதுவாக அவன் அயல் சேரியின் அகலும் என்ப |
65 |
1.66 புறநகர் போக்கு
விருந்தியல் பரத்தையை பெருந்தேர் மிசைகொண்டு
இளமரக்காவின் விளையாடற்கும் புனல் ஆடற்கம் புறநகர்ப் போகும் |
66 |
1.67 தலைவியின் ஊடல் களம்
ஊடல் அவ்வழிக் கூடும் கிழத்திக்கு | 67 |
1.68 உடல் தணி வழி
கொளை வல் பாணன் பாடினி கூத்தர்
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர் பாகன் பாங்கி செவிலி அறிவர் காமக்கிழத்தி காதற் புதல்வன் விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல் மருந்தாய் தீர்க்கும் வாயில்கள் ஆகும் |
68 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்