அகப்பொருள் விளக்கம்
1.95 பாணற்கு உரியன
வாயில் வேண்டலும் வாயின் ஓர்வித்தலும்
சேயிழை ஊடல் தீர்த்தலும் போய் உழி அவள் நலம் தொலைவு கண்டு அழுங்கலும் அவன்வயின் செல்ல விரும்பலும் சென்றவற்கு உணர்த்தலும் சொல்லிய கூற்றெனச் சொல்லும் கிழவோன் வரவு மீண்டு வந்து அரிவைக்கு உணர்த்தலும் அணிநலம் பெற்றமை அறியான் போன்றவட் பணிவொடு வினாதலும் பாணற்கு உரிய |
95 |
1.96 விறலிக்கு உரியன
செலவில் தேற்றலும் புலவியில் தணித்தலும்
வாயில் வேண்டலும் வாயில் நேர்வித்தலும் தெரியிழை விறலிக்கு உரிய ஆகும் |
96 |
1.97 கூத்தர்கு உரியன
செல்வம் வாழ்த்தலும் நல்லறிவு கொளுத்தலும்
கலன்அணி புணர்த்தலும் காமநுகர்பு உணர்த்தலும் புலவி முதிர் காலைப் புலங்கொள ஏதுவில் தேற்றலும் சேய்மை செப்பலும் பாசறை மேற்சென்று உரைத்தலும் மீண்டுவர உணர்த்தலும் கூற்றரு மரபின் கூத்தற்கு உரிய |
97 |
1.98 இளையோர்க்கு உரியன
மடந்தையை வாயில் வேண்டலும் வாயில்
உடன்படுத்தலும் அவள் ஊடல் தீர்த்தலும் கொற்றவற்கு உணர்த்தலும் குற்றேவல் செய்தலும் சென்று முன் வரைவு செப்பலும் அவன்திறம் ஒன்றிநின்று உரைத்தலும் வினைமுடி புரைத்தலும் வழிஇயல்பு கூறலும் வழிஇடைக் கண்டன மொழிதலும் இளையோர் தொழில் என மொழிப |
98 |
1.99 கண்டோர்கு உரியன
தீதுடைப் புலவி தீர்த்தலும் அவன்வரல்
காதலிக்கு உரைத்தலும் கண்டோர்க்கு உரிய |
99 |
1.100 பார்ப்பன பாங்கற்கு உரியன
இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலை எடுத்து உரைத்தலும் செலவு அழுங்குவித்தலும் செலவு உடன் படுத்தலும் பிறவும் எல்லாம் மறையோர்க்கு உரிய |
100 |
1.101 சூத்திரப் பாங்கற்கு உரியன
நன்மையின் நிறுத்தலும் தீமையின் அகற்றலும்
சொன்னவும் பிறவும் சூத்திரர்கு உரிய |
101 |
1.102 பாகற்கு உரியன
சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும்
வாயின் நேர்வித்தலும் வயங்கு துனி தீர்த்தலும் வினைமுடித்ததன்பின் வியன்பதி செய்த்து என இனைவோன் தேற்றலும் பாகற்கு இயல்பே |
102 |
1.103 பாங்கிக்கு உரியன
பிரிவுழி விலக்கலும் பிரிவு உடன்படுத்தலும்
பிரிவுழித் தேற்றலும் பிரிவுழி அழுங்கலும் பிறவும் உரிய இறைவளை பாங்கிக்கு |
103 |
1.104 செவிலிக்கு அசிவர்கு உரியன
முன்வரும் நீதியும் உலகியல் முறைமையும்
பின்வரும் பெற்றியும் பிறவும் எல்லாம் தெற்றெனக் கூறல் செவிலித் தாய்க்கும் உற்றறிவர்க்கும் உரியன ஆகும் |
104 |
1.105 காமக்கிழத்திக்கு உரியன
குடிபிறந்தோரை வடுப்படுத்து உரைத்தலும்
மனைவியைப் பழித்தலும் வாடா ஊடலுள் தலைவற் கழறலும் மனைவிக்கு அமைந்த ஒழுக்கமும் காமக் கிழத்திக்கு உரிய |
105 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்