அகப்பொருள் விளக்கம்
1.8 முதற்பொருள் வகை
நிலமும் பொழுதும் என முதல் இருவகைத்தே | 8 |
1.9 நிலத்தின் வகை
வரையே சுரமே புறவே பழனம்
திரையே அவைஅவை சேர்தரும் இடனே என ஈர் ஐவகைத்தனை இயல் நிலமே |
9 |
1.10 பொழுதின் வகை
பெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா
இரண்டு கூற்றது இயம்பிய பொழுதே |
10 |
1.11 பெரும்பொழுதின் வகை
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர் இளவேனில் வேனில் என்றாங்கு இருமூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே |
11 |
1.12 சிறுபொழுதின் வகை
மாலை யாமம் வைகறை எற்படு
காலை வெங்கதிர் காயு நண்பகல் எனக் கைவகைச் சிறுபொழுது ஐவகைத்து ஆகும் |
12 |
1.13 குறிஞ்சியில் பெரும்பொழுது சிறுபொழுது
கூதிர் யாமம் முன்பனி என்றிவை
ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும் |
13 |
1.14 பாலையில் பெரும்பொழுது சிறுபொழுது
வேனில் நண்பகல் பின்பனி என்று இவை
பான்மையின் உரிய பாலைதனக்கே |
14 |
1.15 முல்லையில் பெரும்பொழுது சிறுபொழுது
மல்கு கார் மாலை முல்லைக்கு உரிய | 15 |
1.16 மருதத்தில் சிறுபொழுது
இருள் புலர் காலை மருதத்திற்கு உரித்தே | 16 |
1.17 நெய்தலில் சிறுபொழுது
வெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே | 17 |
1.18 மருதத்தில் நெய்தலில் பெரும்பொழுது
மருதம் நெய்தல் என்றிவை இரண்டிற்கும்
உரிய பெரும்பொழுது இருமூன்றும்மே |
18 |
1.19 கருப்பொருள் வகை
ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு
ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண் தொழில் எனக் கருவி ஈர் எழு வகைத்து ஆகும் |
19 |
1.20 குறிஞ்சியின் கருப்பொருள் நிரல்
விறல்சேய் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர் குறத்தியர் கிளி மயில் மறப்புலி குடாஅடி கறைஅடி சீயம் சிறுகுடி அருவி நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்தள் ஆர் அம்தேக்கு அகில் அசோகம் நாகம் வேரல் ஐவனம் தோரை ஏனல் கறங்கிசை தொண்டகம் குறிஞ்சியாழ் குறிஞ்சி வெறிகொள் ஐவனம் வித்தல் செறிகுரல் பைந்தினை காத்தல் செந்தேன் அழித்தல் செங்கிழங்கு அகழ்தல் முழங்கு வீழ் அருவியொடு கொழுஞ்சுனை ஆடல் குறிஞ்சிக் கருப் பொருளே |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்