அகப்பொருள் விளக்கம்
1.21 பாலையின் கருப்பொருள் நிரல்
கன்னி விடலை காளை மீளி
இன்நகை எயிற்றி எயினர் எயிற்றியர் மறவர் மறத்தியர் புறவு பருந்து எருவை கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு குழி அறும்கூவல் குராஅ மராஅ உழிஞ்சில் பாலை ஓமை இருப்பை வழங்கு கதிக்கொண்டன செழும்பதி கவர்ந்தன பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம் பகல் சூறை ஆடல் பாலைக் கருப் பொருளே |
21 |
1.22 முல்லையின் கருப்பொருள் நிரல்
நெடுமால் குறும்பொறை நாடன் தோன்றல்
வடுவில் கற்பின் மனைவி கிழத்தி இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர் கான வாரணம் மான் முயல் பாடி குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை நிறங்கிளர் தோன்றி பிறங்குஅலர்ப் பிடவம் கொன்றை காயா மன்றலம் குருந்தம் தாற்று கதிர் வரகொடு சாமை முதிரை ஏற்றுப்பறை முல்லை யாழ் சாதாரி சாமை வரகு தரமுடன் வித்தல் அவைகளை கட்டல் அரிதல் கடாவிடல் செவிகவர் கொன்றைத் தீங்குழல் ஊதல் மூஇனம் மேய்த்தல் சேஇனம் தழுவல் குழுமிய குரவையொடு கான்யாறு என்று இவை முழுதுடல் ஆடல் முல்லைக் கருப் பொருளே |
22 |
1.23 மருதத்தின் கருப்பொருள் நிரல்
இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்
கெழுதகு கற்பின் கிழத்தி மனைவி உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர் மழலை வண்டு ஆன மகன்றில் நாரை அன்னம் போதா நன்னிறக் கம்புள் குருகு தாரா எருமை நீர்நாய் பெருகிய சிறப்பின் பேரூர் முதூர் யாறு மனைக்கிணறு இலஞ்சி தாமரை நாறுஇதழ் கழுநீர் நறுமலர்க் குவளை காஞ்சி வஞ்சி பூஞ்சினை மருதம் செந்நெல் வெண்ணெல் அந்நெல் அரிகிணை மன்றன் முழவம் மருதயாழ் மருதம் மன்றணி விழாக்கோள் வயல் களைகட்டல் அரிதல் கடாவிடல் அகன்குளம் குடைதல் வருபுனல் ஆடல் மருதக் கருப்பொருளே |
23 |
1.24 நெய்தலின் கருப்பொருள் நிரல்
வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன்
பரும அல்குல் பரத்தி நுளைச்சி நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர் அளவர் அளத்தியர் அலைகடல் காக்கை சுறவம் பாக்கம் பெறல்அரும் பட்டினம் உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல் கண்டகக் கைதை முண்டகம் அடம்பு கண்டல் புன்னை வண்டுஇமிர் ஞாழல் புலவு மீன் உப்பு விலைகளில் பெற்றன நளிமீன் கோட்பறை நாவாய் பம்பை விளரியாழ் செவ்வழி மீன் உப்புப் படுத்தல் உணங்குஅவை விற்றல் மீன் உணக்கல் புள் ஓப்பல் நெடுங்கடல் ஆடல் நெய்தல் கருப்பொருளே |
24 |
1.25 உரிப்பொருள் வகை
புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும்
இரங்கலும் இவற்றின் நிமித்தமும் எனஆங்கு எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே |
25 |
1.26 கைக்கோளின் வகை
அளவில் இன்பத்து ஐந்திணை மருங்கில்
களவு கற்பு என இரு கைக்கோள் வழங்கும் |
26 |
1.27 களவுப் புனர்ச்சி வகை
இயற்கைப் புணர்ச்சி இடம்தலைப்பாடு
பாங்கற் கூட்டம் பாங்கியிற் கூட்டம் என்று உணர்த்திய களவில் புணர்ச்சி நால் வகைத்தே |
27 |
1.28 கைக்கிளை இயலும் காலம்
மெய்க்கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சிமுன்
கைக்கிளை நிகழ்தல் கடன் என மொழிப |
28 |
1.29 கைக்கிளை இ·தெனல்
அதுவே
காமம் சான்ற இளமையோள் வயில் குறிப்பறிகாறும் குறுகாது நின்று குறிப்படு நெஞ்சொடு கூறல் ஆகும் |
29 |
1.30 கைக்கிளை ஆற்றும் தலைமக்கள்
மறையோர் மன்னவர் வணிகர் சூத்திரர் எனும்
இறையோர் தத்தமக்கு எய்தும் மற்று அதுவே |
30 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்