அகப்பொருள் விளக்கம்
3.22 மீளுதலும் ஏனவையும்
மடந்தையை உடன் போய் வரைந்து மீடற்கும்
அவள்மனை வரைதற்கும் தன்மனை வரைதற்கும் இவை ஐந்தும் உரிய செவிலிக் கூற்று ஒழித்தே |
192 |
3.23 தன்மனை வரைதலின் வகை
வினாதல் செப்பல் மேவல் என்று இறைவன்
தனாதில் வரைதல்தான் மூவகைத்தே |
193 |
3.24 இதன் விரி
பணிமொழி நற்றாய் மணனயர் வேட்கையில்
செவிலியை வினாதலும் செவிலிக்கு இகுளை வரைந்தமை உரைத்தலும் வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும் தலைவி இல் வந்துழி தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நுமக்கு இயம்பு சென்று என்றலும் தானது முன்னே சாற்றியது உரைத்தலும் என்னும் இவ்வைந்து மின்னிலை வேலோன் மன்னிய தன் மனை வரைதலின் விதியே |
194 |
3.25 உடன்போய் வரைந்து மீளுதலின் விரி
ஆதி ஒன்று ஒழித்து அல்லன நான்கும்
மாதினியுடன் உடன்போய் வரைந்து மீடற்கு நீதியின் உரிய நினையும் காலை |
195 |
3.26 இதனில் மற்றோர் வகை
இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும்
ஒருவகை மீண்டு வரைதலின் விரியே |
196 |
3.27 உடன்போக்கு இடையீட்டின் வகை
போக்கு அறிஉறுத்தல் வரவு அறிஉறுத்தல்
நீக்கம் இரக்கமொடு மீட்சி என்று ஆங்கு உடன்போக்கு இடையீடு ஒருநால் வகைத்தே |
197 |
3.28 இதன் விரி
நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத்
தன் செலவு உணர்த்தி விடுத்தலும் தலைமகள் தன் செலவு ஈன்றாளுக்கு உணர்த்தி விடுத்தலும் ஈன்றாட்கு அந்தணர் மொழிதலும் ஈன்றாள் அறத்தொடு நிற்றலின் தமர் பின் சேறலைத் தலைவி கண்டு தலைவர்க்கு உணர்த்தலும் தலைமகள் தன்னை தலைமகன் விடுத்தலும் தமருடன் செல்பவள் அவன்புற நோக்கிக் கவன்றாற்றலும் என நுவன்றவை ஆறும் உடன்போக்கு இடையீட்டிற்கு விரியாகும்மே |
198 |
3.29 அந்தணர் சான்றோர்முன் வரைதல்
தன்ஊர் வரைதலும் தன்மனை வரைதலும்
என்னும் இவ்விரண்டு ஒழித்து எவற்றினும் கிழவோன் அந்தணர் சான்றோர் முன்னிட்டு அருங்கலம் தந்து வரைதல் தகுதி என்ப |
199 |
4 கற்பியல்
4.1 கற்பின் இயல்
பொற்பமை சிறப்பில் கற்பெனப் படுவது
மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும் பிரிவும் பிறவும் மருவியது ஆகும் |
200 |
4.2 கற்பின் கிளவி நிரல்
இல்வாழ்க்கையே பரத்தையர் பிரிவே
ஓதல் பிரிவே காவல் பிரிவே தூதில் பிரிவே துணைவயிற் பிரிவே பொருள்வயிற் பிரிவே எனப் பொருந்திய ஏழும் வளமலி கற்பின் கிளவித்தொகையே |
201 |
4.3 இல்வாழ்க்கையின் வகை
கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி என்று ஈங்கு நால்வகைத்து ழ்ல்வாழ்க்கையே |
202 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்