அகப்பொருள் விளக்கம்
4.4 இதன் விரி
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தலும்
தலைவனைப் பாங்கி வாழத்தலும் தலைவியை வரையு நாளளவும் வருந்தாது இருந்தமை உரையாய் என்றலும் பெருமகளுக்கு உரைத்தலும் தலைவனை பாங்கி வரையு நாளளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும் மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புற உணர்த்தலும் வாழ்க்கை நன்றுஅறைதலும் மணமனைச் சென்று வந்த செவிலி பொற்றொடி கற்பியல் நற்றாய்க்கு உணர்த்தலும் நன்மனை வாழ்க்கைத் தன்மனை உணர்த்தலும் அன்னவர் காதல் அறிவித்தலும் எனும் இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே |
203 |
4.5 பரத்தையிற் பிரிவின் வகை
வாயில் வேண்டல் வாயில் மறுத்தல்
வாயினேர் வித்தல் வாயின் நேர்தல் என்று ஆய பரத்தையின் அகற்ச்சி நால் வகைத்தே |
204 |
4.6 ஊணர்த்த உணரும் ஊடல் கிளவி நிரல்
காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு
ஏது ஈதாம் இவ்விறைவிக்கு என்றலும் தனித்துழி இறைவி துனித்து அழுது இரங்கலும் ஈங்கு இது என் என பாங்கி வினாதலும் இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுக்குணர்த்தலும் தலவியைப் பாங்கி கழறலும் தலைவி செவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறலும் பரத்தையர் கண்டு பழித்தலும் பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலில் தலைவன் வரைவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதலும் வரவுணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும் முதிரா மென்முலை எதிர் கொண்டு பணிதலும் புணர்ச்சியின் மகிழ்வும் என்றுரைத்த பன்னொன்றும் உணர்த்த உணரும் ஊடற்கு உரிய |
205 |
4.7 ஊணர்த்த உணரும் ஊடல் கிளவி நிரல்
வெள்ளணி அணிந்து விடுத்துழிப் புள்ளணி
மலைவேல் அண்ணல் வாயில் வேண்டலும் தலைவி நெய்யாடியது இகுளை சாற்றலும் தலைவன் தன் மனத்து உவகை கூறலும் தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றலும் தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தலும் பாணன் முதலாப் பாங்கன் ஈறாப் பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி மறுத்தலும் விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண்டு இறையோன் மகிழ்தலும் இறைமகள் விருந்து கண்டு ஒளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச் சீறேல் என்றிவள் சீறடி தொழலும் இ·து எங்கையர் காணின் நன்று என்றலும் அங்கு அவர் யரையும் அறியேன் என்றலும் காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தலும் தாமக் குழலியை பாங்கி தணித்தலும் தனி யாளாகத் தலைமகன் ஊடலும் அறிவளைப் பாங்கி அன்பிலை கொடியை என்று இணர்தார் மார்பனை இகழ்தலும் பிறவும் ஊணர்த்த உணரா ஊடற்கு உரிய |
206 |
4.8 இதன் தொடர்
ஆயிழை மைந்தனும் ஆற்றாமையுமே
வாயிலாக வரவு எதிர் கோடலும் மணந்தவன் போனபின் வந்த பாங்கியோடு இணங்கிய மைந்தனை இனிதில் புகழ்தலும் தலைவனைப் புகழ்தலும் சிலைநுதல் பாங்கி மனைவியைப் புகழ்தலும்இனையவை பிறவும் அனைவகை மொழிந்த அதன்பாற்படுமே |
207 |
4.9 பரத்தையின் பிரிவின் விரி
மூன்று சூத்திரத்து மொழிந்தவை எல்லாம்
ஆன்ற பரத்தையின் அகற்சியின் விரியே |
208 |
4.10 பல்வகைப் பிரிவினுக்குரிய கிளவிகள்
பிரிவு அறிஉறுத்தல் பிரிவு உடன்படாமை
பிரிவு உடன் படுத்தல் பிரிவு உடன் படுதல் பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று ஒருமையிற் கூறிய ஒன்பது வகைய கல்வி முதலா எல்லாப் பிரிவும் |
209 |
5 ஒழிபியல்
5.1 ஒழிபின் இயல்
ஒழிபெனப் படுவ தகப்பாட்டு உறுப்பும்
வழுவும் அமைவும் தழுவியது ஆகும் |
210 |
5.2 அகப் பாட்டு உறுப்பு இவை
திணையே கைக்கோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் பயனே முன்னம் மெய்ப்பாடு எச்சம்பொருள்வகை துறை என்று அப்பால் ஆறிரண்டு அகப் பாட்டு உறுப்பே |
211 |
5.3 திணை-கைக்கோள்
அவற்றுள்
முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும் |
212 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்