அகப்பொருள் விளக்கம்
2.54 இதன் விரி
என்பொருள் பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்றலும்
நின் பொருள் பிரிவு உரை நீஅவட்கு என்றலும் நீடேன் என்று அவன் நீங்கலும் பாங்கி ஓடரிக்கண்ணிக்கு அவன் செலவு உணர்த்தலும் பூங்குழை இரங்கலும் பாங்கி கொடுஞ்சொல் சொல்லலும் தலைவி கொடுஞ்சொல் சொல்லலும் வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தலும் பருவம்கண்டு பெருமகள் புலம்பலும் இகுளை வம்பு என்றலும் இறைமகள் மறுத்தலும் அவர் தூதாகி வந்து அடைந்தது இப்போழுது என துணைவி சாற்றலும் பிணைவிழி ஆற்றலும் அவனவண் புலம்பலும் அவன்வருங்காலைப் பாகன் தன்னொடும் மேகம் தன்னொடும் சோகம் கொண்டு அவன் செல்லலும் பாங்கி வலம்புரி கேட்டு அவன் வரவு அறிஉறுத்தலும் வலம்புரி கிழத்தி வாழ்த்தலும் வந்துழி நினைத்தமை வினாதலும் நினைத்தமை செப்பலும் அனைத்தகை அவளை ஆற்றுவித்து இருந்தமை பாங்கி கூறலும் என ஆங்கு எழு மூன்றும் வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவின் விரி என விளம்பினர் தெரிமொழிப் புலவர் |
170 |
3 வரைவியல்
3.1 வரைவின் இயல்
வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும் கரணமொடு புணரக் கடி அயர்ந்து கொளலே |
171 |
3.2 வரைவின் கிளவி நிரல்
வரைவு மலிவே அறத்தொடு நிற்றல் என்று
உரையமை இரண்டும் வரைவிற்கு உரிய கிளவித் தொகை எனக் கிளந்தனர் புலவர் |
172 |
3.3 வரைவு மலிதல் வகை
வரைவு முயல் உணர்தல் வரைவு எதிர் உணர்த்தல்
வரைவு அறந்து மகிழ்தல் பராவல் கண்டு உவத்தல் என்று ஒருநான்கு வகைத்தே வரைவு மலிதல் |
173 |
3.4 இதன் விரி
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி
காதலிக்கு உணர்த்தலும் காதலி நற்றாய் உள்ள மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி தமர்வரை எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தலும் அவள் உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும் தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் தலைவி மணப்பொருட்டாகப் அணங்கைப் பராநிலை காட்டலும் கண்டோன் மகிழ்வும் என்று ஈட்டிய இருமூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம் விரி என விளம்பினர் மெய் உணர்ந்தோரே |
174 |
3.5 அறத்தொடுநிலையின் வகை
முன்னிலை முன்னிலைப் புறமொழி என்று ஆங்கு
அன்ன இருவகைத்து அறத்தொடு நிலையே |
175 |
3.6 தலைவி அறத்தொடு நிற்றல்
கையறு தோழி கண்ணீர் துடைத்துழிக்
கலுழ்தல் காரணம் கூறலும் தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை எய்தக் கூறலும் இகந்தமை இயம்பலும் இயல் பழித்து உரைத்துழி இயல்பட மொழிதலும் தெய்வம் பொறைகொளச் செல்குவம் எனறலும் இல்வயில் செறித்தமை சொல்லலும் செவிலி கனைஇருள் அவன் வரக் கண்டமைக் கூறலும் என்முறை இயம்பிய ஏழும் புனையிழைத் தலைவி அறத்தொடு நிலைதனக்கு உரிய |
176 |
3.7 பாங்கி அறத்தொடு நிற்றல்
எறிவளை வேற்றுமைக்கு ஏது வினாவினும்
வெறி விலக்கிய வழி வினாவினும் பாங்கி பூவே புனலே களிறே என்று இவை ஏதுவாகத் தலைப்பாடு இயம்பும் |
177 |
3.8 செவிலி அறத்தொடு நிற்றல்
மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வின்வுழி
முன்னிலை மொழியான் மொழியும் செவிலி |
178 |
3.9 அறத்தொடு நிற்றலின் விரி
என்றுடன் விளம்பிய எல்லாம் களவியல்
நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே |
179 |
3.10 களவு வெளிப்பாட்டின் வகை
போக்கே கற்பொடு புணர்ந்த கவ்வை
மீட்சி என்று ஆங்கு விளம்பிய மூன்றும் வெளிப்பாட்டுக் கிளவியின் வழிபடு தொகையே |
180 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பொருள் விளக்கம், Agaporul Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்