கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்
மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் |
தேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை |
மழையின்றி ஒன்றும் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை |
மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது |
மாலுமி இல்லாத ஓடம் செல்லாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் |
பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் |
முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு |
மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்
77. மேழிச் செல்வம் கோழைப் படாது |
கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது
78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு |
விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் |
பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்
80. மோனம் என்பது ஞான வரம்பு |
மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், நூல்கள், கொன்றை, வேந்தன், அவ்வையார், செல்வம், மெத்தையில், | , இலக்கியங்கள், இல்லை, அமிர்தம்