கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்
வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண் |
சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் |
மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்
83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் |
விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் |
வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல் |
யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு |
உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை |
தூய்மையான மனமுள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை |
அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு |
தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு
90. ஒத்த இடத்து நித்திரை கொள் |
பழக்கப்பட்ட, சமமான இடத்தில் படுத்து உறங்கு
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் |
படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், இல்லை, ஒழுக்கம், நூல்கள், வேந்தன், கொன்றை, அவ்வையார், இருப்பதே, | , இருக்காது, அழகு, ஒத்த, இலக்கியங்கள், அறிந்து, குறைந்து