ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள்
பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 109 ஒருவரிப்பாடல்கள் உள்ளன. உயர்ந்த ஒழுக்க விதைகள் மனத்தின் ஊன்றுவதற்காக அவ்வையாரல் எழுதப்பெற்றன.
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே. |
திருவாத்தி பூமாலையை அணிபவராகிய சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை வாழ்த்தி வாழ்த்தி வணங்குவோம் நாமே.
நூல்
உயிர் வருக்கம்
1. அறஞ் செய விரும்பு |
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
2. ஆறுவது சினம் |
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல் |
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
4. ஈவது விலக்கேல் |
ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.
5. உடையது விளம்பேல் |
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல் |
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல் |
கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.
8. ஏற்பது இகழ்ச்சி |
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
9. ஐயம் இட்டு உண் |
யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு |
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
11. ஓதுவது ஒழியேல் |
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஔவியம் பேசேல் |
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13. அஃகஞ் சுருக்கேல் |
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள், நூல்கள், ஆத்திசூடி, அவ்வையார், வேண்டும், | , பொருளை, ஏத்தி, இலக்கியங்கள், வாழ்த்தி