கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்
பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன
கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. |
கொன்றைப் பூமாலையை அணிந்திருக்கும் சிவபெருமானின் செல்வனாகிய வினாயகக் கடவுளை என்றும் போற்றி வணங்குவோம்.
நூல்
உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் |
தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று |
கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
3. இல்லறமல்லது நல்லறமன்று |
இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் |
பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு |
குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் |
ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் |
அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை
8. ஏவா மக்கள் மூவா மருந்து |
செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்
9. ஐயம் புகினும் செய்வன செய் |
பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு |
ஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் |
ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு |
பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு |
சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், கொன்றை, நூல்கள், வேந்தன், அவ்வையார், செய், எண்ணும், எழுத்தும், வேண்டும், | , கொள்வர், ஆதாரமான, தொழுவது, இலக்கிய, இலக்கியங்கள், என்றும், தெய்வம், மிகவும், நல்லது