கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்
ககர வருக்கம்
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை |
கணவன் சொல்லுக்கு மாறாக நடவாதிருத்தலே கற்பு
15. காவல்தானே பாவையர்க்கு அழகு |
காவல், கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற |
நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு
17. கீழோராயினும் தாழ உரை |
உன்னை விடத் தாழ்ந்தோராயினும் நயமாகப் பேசு
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை |
பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் |
பலவானாக இருந்தாலும், கர்வப் பேச்சு பேசாதே
20. கெடுவது செய்யின் விடுவது கருமம் |
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை |
தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும்
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி |
கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி |
தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு |
கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை |
எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், நூல்கள், கோள், அவ்வையார், கொன்றை, வேந்தன், காற்றுடன், | , செய்வோர், நெருப்பு, கற்பு, இலக்கியங்கள், கல்வி, அழகு, உதவி