கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்
தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை |
தந்தை சொல்லெ உயர்ந்த மந்திரம் போலாகும்
38. தாயிற் சிறந்த ஒரு கோயிலு மில்லை |
தாயே சிறந்த தெய்வமாகும்
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு |
கடல் கடந்தாவது பொருள் தேட வேண்டும்
40. தீராக் கோபம் போராய் முடியும் |
கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு |
கணவனுக்குத் துன்பம் வந்த போது, கவலைப் படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.
42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் |
எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் |
தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் தவமும் அழிந்து போம்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் |
பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு |
தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது |
பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல் |
நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், முடியும், நூல்கள், அவ்வையார், கொன்றை, வேந்தன், மடியில், பெண்கள், இனிது, | , பெண்டிர், உறங்கு, தெய்வம், கோபம், தந்தை, இலக்கியங்கள், மந்திரம், சிறந்த, வேண்டும், போய்