கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்
சகர வருக்கம்
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை |
மலடின்றி வாழ்தலே, குடும்பம் தழைப்பதற்கு அழகு
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு |
பெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு |
தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே
29. சீரைத்தேடின் ஏரைத் தேடு |
புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் |
எந்த நிலையிலும் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.
31. சூதும் வாதும் வேதனை செய்யும் |
சூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் |
தவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு |
காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் |
பொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் |
பொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் |
சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், அழகு, நூல்கள், வேந்தன், வேண்டும், கொன்றை, அவ்வையார், என்பவர், பெறுவர், இருந்தால், | , திரிவர், தவத்திற்கு, இலக்கியங்கள், சான்றோர், சுற்றத்திற்கு, கைதவம்