அவ்வையார் நூல்கள் - ஞானக்குறள்
ஒவ்வொருவரும் பெறவேண்டிய பேறுகள் நான்கு என்பது ஒருவகைக் கோட்பாடு. அறம், பொருள், இன்பம், வீடு என்பன அந்த நான்கு பேறுகள்.
இவற்றுள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பேறுகளைப் பெற்றுத் துய்க்கும் வழிகள் பற்றித் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் தெரிவிக்கிறது. வீடுபேறு நெறி பற்றித் தெரிவிக்கும் தனிநூல் ஔவையின் குறள். இந்நூலை திருமூலரின் திருமந்திரத்தின் சுருக்கம் எனக் கூறுவர். சைவ சமயக் கருத்துக்களைக் கொண்டது. திருக்குறளைப் போலவே இந்த நூலும் மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்கள் கொண்ட 31 அதிகாரங்கள் இதில் உள்ளன. இதற்கு அவ்வையார் குறள் என்றும் பெயர் உண்டு.
திருக்குறள் கூறும் தவம், துறவு முதலானவை மக்கள் வாழ்வியலோடு தொடர்புடையவை, ஔவை குறள் கூறும் தவம் தன்னலம் பேணுவது ஆகும்.
- 1. வீட்டுனெறிப்பால்
- 1.மோட்சம் செல்லும் வழி
- 2. உடம்பின் பயன்
- 3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை
- 4. நாடி தாரணை
- 5. வாயுதாரணை
- 6. அங்கிதாரணை
- 7. அமுததாரணை
- 8. அர்ச்சனை
- 9. உள்ளுணர்வு
- 10. பத்தியுடைமை
- 11. அருள் பெறுதல்
- 2. திருவருட்பால்
- 12. நினைப்புறுதல்
- 13. தெரிந்து தெளிதல்
- 14. கலை ஞானம்
- 15.உருவொன்றி நிற்றல்
- 16. முத்தி காண்டல்
- 17. உருபாதீதம்
- 18. பிறப்பறுதல்
- 19.தூயவொளி காண்டல்
- 20. சதாசிவம்
- 21. குருவழி
- 22. அங்கியில் பஞ்சு
- 23. மெய்யகம்
- 24. கண்ணாடி
- 25. சூனிய காலமறிதல்
- 26. சிவயோக நிலை
- 3. தன்பால்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் -