கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்
நகர வருக்கம்
48. நல்இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் |
நல்லோர் நட்பு இல்லையேல், அல்லல் படுவோம்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை |
நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை |
சொன்ன சொல் தவறாது இருத்தலே, நிலையான கல்வி கற்றதற்கு அழகு
51. நீர்அகம் பொருந்திய ஊர்அகத்திரு |
நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி |
சிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்
53. நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு |
நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை |
நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.
55. நேரா நோன்பு சீர் ஆகாது |
மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் |
சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் |
சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை |
உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், நூல்கள், கொன்றை, அவ்வையார், வேந்தன், நோன்பு, மனம், | , முடியாது, கொன்று, ஆவர், இல்லை, கல்வி, இலக்கியங்கள், அல்லல், நாடு, சொல், வேண்டும்