ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள்
தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி |
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.
56. தானமது விரும்பு |
யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
57. திருமாலுக்கு அடிமை செய் |
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.
58. தீவினை அகற்று |
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் |
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
60. தூக்கி வினை செய் |
ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.
61. தெய்வம் இகழேல் |
கடவுளை பழிக்காதே.
62. தேசத்தோடு ஒத்து வாழ் |
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.
63. தையல் சொல் கேளேல் |
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
64. தொண்மை மறவேல் |
பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
65. தோற்பன தொடரேல் |
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள், நூல்கள், அவ்வையார், ஆத்திசூடி, | , இலக்கியங்கள், செய்