ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள்
ககர வருக்கம்
32. கடிவது மற |
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
33. காப்பது விரதம் |
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
34. கிழமைப் பட வாழ் |
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.
35. கீழ்மை அகற்று |
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
36. குணமது கைவிடேல் |
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
37. கூடிப்பிரியேல் |
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.
38. கெடுப்பது ஒழி |
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
39. கேள்வி முயல் |
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்.
40. கைவினை கரவேல் |
உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
41. கொள்ளை விரும்பேல் |
பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி |
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).
43. கௌவை அகற்று |
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள், நூல்கள், ஆத்திசூடி, அவ்வையார், | , கைவிடேல், இலக்கியங்கள், அகற்று