ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள்
மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல் |
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் |
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல் |
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
91. மீதூண் விரும்பேல் |
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
92. முனைமுகத்து நில்லேல் |
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.
93 மூர்க்கரோடு இணங்கேல் |
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
94. மெல்லி நல்லாள் தோள் சேர் |
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
95. மேன் மக்கள் சொல் கேள் |
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
96. மை விழியார் மனை அகல் |
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
97. மொழிவது அற மொழி |
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.
98. மோகத்தை முனி |
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள், நூல்கள், அவ்வையார், ஆத்திசூடி, | , இலக்கியங்கள்