ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள்
உயிர்மெய் வருக்கம்
14. கண்டு ஒன்று சொல்லேல் |
கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
15. ஙப் போல்வளை |
'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
16. சனி நீராடு |
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
17. ஞயம் பட உரை |
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.
18. இடம் பட வீடு எடேல் |
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
19. இணககம்அறிந்து இணங்கு |
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
20. தந்தை தாய்ப் பேண் |
உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
21. நன்றி மறவேல் |
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
22. பருவத்தே பயிர் செய் |
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
23. மண் பறித்து உண்ணேல் |
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே
லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
24. இயல்பு அலாதன செயேல் |
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25. அரவம்ஆடேல் |
பாம்புகளை பிடித்து விளையாடாதே.
26. இலவம் பஞ்சில் துயில் |
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.
27. வஞ்சகம் பேசேல் |
படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே.
28. அழகு அலாதன செயேல் |
இழிவான செயல்களை செய்யாதே.
29. இளமையில் கல் |
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை(இலக்கணத்தையும், கணிதத்தையும்)
தவறாமல் கற்றுக்கொள்.
30. அரனை மறவேல் |
தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.
31. அனந்தல் ஆடேல் |
மிகுதியாக துங்காதே.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள், நூல்கள், ஆத்திசூடி, வேண்டும், அவ்வையார், செய்யாதே, | , செயேல், மறவேல், என்னும், இலக்கியங்கள், அலாதன