திருக்குறள் - 64.அமைச்சு
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட(து) அமைச்சு. |
631 |
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ(டு) ஐந்துடன் மாண்ட(து) அமைச்சு. |
632 |
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. |
633 |
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல(து) அமைச்சு. |
634 |
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
அறனறிந்து ஆறமைந்த சொல்லாள்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. |
635 |
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
மதிநுட்பம் நூலோ(டு) உடையார்க்(கு) அதிநுட்பம் யாஉள முன்னிற் பவை. |
636 |
இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்(து) இயற்கை அறிந்து செயல். |
637 |
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
அறிகொன்(று) அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். |
638 |
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும்.
பழுதென்னும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். |
639 |
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பா(டு) இலாஅ தவர். |
640 |
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
64.அமைச்சு - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - அமைச்சு, அமைச்சன், செய்யும், வல்லவன், அறிந்து, அறிந்தவனாய், இருந்தாலும், எழுபது, ஆராய்ந்து, செய்வர், பிரித்தலும், காலமும், கருவியும், செயலும், literature, இலக்கியங்கள், வழிகளை