முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு

9. நல்கூர்ந்த பத்து
81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று |
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும்,முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்.
82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று |
மிகமூத்தான் காமத்திற் றுய்க்கும் நுகர்ச்சிவறுமையுறும்.
83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று |
தன்னைச் செறுத்தொழுகுவானைச்சென்றடைதல் வறுமையுறும்.
84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று |
பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும்காமவின்பம் வறுமையும்.
85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று |
தன்மேல் அன்பால் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவிவறுமையுறும்.
86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று |
மூத்த உடம்பினை யுடையான்அணியுமணி வறுமையுறும்.
87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று |
தன்சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல்வறுமையுறும்.
88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று |
மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச்சென்று நண்ணுதல் வறுமையுறும்.
89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று |
மதியாதார்முன் வெகுளும்வெகுட்சி வறுமையுறும்.
90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று. |
தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசைவறுமையுறும்.
10. தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான் |
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன் பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்.
92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான் |
ஆக்கத்தை வேண்டுவோ னொருவன் தனக்குப் பல புகழ் வரும்செய்கை களையான்.
93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான் |
ஒன்றனைக் கற்றல் விரும்புவான்தன்னைக் கற்பிக்கும் ஆசிரியற்குச் செய்யும் வழிபாடுஒழியான்.
94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான் |
பிறப்புக் கெடுத்துத்தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன் தவஞ்செய்தல்ஒழியான்.
95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான் |
வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன்தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.
96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான் |
அளவுமிக்க பொருள் வேண்டுவோன்முயற்சி வருத்தமென நீக்கான்.
97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான் |
இன்பத்தை விரும்பிய ஒருவன்துன்பத்தைத் துன்பமென்று களையான்.
98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான் |
துன்பத்தை விரும்பிய ஒருவன்இன்பத்தை இன்பமென்று களையான்.
99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான் |
குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்.
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான். |
காமத்தை விரும்பிய ஒருவன்குறிப்பறிதல் ஒழியான்.
முதுமொழிக்காஞ்சி முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு, வேண்டுவோன், தண்டான், நல்கூர்ந், தன்று, வறுமையுறும், கூர்ந்தன்று, விரும்பிய, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, பதினெண், களையான், காஞ்சி, முதுமொழிக், துன்பம், கற்றல், ஒழியான், இன்பம், ஆர்கலியாற், ஆர்கலி, பத்து, சங்க, யுலகத்து, மக்கட், எல்லா, சூழப்பட்ட, கெல்லாம், காமம்