ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

மன்ற முதுமரத்து ஆந்தை குரல்இயம்பக் குன்றனம் கண்ணிக் குறும்(பு)இறந்து - சென்றவர் கள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்(து) ஒள்ளிய தும்மல் வரும். |
41 |
மலையிடத்தினை நெருங்கிச் சென்று பாலைநிலத்தூர் பலவற்றைக் கடந்து (பொருள்வயிற்) பிரிந்த நந்தலைவர் மன்றின் கண்ணுள்ள ஆலமரத்தில் வாழும் ஆந்தையானது ஒலிக்க அடிக்கடி நலமிகுந்த தும்மலானது (நம்மிடத்துத்) தோன்றாநின்றதாதலின் களவின் கண் நம்மாட்டு அவர் கொண்ட கடுங்காதல் போன்று இஞ்ஞான்றுங் கொண்டு மீள்வர்போற் காண்கின்றது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
பூங்கணிடம் ஆடும் கனவும் திருந்தின ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம்நினைப்ப வீங்கிய மெள்தோள் கவினிப் பிணைதீரப் பாங்கத்துப் பல்லி படும். |
42 |
வானளாவிய குன்றுகளாகிய பாலை நில வழியே கடந்து சென்ற நங்காதலரை நாம் நினைத்த வளவிலே நம் அழகிய கண்களிலே இடக்கண்ணானது துடித்தாடாநின்றது நாம் காண்கின்ற கனவுகளும் நற்பொருளுடையனவாயுள்ளன அவற்றால் பூரித்த நம் மெல்லிய தோள்கள் அழகுற்று நோய் நீங்கும் வண்ணம் பல்லியானது இணக்கமாக நிமித்தஞ் சொல்லாநின்றது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
4. மருதம்
பேதையர் என்று தமரைச் செறுபவோர் போதுறழ் தாமரைக்கண் ஊரனை நேர்நோக்கி வாய்முடி யிட்டும் இருப்பஏர் மாண்ழாய்! நோவதென் மார்(பு)யுஅறிம் இன்று. |
43 |
அழகிய மாட்சிமைப்பட்ட அணிகலன்களை யணிந்த தோழியே ! தமரை - தம்மவராகிய தலைமகனாரைக் (காணாவிடத்து அவராற் காதலிக்கப்படும் பரத்தையர் அறிவிலாரென்று திட்டி சினத்தை மேற்கொள்வர் ஒப்பற்ற தாமரைப் பூக்கள் இடையிட்டுக் கிடக்கும்படியான இடத்தினையுடைய மருத நிலத்தூர்த் தலைவனாகிய தலைமகனை எதிரே பார்த்தவளவில் அடங்கியும் இருப்பார்கள் (அங்ஙனம் வஞ்சகர்களாகிய அவர்களை நாடித் தலைமகனார் பிரிந்து சென்றது) இப்பொழுது மிகுதியும் மன நோயினைச் செய்யா நின்றது (அந்நோயின் கொடுமை வாய் விட்டுக் கூறுந்தரத்ததன்று) என்னெஞ்சமே (அதனைத்) தெரியுந் தரத்தது. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)
ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை உள்ளம்கொண்(டு) உள்ளானென்(று) யார்க்குரைக்கோ - ஒள்ளிழாய் அச்சுப் பணிமொழி உண்டேனோ மேனாள் ஓர் பொய்ச்சூள் எனஅறியா தேன். |
44 |
ஒளியினையுடைய அணிகலன்களையணிந்த தோழியே ! (களவுப்புணர்ச்சி நிகழ்ந்த) அக்காலத்திலே (கூறிய உறுதி மொழிகள்) பலரும் நினைவிலிருத்தக் கூடிய வஞ்சக மொழிகள் என்று தெரிந்து கொள்ள முடியாத யான் அக்காலத்தே (தலைமகன்) பணிவுடன் கூறிய அவ்வுறுதி மொழிகளை எழுத்துவடிவமாக (எழுதித்தரப்பெற்றுக்) கொண்டேனுமில்லை நிறமிக்க இதழ்களையுடைய தாமரைப் பூக்கள் இடையிட்டுக் கிடக்கும் ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனைப்பற்றி மனமுழுவதையு மொன்று சேர்த்து (என்னை) எண்ணுவதில்லை என்பதாக எவரிடத்தில் (குறை) கூறிக்கொள்ளட்டும்? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)
ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன் மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக் கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேல் பட்டஞ் சிதைப்ப வரும். |
45 |
போர்வன்மையினை கொண்டவனாகிய அரியசெல்வத்தினையுடைய நல்ல மருதநிலத்தூர்த்தலைவன் மேற்பாகத்தினிடத்தே சிறிய காயானது பொருந்தியுள்ள வஞ்சிச் செடியினைப் போன்று கணுக்கள் சிதறுதலால் (தோன்றும்படியான முத்தினைப் போன்ற தன் மகனை மார்பின் மீதே நெருக்கித் தழுவிப் பிடித்து மேலாடை சிதையும்படியாக (செய்பெருஞ் சிறப்பின்கண்ணே) காணப்பெறுகின்றனன். (என்று தோழி கூறி மகிழ்ந்தாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், தோழி, தாமரைப், ஐந்தினை, கூறினாள், எழுபது, பதினெண், கீழ்க்கணக்கு, பூக்கள், மொழிகள், இடையிட்டுக், கூறிய, தோழியே, தலைவனாகிய, தலைமகள், அழகிய, கடந்து, வரும், போன்று, தலைமகளிடங், சங்க, நாம், ஊரனை