முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.085.திருமுண்டீச்சரம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.085.திருமுண்டீச்சரம்

6.085.திருமுண்டீச்சரம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முண்டீசுவரர்.
தேவியார் - கானார்குழலியம்மை.
2928 | ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண் காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங் சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய |
6.085.1 |
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன், சினமிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவனும், அடியவர்களுக்கு அன்பனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடைமேல் கங்கையை ஏற்றவனும், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவனும், உலகங்கள் ஏழும் கலக்க முறாதபடி ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கழுத்திடத்தே சேர்த்தவனும் ஆவான். அவன் என் சிந்தை இடத்தவன் ஆயினான்.
2929 | கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக் ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண் விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண் திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய |
6.085.2 |
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் தலைவன் ஆவானும், பிரமன் தலைகளில் ஒன்றைக் கோபித்துக் கொய்தவனும், வேகமாகப் பாய்ந்த கங்கை வேகம் நீங்கிப் பரவிய தலையை உடைய ஒருத்தனும் உமையம்மை தங்கிய பங்கினனும், மூன்று வடிவங்களாய் நின்ற அரி, அயன், அரன் ஆகியோருடைய வடிவங்கள் ஒன்றாகித் தனது ஒருவடிவமாக அமைந்த பழையோனும், தேவர்களுக் கெல்லாம் மேலானவனும், மெய்யடியார் உள்ளத்தில் விரும்பி உறையும் தூயவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான்.
2930 | நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண் இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண் கன்பன்காண் ஆரழல தாடி னான்காண் செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய |
6.085.3 |
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் நம்புதற்குரியவனும், வெள்ளை விடை ஒன்றை ஊர்தியாகக் கொண்டவனும், தலைவனும், கீதத்தைப் பாடினவனும், இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்கள் உடையவனும், விரும்பி மனமுருகும் அடியார்களுடைய அன்பனும், அனலேந்தி ஆடினவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் அறிய ஒண்ணாதவனும், செம்பொன் அனையானும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான்.
2931 | மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண் காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண் ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண் தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய |
6.085.4 |
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் மூவுருவாய் மூத்தவனும், மூவர்க்கும் முதல் ஆனவனும், உலகத்தோற்றத்திற்கு முன் ஆனவனும், உலக ஒடுக்கத்திற்குப்பின் ஆனவனும், வீடு பேறு ஆனவனும், உலகங்களைக் காப்பவன் ஆனவனும், உலகிற்குக் கண் ஆனவனும், இறந்துபட்ட பிரமவிட்டுணுக்களுடைய என்புக்கூடுகளை அணிந்தவனும், கயிலை மலையினனும், ஆக்கந்தருபவனும், ஆன்ஐந்தில் விரும்பி மூழ்குபவனும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அறியமுடியாத அழற்பிழம் பாய்த் தோன்றிய தேவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.
2932 | கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண் மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண் ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண் தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய |
6.085.5 |
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் காட்டில் உறைபவனும், வேடனாகிப் பார்த்தனொடு பொருதவனும், கனல் ஆட வல்லவனும், மானைக் கையில்ஏந்தியவனும், நான்கு மறைகளாகவும் ஆனவனும், வலிய இடபமொன்றை ஏற வல்லவனும், பலவகை உடம்புகளாயும் நிற்பவனும், சீவான்மாக்களின் உயிர்க்குயிரானவனும், சொல் ஆனவனும் சொற்பொருள் உணர்வு ஆனவனும், தன்னை உணர்ந்தார்க்கு எக்காலத்தும் தேனாய் இனிப்பவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.
2933 | உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண் புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப் நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய |
6.085.6 |
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் உயிரோடு உடங்கியைந்து நின்றவனும், எல்லா உறவினருமாய் ஆனவனும், ஓரிடமும் எஞ்சுதலில்லா வகை எவ்விடத்தும் நிறைந்து நின்றவனும், அழிவில்லாதவனும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனும், நல்ல தவவேடங் கொண்டவனும், சரணடைந்த பிரமசாரிக்காக அவனைக் கிட்டிய பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.
2934 | உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய |
6.085.7 |
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன், மெய்யுணராத தக்கனுடைய வேள்விக்கண் திரட்டி வைக்கப்பட்ட திரவியங்களை உருண்டோட உதைத்தவனும், அருக்கனைத் தொடர்ந்து சென்று அவன் பற்களை எல்லாம் தகர்த்தவனும், தக்கனுடைய தலையைக் கொய்த தலைவனும், மலைமகளாகிய உமையம்மையை மிக இகழ்ந்தவராய், மாட்சிமைப்பட்டவராய்த் தம்மை மதித்து வேள்விக்கண்வந்து அவியுண்டாருமாகிய வலிமைமிக்க தேவர்களொடு அவர்தம் அறியாமை முழுவதையும் அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.
2935 | 2737.நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண் ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி |
6.085.2 |
அடியார்க்கு அன்பனாய், தன்னிடம் அன்பு இல்லாத கீழ்மக்களை நினைத்துக் கூசி அகல்பவனாய், தன்னை வணங்குதற்கு நாணாதவர் மனத்தின் கண் எளிமையாய்த் தங்கும் இளையவனாய், அழகிய மணம் கமழும் கொன்றையை அணிந்தவனாய், பார்வதி பாகனாய், தேவர்கள் எப்பொழுதும் வணங்கித் துதிக்கும் எழிலாரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
2936 | அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம் மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங் செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே. |
6.085.10 |
அடியார்களுடைய அல்லல்களை யெல்லாம் நீக்கியவனும், அடைவதற்கு அரிய பொருளாய் நின்றவனும், மன்மதனது உடலை அழித்தவனும், மலைமகளாம் உமையம்மையின் மனம் நடுங்கவும் தேவர்கள் அஞ்சவும் கயிலை மலையை மதியாது வெகுண்டு ஓடி அதனைப் பறித்தெடுக்க முற்பட்டவனுடைய கைகளும் ஒளிவீசும் முடிகளை உடைய தலைகளும் கண்களும் பிதுங்கிச் செருக்குக்கெடுமாறு ஒறுத்தவனும், திருமுண்டீச்சரத்துக் கோயில் கொண்ட சிவலோகன் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுண்டீச்சரம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஆனவனும், சிவலோகன், சிந்தை, காண்அவனென், கோயில், சரத்து, திருமுண்டீச், மேயசிவலோகன், சிந்தையிடத்தவன், முண்டீச்சரத்தில், ஆயினன், கொண்டவனும், விரும்பி, நின்றவனும், ஆயினான், திருச்சிற்றம்பலம், வல்லவனும், திருமுறை, மலைமகளாம், அழித்தவனும், தேவர்கள், எழிலாரும், எப்பொழுதும், மூவர்க்கும், தக்கனுடைய, புரிந்தான், திருமுண்டீச்சரத்தில், திருமுண்டீச்சரம், மூவுருவாய், சுடுகாட்டில், மூன்று, மனமுருகும், என்றும், அடியார்களுடைய, தலைவனும், அன்பனும்