முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.087.திருச்சிவபுரம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.087.திருச்சிவபுரம்

6.087.திருச்சிவபுரம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2946 | வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண் ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண் கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண் தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண் |
6.087.1 |
சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள் நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம் பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும், தன்னைக் கருதுவார் இதயத்திடத்து, தாமரை மலரிடத்து ஊறும் தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும் பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.
2947 | நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண் பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண் திக்கன்காண் செக்கரது திகழு மேனிச் |
6.087.2 |
சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான் உடை இல்லாதவனும், ஒளியுடைய பாம்பினை இடையிற்கட்டிய தலைவனும், பூதகணங்கள் ஆட அவற்றுடன் தானும் ஆடும் அழகனும், கொக்கிறகைச் சூடினவனும், துணை முலைகளை உடைய துடிபோலும் இடையாளுக்குச் சேரப்படும் இடமாந் தகுதிபெற்ற பொலிவையுடையவனும், சம்புடத்துக்கொண்ட வெள்ளிய திருநீற்றை உடையவனும், புவனங்கள் மூன்றிற்கும் உயிராய் நின்ற புகலிடமானவனும், செவ்வானம் போலத்திகழும் மேனியையுடையவனும் ஆவான்.
2948 | வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண் கம்பமதக் கரிபிளிற வுசெய் தோன்காண் அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண் செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண் |
6.087.3 |
சிவபுரத்து எம் செல்வனாம் சிவபெருமான் மணங்கமழும் மலர்களையணிந்த கூந்தலையுடைய உமையம்மையின் கணவனும், நான்முகனும் திருமாலும் காணமுடியாத வலிமையுடைய வனும், அசையுமியல்பினையுடைய மதயானை துன்பமிகுதியால் பிளிற, அதன் தோலை உரித்தவனும், கடலில் தோன்றிய நஞ்சை உண்டதால் இருண்ட கண்டத்தவனும், அம்பர் நகரத்துப் பெருங் கோயிலில் விரும்பி உறைபவனும், அயவந்தித்திருக்கோயிலில் உள்ளவனும், ஐயாறனும், செம்பொன்போல் திகழும் திருவுருவத் தவனும், ஆவான்.
2949 | 2751.துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத் நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் |
6.087.6 |
அறத்தை விரும்பாத குற்றமுடையவர்களைக் கைவிட்டவனாய், தேவர்கள் பலவாகத் துதித்துப்புகழுமாறு, எல்லா முதன்மைகளாலும் நிறைந்தவனாய், ஐம்பூதமும், அவற்றின் காரியமாகிய சராசரமும் ஆகியவனாய், தன்னைத் தியானிக்காத வஞ்சர்களை மறந்து திருவைந்தெழுத்தை ஓதுபவர்களுக்கு எக் காலத்திலும் சிறந்து உதவுபவனாய், திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.
2950 | தூயவன்காண் நீறு துதைந்த மேனி தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண் ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண் சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண் |
6.087.5 |
சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், தூயவனும், ஒளி விளங்கும் பளிங்கு போன்று, திருநீறு செறிந்த மேனிச் சோதியனும், தீயாய்த் திகழ்பவனும், கொடிய அசுரருடைய புரங்களை அழித்தவனும், சிறுமானைச் செங்கையிலேந்திய எம் பெருமானும், தாய் போன்றவனும், ஆரூரில் அம்மானாய்த் திகழ்பவனும், அடியவர்க்கு ஆரமுதம் ஆனவனும், மற்றையர்க்குத் தொலைவில் உள்ளவனும், பாதுகாவலான நெறியினனும் ஆவான்.
2951 | பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண் நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண் பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப் சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ் |
6.087.6 |
சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், விளைநிலமானவனும், விளைநிலத்தில் பயிரானவனும், பயிரை வளர்க்கும் மழையானவனும், அம்மழைத்துளியில் நின்ற நீரானவனும், தன் சடைமேல் நீர்நிற்கச் செய்தவனும், நிலவேந்தர் தம் ஆட்சியால் தாம் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைக்குமாறு ஓங்கும் புகழானவனும், பிறை போன்ற விளைந்த பல்லினை உடைய வெள்ளைப் பன்றியாகிய திருமால் இந்நகரின் நீங்காது பலநாளும் வழிபட்டு வணங்கும் புகழினனானவனும், சிறப்புடைய தேவர் எல்லாருக்கும் இன்பக் காரணன் ஆனவனும் ஆவான்.
2952 | வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண் மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண் கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண் செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த |
6.087.7 |
சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கொடியவர்க்குக் கொடியவனும், வெப்பமிகு கனலை ஏந்தியவனும், பரந்த கெடிலநதிக்கரை மீதுள்ள அதிகை வீரட்டானத்து அமர்ந்தவனும், மெய்ப்பொருளினனும், பொய்யர் மனத்துட் புகாதவனும், இனிமைமிகும் பாடல் வீணையோடு இயைந்து இனிமை மேலும் மிகுதற்குக் காரணமான விரலினனும், கையில் மழுவாயுதத்தை ஏந்தியவனும், காமனது உடல் எரிந்து சாம்பல் ஆக விழித்த கண்ணினனும், செம்மை நிறத்தவனும், திருமகளைத் திருமாலுக்கு ஈந்தவனும் ஆவான்.
2953 | கலையாரு நூலங்க மாயி னான்காண் மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற தலையாய மலையெடுத்த தகவி லோனைத் சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண் |
6.087.10 |
சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், கலைகள் எல்லாம் பொருந்திய வேதநூலும் அங்கங்களும் ஆனவனும், கலைகளிற் பொருந்திய கருத்துக்களாய் உள்ளவனும், தீர்த்த மாயும், மலையாயும், அலைகள் மடங்கி வீழ் கடல்கள் ஏழும் சூழ்ந்து நின்ற நிலவுலகமாயும், விண்ணாயும், நின்றவனும், சிறந்த கயிலாய மலையை எடுத்த பண்புகெட்ட இராவணன் வலியிழந்து விடுமாறு ஒரு விரலால் முடித்தவனும், மலையில் தோன்றி வளர்ந்த மட மகளாம் பார்வதியைத் தன் கூறாகக் கொண்டு ஆண்டவனும் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சிவபுரம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிவபெருமான், தெஞ்செல்வன், சிவபுரத், செல்வனாம், ஆனவனும், சிவபுரத்தெம், செல்வன், சிவபுரத்து, உள்ளவனும், தான்காண்சிவனவன்காண், பொருந்திய, சூழ்ந்து, ஏந்தியவனும், பலநாளும், திகழ்பவனும், வெள்ளைப், செய்தவனும், மறைகள், னான்காண்&, திருச்சிற்றம்பலம், திருமுறை, லேந்தி, கருதுவார், திருச்சிவபுரம், மொழியும், உறைபவனும், போன்றவனும்