முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.089.திருக்கொச்சைவயம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.089.திருக்கொச்சைவயம்

3.089.திருக்கொச்சைவயம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
3756 | திருந்துமா
களிற்றிள மருப்பொடு குருந்துமா குரவமுங் குடசமும் நிரந்துமா வயல்புகு நீடுகோட் பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் |
3.089.1 |
நெஞ்சமே! அழகான இளயானைத் தந்தங்களோடு, திரட்சியான இரத்தினங்களையும், சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு, குருந்து, மா, குரவம், குடசம் முதலிய மரவகைகளையும், மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி, பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி வாழ்வாயாக! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும்.
3757 | ஏலமா
ரிலவமோ டினமலர்த் கோலமா மிளகொடு கொழுங்கனி றாலியா வயல்புகு மணிதரு நீலமார் கண்டனை நினைமட |
3.089.2 |
மடநெஞ்சமே! மணம் கமழும் ஏலம், இலவங்கம் இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு, அழகிய மிளகுக் கொடிகளோடு, நன்கு பழுத்த கனிகள், கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக! நீ அஞ்சாதே.
3758 | பொன்னுமா
மணிகொழித்தெறிபுனற் கன்னிமார் முலைநலங் கவரவந் மன்னினார் மாதொடும் மருவிடங் முன்னைநோய் தொடருமா றில்லைகா |
3.089.3 |
நெஞ்சமே! பொன்னையும், பெரிய மணிகளையும் ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக் கொண்டு, கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்கள் அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி சூழ்ந்திருக்க, உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தையே எக்காலத்தும் பொருந்தி வாழ்வாயாக! அவ்வாறு வாழ்ந்தால் தொன்றுதொட்ட வரும் மலநோயானது இனி உன்னைத் தொடராது.நீ அஞ்சல் வேண்டா.
3759 | கந்தமார்
கேதகைச் சந்தனக் வந்துமா வள்ளையின் பவரளிக் கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் எந்தையா ரடிநினைந் துய்யலாம் |
3.089.4 |
நெஞ்சமே! மணம் பொருந்திய தாழை, சந்தனக் காடு என்பவற்றைச் சூழ்ந்து, வாழைத் தோட்டங்களின் பக்கமாக வந்து, மா மரத்தையும், வள்ளிக் கொடியின் திரளையும், மொய்க்கும் வண்டுகளையும் குவளையையும் மோதி ஓட, பூங்கொத்துக்கள் அணிந்த நீண்ட கூந்தலையுடைய பெண்கள் குதித்துக் கொண்ட நீராடும் காவிரி நதி சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளிய எந்தையாரான சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து நாம் உய்தி பெறலாம். நீ அஞ்சவேண்டா.
3760 | மறைகொளும்
திறலினா ராகுதிப் சிறைகொளும் புனலணிசெழும்பதி உறைவிட மெனமன மதுகொளும் இறைவன தடியிணை யிறைஞ்சிவாழ் |
3.089.5 |
நெஞ்சமே! வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள் இயற்றுகின்ற வேள்விப் புகை ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய,அந்நீர் தங்கிய கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதியாகிய, மதில்கள் விளங்குகின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை, தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்ட மனமுடையவரும், பிரமனின் சிரமறுத்தவருமான சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்கி வாழ்வாயாக! நீ அஞ்சவேண்டா.
3761 | சுற்றமு
மக்களுந் தொக்கவத் உற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா வுள்கினானோர் குற்றமில்லடியவர் குழுமிய நற்றவ மருள்புரி நம்பனை |
3.089.6 |
நெஞ்சமே! சிவனை நினையாது செய்த தக்கன் வேள்வியைத் தகர்த்து, அதற்குத் துணையாக நின்ற சுற்றத்தார்களையும், மற்றவர்களையும் தண்டித்து, தன் மனைவி தாட்சாயனி தக்கன் மகளான தோடம் நீங்க இமயமலை அரையன் மகளாதற்கும், தன் திருமேனியில் ஒரு பாகமாதற்கும் நினைத்தருளியவனும், ஒரு குற்றமில்லாத அடியவர்கள் குழுமிய வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து, திரிகரணங்களும் ஒன்றிச் சிவவழிபாடு செய்பவர்கட்கு அதன் பயனை அளித்து அருள்புரிகின்றவனுமாகிய சிவபெருமானை எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக!
3762 | கொண்டலார்
வந்திடக் கோலவார் கண்டவார் கழைபிடித் தேறிமா அண்டவா னவர்களு மமரரு உண்டமா கண்டனார் தம்மையே |
3.089.7 |
நெஞ்சமே! மேகங்கள் வந்தவுடன், அழகிய நீண்ட சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி, தங்கட்கு முன்னே காணப்படுகின்ற மூங்கில்களைப் பற்றி ஏறி, அந்தக் கரிய மேகங்களைக் கையால் பிடிக்கின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, அண்ட வானவர்களும், தேவர்களும், முனிவர்களும் வந்து பணிய, ஆலகால விடத்தினை உண்டு அவர்களைக் காத்த பெருமையையுடைய கழுத்தினையுடைய சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத் தியானிப்பாயாக! நீ அஞ்சல் வேண்டா.
3763 | அடலெயிற்
றரக்கனார் நெருக்கிமா உடல்கெடத் திருவிர லூன்றினா மடலிடைப் பவளமு முத்தமுந் பெடையொடுங் குருகினம் பெருகுதண் |
3.089.8 |
நெஞ்சமே! வலிமை வாய்ந்த பற்களையுடைய அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க, ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றினவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, ஒளிபொருந்திய வெள்ளியைப் போன்ற இதழ்களையுடைய பூக்களின் இடையிடையே பவளம் போன்ற செந்நிறப் பூக்களும், முத்துக்களைப் போன்ற அரும்புகளும், அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த புன்னைமரங்களின் பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ போற்றி வழிபடுவாயாக!
3764 | அரவினிற்
றுயிறரு மரியுநற் குரைகழ றிருமுடி யளவிட விரிபொழி லிடைமிகு மலைமகண் கரியநன் மிடறுடைக் கடவுளார் |
3.089.9 |
நெஞ்சமே! பாம்புப் படுக்கையில் துயிலும் திருமாலும், நல்ல பிரமதேவனும் சோர்வடையும்படி, ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், திருமுடியையும் அளவிடுதற்கு அரியவராய், பூக்களிலுள்ள மகரந்தமானது செம்பொன்துகளைப்போல உதிர்கின்ற சோலைகளுக்கு இடையில், மலைமகளான உமாதேவியார் மகிழும்படி, கரிய, அழகிய கழுத்தினை யுடையவராய்ச் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக் கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை நீ எப்பொழுதும் தியானிப்பாயாக!
3765 | கடுமலி
யுடலுடை யமணருங் இடுமற வுரைதனை யிகழ்பவர் நடுவுறை நம்பனை நான்மறை உடையவன் கொச்சையே யுள்கிவாழ் |
3.089.10 |
நெஞ்சமே! கடுக்காய்களைத் தின்னும் சமணர்களும், கஞ்சி உணவை உண்கின்ற புத்தர்களும், சொல்லுகின்ற சமயபோதனைகளை இகழ்பவர்களாகிய அடியவர்கள் நினைந்து போற்றும் நம் இறைவனும், தேவர்கள் தன்னைச் சுற்றி நின்று தொழ அவர்கள் நடுவுள் வீற்றிருந்தருளும் நண்பனும், நான்கு வேதங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் பணிந்து போற்ற இந்த உலகம் முழுவதையும் தனக்கு உடைமைப் பொருளாக உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தைத் தியானித்து நல்வாழ்வு வாழ்வாயாக! நீ அஞ்ச வேண்டா.
3766 | காய்ந்துதங்
காலினாற் காலனைச் ஆய்ந்துகொண் டிடமென விருந்தநல் ஏய்ந்ததொல் புகழ்மிகு மெழின்மறை வாய்ந்தவிம் மாலைகள் வல்லவர் |
3.089.11 |
தம் அடியவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் கோபித்துக் காலால் உதைத்து மாய்த்தவரும், காவலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தினைத் தாம் வீற்றிருந்தருளுதற்கு ஏற்ற இடமென ஆராய்ந்து எழுந்தருளியுள்ள நம் தலைவருமான சிவபெருமானிடம் பக்தி கொண்டு, பொருந்திய தொன்மையான புகழ்மிகுந்த, அழகிய, மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள் நன்மைதரும் வானுலகில் மேன்மையுடன் வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கொச்சைவயம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நெஞ்சமே, திருக்கொச்சைவயம், என்னும், கொண்டு, விரும்பி, வாழ்வாயாக, கொச்சையே, யஞ்சனீயே, காவிரி, வீற்றிருந்தருளும், திருத்தலத்தை, போற்றி, வேண்டா, சிவபெருமான், சிவபெருமானின், இத்திருத்தலத்தை, வீற்றிருந்தருளுகின்ற, அஞ்சவேண்டா, தக்கன், தியானித்து, அடியவர்கள், அந்தணர்கள், தியானிப்பாயாக, எப்பொழுதும், திருத்தலத்தில், குழுமிய, நம்பனை, சூழ்ந்த, திருவடிகளையும், கமழும், அடித்துக், முதலிய, டாறுசூழ், வயல்புகு, திருமுறை, திருச்சிற்றம்பலம், வயல்களில், கரைகளையுடைய, சந்தனக், பொருந்திய, அஞ்சல், சிவபெருமானை, தள்ளிக், அணிந்த