முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.088.திருவிளமர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.088.திருவிளமர்

3.088.திருவிளமர்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பதஞ்சலிமனோகரேசுவரர்.
தேவியார் - யாழினுமென்மொழியம்மை.
3745 | மத்தக
மணிபெற மலர்வதொர் மதிபுரை ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின அத்தக வடிதொழ வருள்பெறு கண்ணொடு வித்தக ருறைவது விரிபொழில் வளநகர் |
3.088.1 |
சிவபெருமான், தலையில் அழகுற விளங்கும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியுடையவர். கரத்தில் விளங்கும் நகங்களைப் போல தலையிலுள்ள இரத்தினங்கள் பிரகாசிக்கும் ஐந்தலைப் பாம்பைக் கங்கணமாகக் கட்டியவர். இத்தகைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது யாம் உய்யும்பொருட்டு, அருள்பெருகும் கண்களையுடைய உமாதேவியோடு வித்தகராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளுவது விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமை வாய்ந்த திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
3746 | பட்டில
கியமுலை யரிவைய ருலகினி ஒட்டில கிணைமர வடியின ருமையுறு சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை விட்டில கழகொளி பெயரவ ருறைவது |
3.088.2 |
சிவபெருமான், உலகில் பட்டாடையால் மூடப்பட்ட முலைகளையுடைய பெண்கள் இடுகின்ற பலிகளை ஏற்க, இசைத்துச் செல்கின்ற மரப்பாதுகைகளை அணிந்த திருவடிகளை உடையவர். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தர். தூய்மையையும், ஞானத்தையும் உணர்த்தும் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர். இடபவாகனத்தில் வீற்றிருப்பவர். சொல்லொணாப் பேரழகிய தோற்றப் பொலிவுடன் நடக்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
3747 | அங்கதி
ரொளியின ரரையிடை மிளிர்வதொ செங்கதி ரெனநிற மனையதொர் செழுமணி சங்கதிர் பறைகுழன் முழவினொ டிசைதரு வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் |
3.088.3 |
சிவபெருமான் அழகிய ஒளிவீசும் தோற்றப் பொலிவுடையவர். இடையிலே பாம்பைக் கச்சாகக் கட்டியவர். செந்நிற கதிர் போன்ற நிறமுடையவர். அக்கதிர்போல் ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ள மார்பினர். சங்குகள் ஒலிக்க, பறை, குழல், முழவு போன்ற வாத்தியங்கள் இசைக்கத் திருக்கூத்து ஆடுபவர். வெண்ணிற ஒளிவீசும் மழுப்படையை உடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
3748 | மாடம
தெனவளர் மதிலவை யெரிசெய்வர் பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் பாடல ராடிய சுடலையி லிடமுற வேடம துடையவர் வியனக ரதுசொலில் |
3.088.4 |
மாடம் போன்று உயர்ந்து விளங்கிய, தேவர்கட்குத் தீமை செய்த பகையசுரர்களின் மும்மதில்களைச் சிவபெருமான் எரித்தவர். தமது புகழ் பாடுவதையே பொருளாகக் கொண்ட வேதங்களை அருளிச் செய்தவர். தமது வரலாறுகள் அடியவர்களால் பாடலாகப் பாடப்படும் பெருமையுடையவர். சுடுகாட்டை அரங்கமாகக் கொண்ட திருநடனம் செய்யும் கோலத்தர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பெருமை மிக்க நகரானது திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
3749 | பண்டலை
மழலைசெ யாழென மொழியுமை கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை விண்டலை யமரர்கள் துதிசெய வருள்புரி வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் |
3.088.5 |
பண்ணின் இசையை ஒலிக்கும் யாழ்போன்ற இனியமொழி பேசும் உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருடைய, அசைகின்ற ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்துள்ள திருவடிகளைத் தொழும் அடியவர்களை வினை சாராது. விண்ணுலகிலுள்ள தேவர்கள் தொழுது போற்ற அருள்செய்யும் பெருங்கருணையாளர். பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவரும் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவருமான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளம் மிகுந்த நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
3750 | மனைகடொ
றிடுபலி யதுகொள்வர் மதிபொதி கனைகட லடுவிட மமுதுசெய் கறையணி முனைகெட வருமதி ளெரிசெய்த வவர்கழல் வினைகெட வருள்புரி தொழிலினர் செழுநகர் |
3.088.6 |
சிவபெருமான் தாருகவனத்தில் மனைகள்தொறும் சென்று பிச்சை ஏற்றவர். சந்திரனைத் தரித்த சடையுடையவர். ஒலிக்கின்ற கடலில் தோன்றி உயிர்களைக் கொல்ல வந்த விடத்தை அமுதமாக உண்டு கறை படிந்த அழகிய கண்டத்தர். போர் முனைப்பு உடன் எழுந்த பகையசுரர்களின் மும்மதில்களை எரித்தவர்.தம் திருவடிகளை வணங்குபவர்களின் வினைகெடும்படி அருள்புரியும் தொழிலுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் செழிப்பான நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
3751 | நெறிகமழ்
தருமுரை யுணர்வினர் செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பொறிகமழ் தருபட வரவினர் விரவிய வெறிகமழ் தருமல ரடைபவ ரிடமெனில் |
3.088.7 |
சிவபெருமான் சரியை முதலிய நான்கு நெறிகளாலும், ஆகமங்களாலும் மன்னுயிர்கட்கு மெய்யுணர்வு நல்கியவர். தம்மின் வேறாகாத ஞானமே வடிவான உமாதேவியை இடப்பாகமாகப் பொருந்தி விளங்கும் உருவுடையவர். திருக்கரங்களில் படைகள் பல ஏந்தியவர். புள்ளிகளையுடைய படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். கங்கை, பிறைச்சந்திரன், பாம்பு இவை கலந்த சடைமுடியின் மீது அடியவர்கள் புனையும் நறுமணமலர்கள் அடையப் பெற்றவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
3752 | தெண்கடல்
புடையணி நெடுமதி லிலங்கையர் பண்பட வரைதனி லடர்செய்த பைங்கழல் திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர் விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் |
3.088.8 |
தௌவான நீரையுடைய கடல்சூழ்ந்த, அழகிய நீண்ட மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண் படையும்படி, கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த திருவடிகளையுடையவர் சிவபெருமான். கடலையடையும் கங்கையை, சடையில் தாங்கியவர். விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர். இத்தகைய தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை பொருந்திய நகர் திரு விளமர் என்னும் திருத்தலமாகும்.
3753 | தொண்டசை
யுறவரு துயருறு காலனை அண்டல்செய் திருவரை வெருவுற வாரழ கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனி விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் |
3.088.9 |
சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலை அழியும்படி, மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த காலனை மாளும் படி செய்து, பின்னர்த் தம் ஆணையின்படி ஒழுகுமாறு செய்தவர் சிவ பெருமான். பிரமன், திருமால் என்னும் இருவரையும் அஞ்சுவிக்கக் காண்டற்கரிய அழல் வடிவானவர். மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டினங்கள் விரிந்த மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும் சோலைகளை உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
3754 | ஒள்ளியர்
தொழுதெழ வுலகினி லுரைசெயு கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவ பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் |
3.088.10 |
உலகத்து அறிவுடையார்களால் வணங்கி ஏத்துதற்குரிய மதங்கள் பல உண்டு. வடமொழி, தமிழ் முதலிய பல மொழிகளிலுமுள்ள உயர்ந்த பொருள்களைக் களவுசெய்து தம்மதாகக் திருச்சிற்றம்பலம் காட்டும் திருட்டுத்தனமிக்கவரும், தவம் அறிகிலாதவருமான சமண, புத்தர்தம் பள்ளியினர் கூறும் நெறிகளை மெய்யென்று கருதற்க. வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய, வளம் மிகுந்த நகரான திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை அன்போடு போற்றி வழிபடுங்கள்.
3755 | வெந்தவெண்
பொடியணி யடிகளை விளமருள் சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை அந்தணர் புகலியு ளழகம ரருமறை பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை |
3.088.11 |
பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண்நீற்றினை அணிந்த தலைவரை, திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை (விகிர்தர்), சிந்தையுள் இடையறாது இருத்தும்படி, அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப் பதிகத்தை ஓதுவோர் வினை அழியும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிளமர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிவபெருமான், என்னும், திருவிளமர், விளமரே, திருத்தலமாகும், வீற்றிருந்தருளும், இத்தகைய, வளநகர், திருச்சிற்றம்பலம், அணிந்த, விளங்கும், ஒளிவீசும், உடையவர், திருத்தலத்தில், எரித்தவர், பகையசுரர்களின், அணிந்துள்ள, போற்றி, முதலிய, செய்தவர், மிகுந்த, சடையினர், கண்டத்தர், விண்ணுலகிலுள்ள, ஒலிக்கும், மவர்வினை, வருள்புரி, ரிடமெனில், அருளிச், திருவடிகளை, இரத்தினங்கள், பாம்பைக், கட்டியவர், பிறைச்சந்திரனை, விரிபொழில், திருமுறை, மிளிர்வதொ, ருறைவது, திருவடிகளைத், தொழுது, பாகமாகக், கோலத்தர், தோற்றப், உமாதேவியை, வடிவினர், வீற்றிருந்தருளுவது, விரிந்த, மார்பினர்