முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.087.திருநள்ளாறு
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.087.திருநள்ளாறு

3.087.திருநள்ளாறு
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
இது சமணர் வாதின்பொருட்டுத் தீயிலிடுதற்கு போகமார்த்த பூண்முலையாளென்னும் பதிகம் உதயமாக இது தீயில் பழுது படாது என்னுந் துணிவுகொண்டு அருளிச்செய்த பதிகம்.
3734 | தளிரிள
வளரொளி தனதெழி குளிரிள வளரொளி வனமுலை நளிரிள வளரொளி மருவுநள் மிளிரிள வளரெரி யிடிலிவை |
3.087.1 |
இளந்தளிர் நாளுக்கு நாள் வளர்ந்து பசுமை அடைதல் போல், வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியின், குளிர்ந்த, வளரும் இள ஒளிவீசம் அழகிய முலையை மகிழ்ந்து தழுவப் பெறுதலால். குளிர்ந்த வளரொளி போன்று நள்ளாறர்தம் புகழ்கூறும், போகமார்த்த பூண் முலையாள் என்று தொடங்கும் (தி.1. ப.49. பா.1) திருப்பதிகம் எழுதப்பெற்ற ஓலையை, அவர் திருமேனி போல் பிரகாசிக்கின்ற நெருப்பிலிட்டால் அவை பழுது இல்லாதனவாம் என்பது சத்தியமே.
3735 | போதமர்
தருபுரி குழலெழின் சீதம தணிதரு முகிழிள நாதம தெழிலுரு வனையநள் மீதம தெரியினி லிடிலிவை |
3.087.2 |
மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்கப்பட்ட கூந்தலை உடைய அழகிய மலைமகளான உமாதேவியின் ஆபரணம் அணிந்து, குளிர்ச்சிதரும் சந்தனத்தை அணிந்த, அரும்பொத்த இளைய அழகிய முலைகளைத் தழுவுகின்றவரும், நாத தத்துவம் அழகிய உருவாகக் கொண்டவருமான திருநள்ளாறு இறைவரின் புகழ் கூறும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேலான அவருருவான நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.
3736 | இட்டுறு
மணியணி யிணர்புணர் கட்டுறு கதிரிள வனமுலை நட்டுறு செறிவயன் மருவுநள் இட்டுறு மெரியினி லிடிலிவை |
3.087.3 |
பூங்கொத்துக்களைப் போன்று, இரத்தினங்கள் வரிசையாகக் கோக்கப்பட்ட மாலையணிந்த உமாதேவியின், ஒளி வீசும் இளைய அழகிய முலைகளைத் தழுவும், கதிர்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள வயல்வளமிக்க திருநள்ளாறு இறைவனின் புகழ் உரைக்கும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அனல் வாதத்திற்கென வளர்க்கப்பட்ட நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.
3737 | மைச்சணி
வரியரி நயனிதொன் கச்சணி கதிரிள வனமுலை நச்சணி மிடறுடை யடிகணள் மெச்சணி யெரியினி லிடிலிவை |
3.087.4 |
மை பூசப்பெற்ற ஒழுங்கான செவ்வரி படர்ந்த அழகிய கண்களையுடைய தொன்மையாய் விளங்கும் உமா தேவியாரின் பரஞானம், அபரஞானம் ஆகிய பயன்தரும் கச்சணிந்த ஒளிரும் இளைய அழகிய முலையைத் தழுவும் நஞ்சணி கண்டத்தினனான திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அழகிய நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.
3738 | பண்ணியன்
மலைமகள் கதிர்விடு கண்ணியல் கலசம தனமுலை நண்ணிய குளிர்புனல் புகுதுநள் விண்ணிய லெரியினி லிடிலிவை |
3.087.5 |
பண்பாடமைந்த மலைமகளின் ஒளிவீசுகின்ற இரத்தினங்கள் பதித்த ஆபரணத்தை அணிந்த, அழகான கலசம் போன்ற இருமுலைகளையும் கூடும், குளிர்ச்சி பொருந்திய நீர் பாயும் திருநள்ளாற்று இறைவனின் நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை ஆகாயமளாவிய இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3739 | போதுறு
புரிகுழன் மலைமக சூதுறு தளிர்நிற வனமுலை தாதுறு நிறமுடை யடிகணள் மீதுறு மெரியினி லிடிலிவை |
3.087.6 |
மலர்களணிந்த பின்னிய கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியாரின் பொன்னாபரணம் அணிந்த, சூதாடும் வட்டை ஒத்த, தளிர்போன்ற நிறமுடைய அழகிய முலைகளோடு நெருங்கியிருத்தலால், பொன்போலும் நிறம் பெற்ற அடிகளாகிய நள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இயல்புடைய இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது, சத்தியமே.
3740 | கார்மலி
நெறிபுரி சுரிகுழன் சீர்மலி தருமணி யணிமுலை தார்மலி நகுதலை யுடையநள் ஏர்மலி யெரியினி லிடிலிவை |
3.087.7 |
அடர்த்தியான, பின்னப்பட்ட, சுருண்ட கார் மேகம் போன்ற கருநிறமான கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியின் அழகிய, சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணம் அணிந்த முலைகளோடு நெருங்கியிருக்கும், மண்டையோட்டை மாலையாக அணிந்துள்ள திருநள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை எழுச்சியுடன் எரியும் இந்நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3741 | மன்னிய
வளரொளி மலைமகள் பொன்னியன் மணியணி கலசம தன்னியல் தசமுக னெரியநள் மின்னிய லெரியினி லிடிலிவை |
3.087.8 |
நிலைபெற்று வளரும் ஞானவொளி பிரகாசிக்கும் மலைமகளான உமாதேவியின் தளிர்நிறத்தனவாய் மான்மதமாகிய கத்தூரியை அணியப்பெற்றனவாய், இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான ஆபரணத்தை அணிந்துள்ளனவாய், கலசத்தை ஒத்தனவாய் விளங்கும் இருமுலைகளைப் புணர்கின்றவரும், ஆணவமே இயல்பாக உடைய இராவணனைக் கயிலையின் கீழ் நெரியும்படி செய்தவருமான திருநள்ளாற்று இறைவரின் திரு நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை, மின்னலைப் போன்ற எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3742 | கான்முக
மயிலியன் மலைமகள் பான்முக மியல்பணை யிணைமுலை நான்முக னரியறி வரியநள் மேன்முக வெரியினி லிடிலிவை |
3.087.9 |
காட்டில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய உமாதேவியின், ஒளிவிடுகின்ற கனத்த பால்சுரக்கும் பருத்த இருமுலைகளைக் கூடுகின்றவரும், பிரமனும், திருமாலும் அறிவதற்கு அரியவராக விளங்குகின்றவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3743 | அத்திர
நயனிதொன் மலைமகள் சித்திர மணியணி திகழ்முலை புத்தரொ டமணர்பொய் பெயருநள் மெய்த்திர ளெரியினி லிடிலிவை |
3.087.10 |
அம்பு போன்று கூர்மையான கண்களையுடைய தொன்மையான மலைமகளான உமாதேவியின் பயன்தரும் அதிசயம் விளைவிக்கும், பலவகையான இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அணியப் பெற்றுள்ள இருமுலைகளோடு நெருங்கியிருப்பவரும், புத்தர்களாலும், சமணர்களாலும் உணரப்படாதவரும் பொய்யினின்று நீங்கியவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை, திரண்டு எரியும் இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3744 | சிற்றிடை
யரிவைதன் வனமுலை நற்றிற முறுகழு மலநகர் கொற்றவ னெதிரிடை யெரியினி சொற்றெரி யொருபது மறிபவர் |
3.087.11 |
சிறிய இடையினையுடைய உமாதேவியின் அழகிய முலைகளோடு நெருங்கியிருக்கும் திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதிய ஏடுகளை, நன்மை தரும் கழுமலநகரில் அவதரித்த திருஞானசம்பந்தன், பாண்டிய மன்னனின் எதிரில், நெருப்பின் நடுவில் இடுகின்றபோது கூறிய, இத்திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் துயரற்றவர்கள் ஆவர். மும்மலங்களினின்றும் நீங்கித் தூயராய் விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநள்ளாறு - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்பதிகம், பழுதிலை, ஏடுகளை, என்பது, சத்தியமே, ளாறர்தந், மெய்ம்மையே, லிடிலிவை, எழுதப்பட்ட, உமாதேவியின், மலைமகள், போற்றும், திருநள்ளாற்று, வனமுலை, பழுதில்லாதனவாகும், வளரொளி, மலைமகளான, எரியும், இறைவரின், திருநள்ளாறு, அணிந்த, இறைவனின், இரத்தினங்கள், திருநாமத்தைப், யிணையொடு, நெருப்பிலிட்டால், வளரும், கலவலின், யெரியினி, முலைகளோடு, இந்நெருப்பிலிட்டாலும், போன்று, பதிக்கப்பட்ட, விளங்கும், மணியணி, செறிதலின், பழுதில்லாதனவாம், இட்டாலும், போகமார்த்த, இந்நெருப்பில், நாமத்தைப், லெரியினி, ஆபரணத்தை, தளிர்நிற, கூந்தலையுடைய, திருமுறை, நெருங்கியிருக்கும், மேல்நோக்கி, திருச்சிற்றம்பலம், தனமுலை, ஆபரணம், கதிர்விடு, பயனுறு, யவையொடு, நயனிதொன், தழுவும், மெரியினி, குளிர்ந்த, யடிகணள், இட்டுறு, இறைவனைப், பதிகம், மருவுநள், பயன்தரும், கண்களையுடைய, முலைகளைத், கதிரிள