முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.002.திருப்பூந்தராய்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.002.திருப்பூந்தராய்

3.002.திருப்பூந்தராய்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
2812 | பந்து
சேர்விர லாள்பவ ளத்துவர் வாயி தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான் நிறைந் துவலஞ் செய்து மாமலர் புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றதுமே |
3.002.1 |
பந்து வந்தணைகின்ற விரல்களையும், பவளம் போன்று சிவந்த வாயினையும், குளிர்ந்த முழுமதி போன்ற முகத்தையும், அளவற்ற புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா தேவியோடு எப்பொருள்கட்கும் முதல்வராக விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய் ஆகும். அங்குத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நிறைந்து, வலம் வந்து, மனத்தால், நினைந்து, உடலால், வணங்கி, சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர். அத்தலத்தினை நாம் வணங்குவோமாக!
2813 | காவி
யங்கருங் கண்ணி னாள்கனித் தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள் தேவி யும்திரு மேனியோர் பாகமாய் பூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே |
3.002.2 |
நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும், கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும், ஒளிவீசுகின்ற முத்துப்போன்ற வெண்மையான பற்களையும், இறகுகளையுடைய பெண் அன்னப்பறவை போன்ற நடையையும், பின்னிய மென்மையான கூந்தலையும் உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ள இடம், மரபுப்படி சீகாழிக்கு வழங்கப்படுகின்ற பன்னிரு பெயர்களுள் ஆறாவதாகக் கூறப்படுகின்ற திருப்பூந்தராய். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை ஒத்த அந்தணர்கள் வசிக்கும் அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
2814 | பைய
ராவரும் அல்குன் மெல்லியல் தைய லாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம் தேற லூறலிற் சேறுல ராதநற் |
3.002.3 |
பாம்பின் படம் போன்ற அல்குலையும், பஞ்சு போன்ற மென்மையான அடியையும், வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும் உடைய தையலாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்ட எங்கள் இறைவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், செங்கழுநீர்ப் பூக்கள், தாமரைப் பூக்கள் இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத வயல்களையும், பொய்ம்மையிலாத அந்தணர்கள் வசிக்கும் சிறப்பையுமுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
2815 | முள்ளி
நாண்முகை மொட்டியல் கோங்கின் துள்ளி யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலை வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின் புள்ளி னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே |
3.002.4 |
தாமரைமொட்டு, கோங்கின் அரும்பு, ஊறும் தேனை உள்ளே கொண்ட இளநீர், மூவாமருந்தாகிய அமிர்தத்தை உள்ளடக்கிய பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திரு முலைகளையுடைய உமாதேவியாரை, திருநீறு பூசப் பெற்றமையால் வெள்ளிமலைபோல் விளங்கும் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், பறவைகள் அமைதியாய்த் துயில்கின்ற, மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
2816 | பண்ணி
யன்றெழு மென்மொழி யாள்பகர் பெண்ணி யன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம் கண்ணி யன்றெழு காவிச் செழுங்கரு புண்ணி யருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே |
3.002.5 |
பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற மென்மொழியாளாய், நிறைந்த கூந்தலையும், பசுந்தளிர் போன்ற மேனியையுமுடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம், வளையல்களை அணிந்த பெண்களின் கண்களைப் போன்ற நீலோற்பல மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையுடையதும், பசு புண்ணியங்கள், பதி புண்ணியங்களைச் செய்கின்றவர்கள் வசிக்கின்ற பதியுமாகிய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
2817 | வாணி
லாமதி போல்நுத லாள்மட பாணி லாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும் சேணி லாத்திகழ் செஞ்சடை யெம்மண்ணல் போணி லாநுழை யும்பொழிற் பூந்தராய் போற்றுதுமே |
3.002.6 |
ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையும், மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையும் வளமான முத்துக்களைப் போன்ற பற்களையும், பாட்டில் விளங்குகின்ற இனிய இசைபோன்ற மொழியினையும் உடைய பாவையாகிய உமா தேவியோடு, வானில் விளங்கும் நிலவு திகழ்கின்ற சிவந்த சடையையுடைய எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடமாவது, உயர்ந்த சிகரத்தையுடைய பெருங் கோயிலைச் சூழ்ந்து பிறைச்சந்திரன் நுழையும் சோலைகளையுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
2818 | காரு
லாவிய வார்குழ லாள்கயற் வாரு லாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய் நீரு லாவிய சென்னி யன்மன்னி போரு லாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே |
3.002.7 |
கார்மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலையும், கயல்மீன் போன்ற கண்களையும், மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற இடையையும், கச்சணிந்த மென்மையான கொங்கைகளையும் உடைய மலைமகளான உமாதேவியோடு, கங்கையைத் தாங்கிய முடியையுடைய சிவபெருமான் நிலை பெற்றிருக்கும் பதி, பன்னிரு திருப்பெயர்கள் கொண்டு தனக்குத்தானே ஒப்பாக விளங்கும் பெருமை மிகுந்த, போர்க்கருவிகள் பொருத்தப்பட்ட மதில்கள் சூழ்ந்த, சோலைகள் நிறைந்த திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
2819 | காசை
சேர்குழ லாள்கயல் ஏர்தடங் தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத் பெயராய்ப் பிறையையுணர்த்தலும் காண்க. பூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே |
3.002.8 |
காயாம்பூப் போன்ற கருநிறமுடைய கூந்தலையும், கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும், மூங்கில் போன்ற தோள்களையும், கதிர்வீசும் மென்மை வாய்ந்த கொங்கைகளையும், உடைய ஒளி பொருந்திய மலைமகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட அழகிய அகன்ற மார்பினையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுத்த இராவணனை அந்நாளில் அடர்த்த அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும் வழிபடுகிறவர்கள் வந்து சேர்கின்றதும், ஆகிய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
2820 | கொங்கு
சேர்குழ லாள்நிழல் வெண்ணகைக் பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய் மங்குல் வண்ணனு மாமல ரோனும் பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே |
3.002.9 |
மணம் பொருந்திய கூந்தலையும், ஒளி பொருந்திய வெண்ணிறப் பற்களையும், கொவ்வைக்கனி போன்ற வாயினையும், கொடி போன்ற அழகிய இடையையும் உடைய உமாதேவியைத் தன்னுடைய ஒரு பாகமாக வைத்துள்ள அழகிய மார்பினையுடையவராய், கார்மேக வண்ணனான திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அடிமுடியறியாது மயங்கும்படி படர்கின்ற தீயுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமான் எழுந்தருளும் இடம், வானம்வரை பொங்கிய ஊழி வெள்ளத்திலும் அழியாது மிதந்த நற்பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
2821 | கலவ
மாமயி லார்இய லாள்கரும் குலவு பூங்குழ லாள்உமை கூறனை வேறுரையால் அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள் புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே |
3.002.10 |
தோகை மயில் போன்ற சாயலையுடையவளாய்க், கரும்பு போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவளும், கதிர் வீசுகின்ற ஒளியுடைய நெற்றியுடையவளும், வாசனை பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளுமான உமா தேவியை ஒரு பாகமாக வைத்தவர் சிவபெருமான். கூறத்தகாத சொற்களால் பழித்துக் கூறும் புத்தர்களையும், சமணர்களையும் பிறக்கும்படி செய்தவன் அவனே. அப்பெருமானை மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டால் சிவபோகத்தைத் தருவான். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் சிவஞானிகள் போற்றும் அழகிய பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக.
2822 | தேம்பல்
நுண்ணிடை யாள்செழுஞ் சேலன பூம்பொ ழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும்என் றோம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை டாம்படி இவை ஏத்தவல் லார்க்குஅடை யாவினையே |
3.002.11 |
மெலிந்த சிற்றிடையையும், செழுமையான சேல்மீன் போன்ற கண்களையும் உடைய உமாதேவியோடு எங்கள் தலைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடன் விளங்குகின்ற அழகிய பதியான திருப்பூந்தராய். அதனை வணங்குவோம் என்று அத்திருத்தலப் பெருமையைப் போற்றி வளர்க்கின்ற முத்தமிழ், நான்மறை இரண்டிற்குமுரிய திருஞானசம்பந்தனின் சிவஞானம் ததும்பும் தமிழ்ப்பாமாலையாகிய இப்பதிகத்தினைத் தமக்குப் பயன்தர வேண்டி ஓதுபவர்களை வினைகள் வந்தடையா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூந்தராய் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்பூந்தராய், பூந்தராய், வணங்குவோமாக, சிவபெருமான், போற்றுதுமே, அத்திருத்தலத்தை, பொருந்திய, எழுந்தருளியுள்ள, நிறைந்த, கண்களையும், கூந்தலையும், விளங்கும், விரும்பி, உமாதேவியைத், கொண்டு, திருமேனியில், இடையையும், மென்மையான, பாகமாகக், எங்கள், வாயினையும், பன்னிரு, பற்களையும், சிவந்த, கயல்மீன், மென்மொழி, நான்மறை, யன்றெழு, விளங்குகின்ற, தலைவனான, உமாதேவியோடு, பொற்பதி, சேர்குழ, தீயுருவாய், பாகமாக, சோலைகளையுடைய, சோலைகள், பதியான, கொங்கைகளையும், மலைமகளான, சூழ்ந்த, முத்தமிழ், வசிக்கும், தேவியோடு, மேனியோர், நீலோற்பல, போன்று, சேர்விடம், திருமுறை, திருச்சிற்றம்பலம், ஒருபாகமாகக், இறைவன், கோங்கின், அரும்பு, மல்கிய, பூக்கள், அந்தணர்கள், மலரில், வீற்றிருக்கும், மலர்கள்