முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.113.சீகாழி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.113.சீகாழி

2.113.சீகாழி
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2692 |
பொடியிலங்குந் திருமேனி யாளர் புலியதளினர் அடியிலங்குங் கழலார்க்க ஆடும் மடிகள்ளிடம் இடியிலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக் கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. |
2.113. 1 |
திருநீறணிந்த திருமேனியர். புலித்தோல் உடுத்தவர். திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர். அவர் உறையுமிடம், இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப் பெருக்கு முத்துக்களை மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும்.
2693 |
மயலிலங்குந் துயர்மா அயலிலங்கப் பணிசெய்ய புயலிலங்குங் கொடையாளர் கயலிலங்கும் வயற்கழனி |
2.113. 2 |
மயக்கம் தரும் பிறவித்துயராகிய மாசினைப் போக்க எண்ணிய தொண்டர்கள் தான் வாழும் இடங்கள் எங்கும் பணிசெய்ய நின்ற சிவபிரான் உறையுமிடம், மேகம் போல வரையாது கொடுக்கும் கொடையாளர்களுடன் தேவதஒலிபரவும் சிறப்பினதாய, கயல்மீன்கள் தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப் பதியாகும்.
2694 |
கூர்விளங்குந் திரிசூல மார்விலங்கும் புரிநூலு நேர்விலங்கல் லனதிரை கார்விலங்கல் லெனக்கலந் |
2.113. 3 |
கூரிய முத்தலைச் சூலத்தை ஏந்தியவர். குழையணிந்த செவியினர். மார்பில் முப்புரிநூல் விளங்கும் மணவாளக் கோலத்தினர். அவருக்குரிய ஊர், மலைபோலக் கடல் அலைகள் வந்தலைக்கும் காழிப் பதியாகும்.
2695 |
குற்றமில்லார் குறைபாடு பெற்றநல்ல கொடிமுன் மற்றுநல்லார் மனத்தா கற்றுநல்லார் பிழைதெரிந் |
2.113. 4 |
குற்றம் இல்லாதவர். தம் குறைகளைக் கூறி வேண்டுபவருக்கு வரும் பழிகளைத் தீர்ப்பவர். விடைக்கொடியை உயர்த்தியவர். அப் பெருமானுக்குரிய இடம், நல்லவர், மனத்தால் இனியவர், வேதங்களைக் கற்றுணர்ந்து நல்லோர் செய்யும் பிழைதெரிந்து போக்கித் தலையளி செய்வோர் ஆகியவர்கள் வாழும் கடற்காழியாகும்.
2696 |
விருதிலங்குஞ் சரிதைத் எருதிலங்கப் பொலிந்தேறும் பொதிலங்கும் மறைகிளைஞர் கருதுகிள்ளைக் குலந்தெரிந்து |
2.113. 5 |
வெற்றியமைந்த புராண வரலாறுகளை உடையவர். விரிந்த சடையினர். எருது விளங்க அதன்மேல் பொலிவோடு அமரும் எந்தை. அவருக்குரிய இடம், பெருமை பொருந்திய வேதங்களைப் பயில்வோர் ஓதக்கேட்டு அதிலுள்ள பிழைகளைப் பலகாலும் கேட்டுப் பழகிய வாசனையால் கிளிக் குலங்கள் தெரிந்து தீர்க்கும் காழிப்பதியாகும்.
2697 |
தோடிலங்குங் குழைக்காதர் பீடிலங்குஞ் சடைப்பெருமை கோடிலங்கும் பெரும்பொழில் காடிலங்கும் வயல்பயிலும் |
2.113. 6 |
தோடும் குழையும் விளங்கும் காதினர். வேதங்களை அருளியவர். வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்து பெருமையோடு இலங்கும் சடைமிசைக் கங்கையைச் சூடியவர். அவ்வடிகட்கு இடம் பெரிய கிளைகளோடு கூடிய மரங்கள் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ளதும் செந்நெற்காடுகளை உடையவயல்களை உடையதுமான காழிப்பதியாகும்.
2698 |
மலையிலங்குஞ் சிலையாக தலையிலங்கும் புனற்கங்கை இலையிலங்கும் மலர்க்கைதை கலையிலங்குங் கணத்தினம் |
2.113. 7 |
மேருமலையை வில்லாகக் கொண்டு முப் புரங்களை எரித்து, அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள அடிகட்கு இடம், இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி ஆகியவற்றின் மணத்துடன் வேதம் வல்லமறையவர் கணம் வாழும் காழிப்பதியாகும்.
2699 |
முழுதிலங்கும் பெரும்பொருள் அழுதிரங்கச் சிரமுர தொழுதிரங்கத் துயர்தீர்த் கழுதும்புள்ளும் மதிற்புறம |
2.113. 8 |
உலகில் மாறுபாடுடையவனாய் வாழ்ந்த இராவணன் அழுது இரங்க, அவன் தலை மார்பு ஆகியன ஒடுங்க அடர்த்துப்பின் அவன் தொழுது இரங்கிய அளவில் அவனது துயர் தீர்த்தருளிய இறைவற்கு இடம் வண்டும் பறவைகளும் மதிற்புறத்தே வாழும் கடற்காழியாகும்.
2700 |
பூவினானும் விரிபோதின் மேவினானும் வியந்தேத்த தோவியங்கே யவர்க்கருள் காவியங்கண் மடமங்கையர் |
2.113. 9 |
நான்முகனும், தாமரைமலரில் வாழும் திருமகளை மருவிய திருமாலும் வியந்து போற்ற, அழலுருவாய் நீண்டுப்பின் அதனின் நீங்கி அவர்களுக்கு அருள்புரிந்த இறைவற்கு இடம், குவளை மலர் போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடற்காழியாகும்.
2701 | உடைநவின்
றாருடைவிட் முடைநவின் றம்மொழி மடைநவின்ற புனற்கெண்டை கடைநவின்றந் நெடுமாடம் |
2.113. 10 |
உடையோடும், உடையின்றியும் திரிபவரும், கடுமையான விரதங்களைத் தவமாக மேற்கொள்பவருமான புத்தர்சமணர்களின் நாற்றமுடைய மொழிகளையொழித்து உகந்த முதல்வன் இடம், கெண்டை மீன்கள் துள்ளிப் பாயும் நீர் நிறைந்த மடைகளோடு கூடிய வயல்கள் சூழ்ந்ததும், வாயில்களை உடைய உயர்ந்த மாடவீடுகளைக் கொண்டுள்ளதுமான காழிப்பதியாகும்.
2702 |
கருகுமுந்நீர் திரையோத உரகமாருஞ் சடையடி பெருகமல்கும் புகழ்பேணுந் விரகன்சொன்ன இவைபாடி |
2.113. 11 |
கரிய கடல் அலைகளின் ஓதநீர் நிறைந்த காழிப்பதியுள், பாம்பணிந்தவராய் விளங்கும் சடைகளை உடைய அடிகளின் அருளை உணர்ந்து ஓதுதலால் புகழ் பெருக வாழ்ந்து அன்பு செய்யும் தொண்டர்கள் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் சொன்ன இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆட அவர்களுடைய பாவங்கள் கெடும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 111 | 112 | 113 | 114 | 115 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீகாழி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காழியே, வாழும், விளங்கும், காழிப்பதியாகும், தொண்டர்கள், கடற்காழியாகும், கிடமாவது, நிறைந்த, காதினர், அவருக்குரிய, இறைவற்கு, செய்யும், பதியாகும், பணிசெய்ய, உறையுமிடம், திருச்சிற்றம்பலம், திருமுறை, அலைகளின், கொண்டு, வயல்கள், சீகாழி, காழிப்