முதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேர மன்னர் வரலாறு
சேர மன்னர் வரலாறு (History of Chera)
நம் தமிழ் நாட்டின் வரலாறு தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து இயன்று வருவது உலகறிந்த செய்தி; எனினும் அக்கால நிகழ்ச்சிகளை வரன்முறையாக அறிதற்கேற்ற நூல்களும் வேறு குறிப்புகளும் போதிய அளவில் கிடைக்காமையின், சங்க இலக்கியங்கள் எனப்படும் தொகை நூல்களின் பாட்டுகள் தோன்றிய காலத்திருந்து நாம் அறிந்து கொள்ளுதல் ஓரளவு இயலுகின்றது. அக் காலத்தைப் பொதுவாகச் சங்க காலம் என்பது பெருவழக்காய் உளது. அதனால், தமிழ் நாட்டு வரலாறு சங்க காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், இடைக் காலம், பாண்டிய சோழர் காலம், விசய நகர வேந்தர் காலம், முகமதிய ஐரோப்பியர் காலம், மக்களாட்சிக் காலம் என வகுத்துக் காணப்படுகிறது. ஆனால், இம் முறையில் வைத்துத் தமிழ்நாட்டு வரலாறு இன்னும் எவராலும் எழுதப்படவும் இல்லை ; அதற்குரிய முயற்சியும் இன்றுகாறும் உருவாகவுமில்லை. தமிழ் மக்கட்கு அறிவியல் வாழ்வில் உண்டான வீழ்ச்சிக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ?
- முன்னுரை
- துணை செய்த நூல்களின் நிரல்
- ஆங்கில முன்னுரை
- மதிப்புரை
சேர மன்னர் வரலாறு
- 1. சேரநாடு
- 2. சேரநாட்டின் தொன்மை
- 3. சேரர்கள்
- 4. பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
- 5. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- 6. பல்யானைச் செல்கெழு குட்டுவன்
- 7. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
- 8. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
- 9. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
- 10. செல்வக்கடுங்கோ வாழியாதன்
- 11. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- 12. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
- 13. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
- 14. யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
- 15. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- 16. சேரமான் வஞ்சன்
- 17. சேரமான் மாவண்கோ
- 18. சேரமான் குட்டுவன் கோதை
- 19. சேரமான் கணைக்கால் இரும்பொறை
- 20. முடிப்புரை
தேடல் தொடர்பான தகவல்கள்:
History of Chera - சேர மன்னர் வரலாறு