சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

நூல்வழியும் நூற்பெயரும்
தெரித்தகுரு முதல்வருயர் சிவஞான போதஞ் செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சித்தி விரித்தனர்மற் றவர்கள்திரு வடிகள் போற்றி விளம்பிநூ லவையிரண்டும் விரும்பினோக்கிக் கருத்திலுறை திருவருளு மிறைவ னூலுங் கலந்துபொது வுண்மையெனக் கருதி யானு மருத்திமிக வுரைப்பன்வளர் விருத்த நூறு மாசில்சிவப் பிரகாச மாகு மென்றே. |
அவையடக்கம்
தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த நன்மையினார் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க நவையாகா தெனவுண்மை நயந்திடுவர் நடுவாந் தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர் தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந்தறிதல் இன்மையினார் பலர்புகழி லேத்துவரே திலருற் றிகழ்ந்தனரே லிகழ்ந்திடுவர் தமக்கென வொன் றிலரே. |
பொது வதிகாரம்
முதற் சூத்திரம்
1.பதி இயல்பு
பல்கலையா கமவேத மியாவையினுங் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்பதிபாரமே யதுதான் நிலவுமரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி நின்மலமா யேகமாய் நித்த மாசி யலகிலுயிர்க் குணர்வாகி யசல மாகி யகண்டிதமா யானந்த வருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே. |
முதல்வன் திருவுரு
நீடுபரா சத்திநிக ழிச்சா ஞான நிறைகிரியை தரவதனை நிமலன் மேவி நாடரிய கருணைதிரு வுருவ மாகி நவின்றுபல கலைநாத விந்து வாதி கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக் கொடுவினைகொள் தனுகரன புவன போகம் பீடுபெற நிறுவியவை யொடுக்கு மேனி பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே. ஈங்கிதுவென் றதுகடந்த வியல்பி னானும் ஈறுமுத நடுவொன்று மிலாமை யானும் ஓங்கிவளர் ஞானமய னாத லானும் உண்மைபிறர்க் கறிவரிய வொருமை யானும் தாங்கரிய வெறுப்பினொடு விருப்பு மெல்லாஞ் சார்வரிய தனிமுதல்வ னாத லானும் நீங்கலரு முயிர்க்குயிராய் நிற்ற லானும் நிறுத்திடுவ நினைந்தவுரு நிமலன் றானே. |
முதல்வனது உண்மை
உலகமெலா மொருவனோ டொருத்தியொன்றென் றுளதாகி நின்றளவி லொடுங்கும் பின்னு மலமதனா லுளதாகு முருவ மாறி வருவது பேர் வதுசெல்வ தாத லானும் மலைவிலசேத தனமாயை யாதலானு மணுக்களுரு வடையுமறி விலாமை யானும் நிலவுதொழின் மருவுயுரு நிற்ற லானும் நின்றெவையு மளித்திடுவ நிமலன் றானே. கந்தமல ரயன்படைக்கு முலக மெல்லாங் கண்ணனளித் திடுமவையெங் கடவுள் தானே யந்தமுற வழித்திடுவ னாத லாலே யயனரியு மவனதுய ரதிகா ரத்து வந்தமுறை தன்றொழிலே மன்னுவிப்ப னெல்லாம் வருவிப்பன் விகாரங்கண் மருவான் வானின் முந்தரவி யெதிர்முளரியலாவுறுமொன்றலர்வான் முகையாமொன் றொன்றுலரு முறையி னாமே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், லானும், நூல்கள், யானும், சிவப்பிரகாசம், சித்தாந்த, நிமலன், சாத்திரங்கள், றானே, நிற்ற, சிவஞான, இலக்கியங்கள், மாகி