சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சந்தான பரம்பரை
தேவர்பிரான் வளகயிலைக் காவல் பூண்ட திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற் பாவியசத் தியஞான தரிசனிகள் அடிசேர் பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணை மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத் தாவிலருள் மறைஞான சம்பந்தர் இவரிச் சந்தானத் தெமையாளும் தன்மை யோரே. |
குரு வணக்கம்
பார்திகழ வளர்சாம வேத மல்கப் பராசரமா முனிமரபு பயில ஞானச் சார்புதர வந்தருளி எம்மை யாண்ட சைவசிகா மணிமருதைத் தலவன் அந்தன் கார்மருவு பொழில்புடைசூழ் மதின்மீதே மதியங் கடவாமை நெடுங்கொடியின் கரந்தகையுங் கடந்தைச் சீர்நிலவு மறைஞான சம்பந்தன் எந்தை திருவளரும் மலரடிகள் சென்னி வைப்பாம். |
நுதலிய பொருள்
(தொடக்கம்)
புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப் புகல் அவைக் களவாகிப் பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும் சொற் பொருள்போல் பேதாபே தமும் இன்றிப் பெருநூல் சொன்ன அறத்திறனால் வளைவதா யுடலுயிர்கண் ணருக்கன் அறிவொளிபோல் பிறிவருவருமத் துவித மாகுஞ் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்கலுற்றாம். |
தீட்சாக்கிரமம்
மூவகையா ருயிர்வருக்க மலத்தார் கன்ம மூலமலத் தார்மூன்று முடையாரன்றே தீவகமா மெனவுருவாய் வந்து நாதன் திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால் பாவனையால் மிகுநூலா லியோகப் பண்பால் பரவிவரு மவுத்திரியால் பாச நாச மேவவரு ளுதவுமவுத் திரியிரண்டு திறனாம் வியன்கிரியை ஞானமென விளம்பு மாறே. விரும்பியமந் திராதிகார மர்ச்சனா திகார மேவுமியோ காதிகார மெனச்சமய விசேடம் வரும்பொருவில் நிருவாண மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள் பவனங்கள் தத்துவங்கள் கலைகள் ளிரங்கடைவிற்றொகைபதினொன் றெண்பத் தொன்றைம்பத்தொன் றிருநூற்றோ டிருபத்து நாலாறா றைந்திற் பரந்தநெறி யறுவகையு மொருவிநினை வரிதாம் பரபதத்து ளுயிர்விரவப் பயிற்று மன்றே. |
சிவஞானத்தின் சிறப்பும் வகையும்
கிரியையென மருவுமவை யாவும் ஞாங் கிடைத்தற்கு நிமித்தமெனக்கிளக்குமுண்மைச் சரியைகிரி யாயோகத் தன்மையோர்க்குச் சாலோக சாமீப சாரூ பங்கண் மருவியிடு முயர்ஞான மிரண்டா மாறா மலமகல வகலாது மன்னு போதத் திருவருளொன் றொன்றதனைத் தெளிய வோதுஞ் சிவாகமமென் றுலகறியச் செப்பும் நூலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, சிவப்பிரகாசம், சாத்திரங்கள், மறைஞான, இலக்கியங்கள், மாறா