சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

ஞானத்திற் சரியை
தொண்டர்கள் தாமும் வானோர் தொழுந்திரு மேனிதானும் அண்டருங் கண்டி லாத வண்ணலே யெனவ ணங்கி வெண்டர ளங்கள் சிந்த விழிமொழி குழற மெய்யே கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே. |
நூற்கருத்து
(முடிவு)
நிலவுல காய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் குலவின ரளவ ளாவாக் கொள்கைய தாகி வேதத் தலைதரு பொருளா யின்பாய்த் தாவில்சற் காரியத்தாய் மலைவறு முணர்வாற் பெத்த முத்திகண் மதித்தா மன்றே. |
நூலை உபதேசிக்குமாறு
திருவருள் கொடுத்து மற்றிச் சிவப்பிர காச நன்னூல் விரிவது தெளியு மாற்றால் விளம்பிய வேது நோக்கிப் பெருகிய வுவமை நான்கின் பெற்றியி னிறுவிப்பின் முன் தருமலை வொழியக் கொள்வோன் றன்வயிற் சாற்ற லாமே. |
சிவப்பிரகாசம் முற்றும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவப்பிரகாசம், சாத்திரங்கள், சித்தாந்த, இலக்கியங்கள்