முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

திருக்களிற்றுப்படியார் சைவசித்தாந்த நூல்களுள் இரண்டாவது நூல். சைவசித்தாந்த நூல்களுக்குள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு இது முற்பட்டது. இந் நூலை இயற்றியவர் திருக்கடவூரைச் சேர்ந்த உய்யவந்த தேவநாயனார் ஆவார். இந் நூல் 100 வெண்பாக்களால் ஆனது.
நூல்
அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர் எல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும் அல்லார்போ னிற்பா ரவர். |
1 |
தம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தம்மிற் றலைப்படுத றாமுணரின் - தம்மில் நிலைப்படுவ ரோரிருவர் நீக்கிநிலை யாக்கித் தலைப்படுவர் தாமத் தலை. |
2 |
என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி என்னறிவி லாரறிக வென்றொருவன் - சொன்னபடி சொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச் சொல்லக்கே ணானுனக்கச் சொல். |
3 |
அகளமய மாய்நின்ற வம்பலத்தெங் கூத்தன் சகளமயம் போலுலகிற் றங்கி - நிகளமாம் ஆணவ மூல மலமகல வாண்டனன்காண் மாணவக வென்னுடனாய் வந்து. |
4 |
ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே யோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத் தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு. |
5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருக்களிற்றுப்படியார், நூல்கள், சாத்திரங்கள், நூல், சித்தாந்த, சொல்லக்கே, ளெங்கே, தம்மிற், சைவசித்தாந்த, இலக்கியங்கள், அம்மையப்ப