சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

7. அணைந்தோர் தன்மை
தீங்குறு மாயை சேரா வகைவினை திரிவி தத்தா னீங்கிட நீங்கா மூல நிறையிரு ளிரிய நேயத் தோங்குணர் வகத்த டங்கி யுளத்துளின் பொடுங்க நேரே தூங்குவர் தாங்கி யேகத் தொன்மையிற் றுகளி லோரே. குறிப்பிடங் காலத் திக்கா சனங்கொள்கை குலங்கு ணஞ்சீர் சிறப்புறு விரதஞ் சீலந் தபஞ்செபந் தியான மெல்லா மறுத்தற வொழிதல் செய்தன் மருவிடா மன்னு செய்தி யுறக்குரு பவர்போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து போமே. அகம்புற மென்றி ரண்டா லருச்சனை புரியு மிந்தச் சகந்தனி லிரண்டு மின்றித் தமோமய மாகி யெல்லா நிகழ்ந்திட மகிழ்ந்து வாழு நீர்மையோர் போல ஞானந் திகழ்ந்தகம் புறமெ னாத செம்மையார் நன்மை யாரே. |
ஞானத்தில் யோகம்
அண்டமே விடவ னைத்து மனைத்தையு மண்ட மேவிக் கொண்டல்போ லெவையு ஞானங் குறைவிலா நிறைத லாலே கண்டதோர் பொருளை யந்தக் கருத்தினாற் காணிற் றானே யண்டநா யகனா மேனி யானதே லைய மின்றே. |
ஞானத்திற் கிரியை
மண்முதற் கரணமெல்லா மறுவசத் தாக்கி ஞானக் கண்ணினி லூன்றி யந்தக் கருத்தினா லெவையு நோக்கி யெண்ணியஞ் செழுத்து மாறி யிறைநிறை வுணர்ந்து போற்றல் புண்ணியன் றனக்கு ஞான பூசையாய்ப் புகலு மன்றே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, சிவப்பிரகாசம், சாத்திரங்கள், யந்தக், இலக்கியங்கள், லெவையு