முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.098.திருநன்னிலத்துப்பெருங்கோயில்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.098.திருநன்னிலத்துப்பெருங்கோயில்
7.098.திருநன்னிலத்துப்பெருங்கோயில்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
995 |
தண்ணியல் வெம்மையினான் தலை பண்ணியன் மென்மொழியா ரிடங் புண்ணியநான்மறையோர் முறையா ண்ணிய நன்னிலத்துப் பெருங் |
7.098.1 |
புண்ணியத்தைச் செய்கின்ற, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், முறைப்படி தனது, திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி, பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தண்ணிய இயல்பினையும், வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன்; வாயில்கள்தோறும் சென்று, பண்போலும் இயல்பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற 'பாண்டரங்கம்' என்னும் கூத்தினை யுடையவன்.
996 |
வலங்கிளர் மாதவஞ்செய் மலை சலங்கிளர் கங்கைதங்கச் சடை பலங்கிளர் பைம்பொழில்தண் பனி நலங்கிளர் நன்னிலத்துப் பெருங் |
7.098.2 |
பயன் மிகுந்த, பசிய சோலைகள், குளிர்ந்த, வெள்ளிய சந்திரனைத் தடவுதலால் அழகு மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வெற்றி மிக்க, பெரிய தவத்தைச் செய்த மலைமகளை ஒருபாகத்தில் உடையவனாய், வெள்ளம் மிகுந்த கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றிலே தங்கும்படி தடுத்து வைத்துள்ளான்.
997 |
கச்சியன் இன்கருப்பூர் விருப் உச்சியன் பிச்சையுண்ணி உல நொச்சியம் பச்சிலையான் நுரை நச்சிய நன்னிலத்துப் |
7.098.3 |
நொச்சியின் பச்சிலையும், நுரை இல்லாத தூய நீரும் கொண்டு வழிபடுவோர் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான். கச்சிப்பதியில் எழுந்தருளியிருப்பவன்; இனிய கரும்பின்கண் செல்லுகின்ற விருப்பம்போலும் விருப்பம் செல்லுதற்கு இடமானவன்; தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல் இருப்பவன்; பிச்சையேற்று உண்பவன்; உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன்.
998 |
பாடிய நான்மறையான் படு ஆடிய மாநடத்தான் அடி சூடிய செங்கையினார் பலர் நாடிய நன்னிலத்துப் பெருங் |
7.098.4 |
தலைமேற் குவித்த கையை உடைய பலர், மிக்க அன்புடையவர்களாய். 'திருவடி போற்றி' என்று, பொருந்திய தோதிரங்களைச் சொல்லி அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவன், தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை யுடையவன்; இறந்த பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற, சிறந்த நடனத்தையுடையவன்.
999 |
பிலந்தரு வாயினொடு சலந்தரன் ஆகம்இரு நிலந்தரு மாமகள்கோன் நலந்தரு நன்னிலத்துப் பெருங் |
7.098.5 |
நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் போன்ற வாயையும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்பு, மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.
1000 |
வெண்பொடி மேனியினான் கரு பெண்படி செஞ்சடையான் பிர பண்புடை நான்மறையோர் பயின் நண்புடை நன்னிலத்துப் பெருங் |
7.098.6 |
நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள், பல மந்திரங்களையும் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கும், நட்பாம் தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், வெண்பொடியைப் பூசிய மேனியை உடையவன்; நீல மணிபோலும் கரிய கண்டத்தை யுடையவன்; கங்கையாகிய பெண் பொருந்தியுள்ள சடையை உடையவன்; பிரமதேவனது தலையை, பெருமை கெட அறுத்தவன்.
1001 |
தொடைமலி கொன்றைதுறுஞ் சடை படைமலி கையன்மெய்யிற் பகட் மடைமலி வண்கமலம் மலர் நடைமலி நன்னிலத்துப் பெருங் |
7.098.7 |
இளமையான அன்னப் பறவைகள், நீர்மடைகளில் நிறைந்துள்ள, வளவிய தாமரை மலர்மேல் தங்கிப் பின் அப்பாற் சென்று நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், மாலையாக நிறைந்த கொன்றைமலர் பொருந்திய சடையை உடையவன்; ஒளிவீசுகின்ற வெள்ளிய மழுவாகிய ஆளும் படைக்கலம் நிறைந்த கையை உடையவன்; திருமேனியில் யானையினது உரித்த தோலாகிய போர்வையை உடையவன்.
1002 |
குளிர்தரு திங்கள்கங்கை குர மிளிர்தரு புன்சடைமேல் உடை தளிர்தரு கோங்குவேங்கை தட நளிர்தரு நன்னிலத்துப் பெருங் |
7.098.8 |
நறுமணம் பொருந்திய, தளிர்களைத் தருகின்ற கோங்கு, வேங்கை, வளைவையுடைய குருக்கத்தி, சண்பகம் முதலிய பூமர வகைகள் பலவும் குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது ஒளிவீசுகின்ற, புல்லிய சடையின்மேல், குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரன், கங்கை, பாம்பு, குராமலர், கூவிள இலை முதலிய இவைகளை உடையவன்; இடபத்தை ஊர்கின்றவன்;
1003 |
கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங் அமர்பயில் வெய்தி அருச் தமர்பயில் தண்விழவில் தகு நமர்பயில் நன்னிலத்துப் பெருங் |
7.098.9 |
உலகத்தவர் மிக்குள்ள தண்ணிய விழாக்களையுடைய, தகுதிவாய்ந்த சைவர்களாகிய, தவத்திற் சிறந்த நம்மவர் மிக்கு வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், நிலப் பிளப்புக்கள் மிகுந்த கொடிய கற்சுரத்தில், கொடிய பன்றியின்பின்னே வேடுவனாய்ச் சென்று அருச்சுனனோடு போராடுதலைப் பொருந்தி, அவனுக்குத் திருவருள் செய்த தலைவனாவான்.
1004 |
கருவரை போல்அரக்கன் கயி ஒருவிர லால்அடர்த்தின் னருள் திரைபொரு பொன்னிநன்னீர்த் துறை நரபதி நன்னிலத்துப் பெருங் |
7.098.10 |
அலை மோதுகின்ற காவிரியாற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும், சோழர்கோமகனும் ஆகிய அரசன் செய்த, திருநன்னிலத்துப் பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், அரக்கனாகிய இராவணன், கயிலாய மலையின்கீழ், கரியமலைபோலக் கிடந்து கதறும்படி ஒரு விரலால் நெருக்கிப் பின்பு அவனுக்கு அருள்புரிந்த உமை கணவனாகும்.
1005 |
கோடுயர் வெங்களிற்றுத் திகழ் நாடிய நன்னிலத்துப் பெருங் சேடியல் சிங்கிதந்தை சடை பாடிய பத்தும்வல்லார் புகு |
7.098.11 |
தந்தங்கள் உயர்ந்து காணப்படுகின்ற வெவ்விய யானையின்மேல் விளங்குகின்ற கோச்செங்கட்சோழ நாயனார் செய்த, யாவரும் விரும்புகின்ற, திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள், பரலோகத்துள் புகுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநன்னிலத்துப்பெருங்கோயில் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருங், எழுந்தருளியிருக்கின்ற, நன்னிலத்துப், விரும்பி, பெருங்கோயிலை, திருநன்னிலத்தில், நயந்தவனே, கோயில், பெருமான், உடையவன், மிகுந்த, தருகின்ற, பொருந்திய, யுடையவன், நான்கு, நிறைந்த, சென்று, வேதங்களை, செய்தபிரான், குளிர்ச்சியைத், முதலிய, ஒளிவீசுகின்ற, விரும்புகின்ற, சிறந்த, தண்ணிய, போற்றி, அந்தணர்கள், திருச்சிற்றம்பலம், திருமுறை, சொல்லி, வணங்கும், வெவ்விய, இயல்பினையும், திருநன்னிலத்துப்பெருங்கோயில், வெள்ளிய