முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.028.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.028.திருவாரூர்

6.028.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2364 | நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும் காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங் கூற்றினையுங் குரைகழலால் உதைத்தார் போலுங் ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும் |
6.028.1 |
அழகிய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள பெருமானார் நெற்றிக்கண் ஒன்று உடையாராய், நெற்றியில் திருநீறு அணிந்தவராய், வெள்ளிய எலும்புகளை விடாமல் அணிந்தவராய்க் காற்றைவிட விரைவாகச் செல்பவராய், ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை உதைத்தவராய்த் தம்மால் கொல்லப்பட்ட புலித்தோல் ஆடையை உடுத்த இளையராய்க் கங்கையையும் சடை மேல் வைத்தவராய், அகக்கண்களுக்குக் காட்சி நல்குகிறார்.
2365 | பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும் கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலும் பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும் அரியதோர் அரணங்கள் அட்டார் போலும் |
6.028.2 |
அணி ஆரூர்த் திருமூலட்டானனார் பருத்த பாம்பினை இடையில் இறுக்க அணிந்தவராய், அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கியவராய்க் கரிய யானைத் தோலினைப் போர்த்தவராய், மண்டை ஓட்டினையும் கட்டங்கப் படை எழுதிய கொடியினையும் உடையவராய்ப் பெரிய மலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்தவராய், நந்தி என்ற பெயரினையும் உடையவராய்ப் பகைவருடைய அழித்தற்கரிய மும்மதில்களையும் அழித்தவராய், நம் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார்.
2366 | துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந் பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும் மணியுடைய மாநாகம் ஆர்ப்பார் போலும் அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும் |
6.028.3 |
கீளூம் கோவணமும் ஆகிய குறைந்த உடைகளையும் தோல் உடையையும் உடையவராய்த் தூய திருமேனியை உடைய செல்வராய்,அடியார்களுடைய பிணிகளை நீங்குமாறு போக்குபவராய், மொழியைக் கடந்த பெரும்புகழாளராய், இரத்தினங்களை உடைய மேம்பட்ட நாகங்களை அணிந்தவராய், வாசுகி என்ற பாம்பினைத் தம் வில்லின் நாணாகக் கொண்டவராய், அழகிய நீண்ட வீதிகளில் உலாவுபவராய், அழகிய ஆரூர்ப் பெருமானார் மனக்கண் முன் காட்சி வழங்குகிறார்.
2367 | புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சிமேற் கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார் விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ |
6.028.5 |
தம்மைச் சுற்றிப் பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கூத்து நிகழ்த்தும் பெருமான், புலித்தோலை உடுத்துக் கச்சிமேற்றளி, குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பம், கழுமலம் இவற்றில் வீடுகள் தோறும் பிச்சைக்கு உலவும், முழு எலும்புக் கூட்டைத் தோளில் அணிந்த, வடிவத்தாராய், மலர் மாலையை அணிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் காளை வடிவம் எழுதப்பட்ட கொடியோடும் செல்வம் மிகும் வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2368 | ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும் கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங் வானத் திளமதிசேர் சடையார் போலும் ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும் |
6.028.5 |
பன்றியின் முற்றாத கொம்பினை அணிந்தவராய்த் தேவர்கள் வழிபடும்படியாகத் தங்கியிருப்பவராய்க் காட்டில் உள்ள கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவராய்க் கடல் நஞ்சினை உண்டு கறுத்த கழுத்தினராய்ப் பிறை சேர்ந்த சடையினராய், உயர்ந்த கயிலை மலையை உகந்து உறைபவராய், அகரமாகிய எழுத்து ஏனைய எழுத்துக்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருப்பது போல ஏனைய பொருள்களுக் கெல்லாம் காரணராய், காளையை இவர்ந்தவராய் அடியவர்கள் மனக்கண்முன் அழகிய ஆரூர்ப் பெருமானார் காட்சி வழங்குகிறார்.
2369 | காமனையும் கரியாகக் காய்ந்தார் போலுங் சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும் நாமனையும் வேதத்தார் தாமே போலும் ஆமனையுந் திருமுடியார் தாமே போலும் |
6.028.6 |
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் மன்மதனைச் சாம்பலாகுமாறு கோபித்துக்கடல் விடத்தை உண்டு நீலகண்டராய்ப் பிறையையும் சடையில் சூடிச் சொல், சொற்பொருள், நாவால் உச்சரிக்கப்படும் வேதம் இவற்றின் வடிவினராய்ப் பார்வதி பாகராய்க் கங்கையை முடியில் வைத்தவராய் அடியவர் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார்.
2370 | முடியார் மதியரவம் வைத்தார் போலும் செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ் கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங் அடியா ரடிமை யுகப்பா போலும் |
6.028.7 |
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் முடியில் பிறையும் பாம்பும் சூடி, மூவுலகும் தாமேயாய்ப் பரந்து புலால் நாற்றம் கமழும் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்து வீடுபேற்றிற்கு உரிய வழியைக் காட்டி மற்றவர் நீக்கும் நஞ்சுண்டு நீல கண்டராய், எலும்புக்கூட்டினை அணிந்த வேடத்தை உடைய தலைவராய், அடியார்களுடைய அடிமைப் பணியினை உகப்பவராய் மனக்கண்முன் அடியவர்க்குக் காட்சி வழங்குகின்றார்.
2371 | இந்திரத்தை யினிதாக ஈந்தார் போலும் சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந் மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் அந்திரத்தே யணியாநஞ் சுண்டார் போலும் |
6.028.8 |
அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் இந்திர பதவியைத் தக்கவருக்கு மகிழ்வோடு ஈந்து, தேவர்கள் வந்து வழிபடும் தலைவராய் அழகியநீறு பூசி, மிகவும் தூய திருமேனியை உடைய தலைவராய், அடியவர்கள் உள்ளத்தே தம் திருவைந் தெழுத்தை நிலையாக அமைத்து வாசுகியைத் தம் மலைவில்லின் நாணாக வில்லினை வளைத்து இணைத்து, அழகிய நிலைபெற்ற அணியாகுமாறு விடம் உண்டு நீலகண்டராய் நம்மனக்கண்முன் காட்சி வழங்குகின்றார்.
2372 | பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும் முண்டத்து முக்கண் ணுடையார் போலும் கண்டத் திறையே கறுத்தார் போலும் அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும் |
6.028.9 |
எல்லா உடம்புகளையும் பாதுகாக்கும் தலைவரான திருவாரூர்ப் பெருமானார் பிறப்பு இறப்பு அற்றவராய், நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவராய், உடல் முழுதும் நீறு பூசும் தலைவராய்க் கழுத்து சிறிதே கறுத்தவராய்க் காளத்தி, குடந்தை, நாகை என்ற காரோணப்பதிகள் ஆகியவற்றை உகந்தருளியிருப்பவராய் அண்டத்துப் புறத்தும் உள்ளவராய் நம் மனக்கண்முன் காட்சி வழங்குகிறார்.
2373 | ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும் பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும் உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார் |
6.028.10 |
அணி ஆரூர்த் திருமூலத்தானப் பெருமான் ஒரு காலத்தில் தாம் ஒருவரேயாகிப் பல ஊழிக் காலங்களையும் கண்டு, கங்கையைப் பெருகாதபடி சடையில் கொண்டு தவிர்த்து, பிறப்பு துயரம் சாக்காடு என்பன இல்லாதவராய், உருகாத மனத்தவர் உள்ளத்தில் உகந்து தங்காதவராய், தம்மை விரும்புவர் உள்ளத்தை என்றும் நீங்காதவராய் அருகில் வந்து எனக்கு அஞ்சேல் என்று அருள் செய்பவர் ஆவர்.
2374 | நன்றாக நடைபலவும் நவின்றார் போலும் கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங் சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந் அன்றாகில் ஆயிரம் பேரார் போலும் |
6.028.11 |
அணி ஆரூர்த் திருமூலட்டானப் பெருமானார் நல்ல ஒழுக்க நெறிகளை நூல்கள் வாயிலாக அறிவித்து ஞானப்பெருங்கடற்கு உரிமை உடைய தலைவராய், வேள்வியில் கொல்லப்பட்டதனை வேள்வி செய்யும் அடியவர் உகப்பிற்காக நுகர்பவராய், இராவணன் தலைகள் பத்தினையும் நசுக்கியவராய்ப் பகைவருடைய திரிபுரங்களை அம்பு எய்து அழித்தவராய்த் திசைகளிலும் திசைகளில் உள்ள பொருள்களிலும் பரவியவராய், ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் அடியார் உகப்பிற்காக ஆயிரம் திருநாமங்களை உடையவராய், அடியவர்கள் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றார். சென்றார் - மெலித்தல் விகாரம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருமூலட், காட்சி, போலும்அணியாரூர்த், பெருமானார், ஆரூர்த், வைத்தார், போலும், நின்றார், வழங்குகிறார், தலைவராய், வழங்குகின்றார், அணிந்த, திருமூலட்டானத்துப், மனக்கண்முன், அணிந்தவராய், அடியவர்கள், கண்டர், தேவர்கள், உகந்து, முண்டிருண்ட, முடியில், உடையவராய், உகப்பிற்காக, பிறப்பு, பூசும், போலுங்கடல்நஞ்ச, அடியவர், சடையில், கெல்லாம், செஞ்சடைமேல், நெற்றியில், வைத்தவராய், போலுங், பூண்டார், திருமுறை, திருச்சிற்றம்பலம், உடையவராய்ப், கொண்டு, அடியார்களுடைய, பூதங்கள், திருமேனியை, திருவாரூர், பகைவருடைய, மனக்கண், பெருமான்