முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.019.திருவாலவாய்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.019.திருவாலவாய்
6.019.திருவாலவாய்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
2275 | முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத் திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.1 |
எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய், செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய், அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய், தூயமுத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான்பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம்.
2276 | விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப் உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக் தெண்ணிலவு தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.2 |
தேவருலகிலுள்ள மேலாருக்கும் மேலாயவனாய், வானத்தில் உலவிய முப்புரங்களையும் அழித்தவனாய், வண்டுகளின் பண்ணோசை நிலைபெற்ற பசிய பொழில்களை உடைய பழன நகரில் உள்ளானாய், பசும் பொன்நிறத்தனாய்,வெண்ணீறு அணிந்தவனாய், சடைக்கற்றைக்குள் அடங்கிய கங்கையை உடையவனாய், உமையோடு வெளிப்படையாக உடனாகியும் அவளைத் தன் உருவில் மறைத்தும் இருப்பவனாய்த் தௌந்த ஞானம் உடையார் பலரும் தங்கியிருக்கும் தென்கூடல் ஆலவாயில் உள்ள சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
2277 | நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப் காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று தீத்திரளைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.3 |
கங்கையை நீண்ட சடையில் தங்கச் செய்தவனாய், பின் பகீரதன் பொருட்டாகஅதன் ஒரு பகுதயை நிலத்தின்கண் பெருகி ஓடவிட்டவனாய், பால், தயிர், நெய்என்பவற்றின் அபிடேகத்தைப் பலகாலும் உடையவனாய், பகை கொண்டு வந்தகொடிய கூற்றுவனைத் தண்டித்தவனாய், காற்றின் திரட்சியாய் மேகத்தின்உள்ளே இருந்து கொடிய இடியாக ஓசை எழுப்புபவனாய், நெற்றியின் கண்தீத்திரட்சி போன்ற கண்ணை உடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச்சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
2278 | வானமிது வெல்லா முடையான் தன்னை கானமதில் நடமாட வல்லான் தன்னைக் ஊனமது வெல்லா மொழித்தான் தன்னை தேனமுதைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.4 |
வான் உலகினையும் நிலவுலகினையும் தன் உடைமையாக உடையவனாய்ப் பாம்பினைக் கச்சாக அணிந்தவனாய் வலிய பேய்கள் சூழச்சுடுகாட்டில் கூத்தாட வல்லவனாய், தன் கடைக்கண்களால் உமாதேவியை நோக்கி அவள் பரிந்துரைத்த குறிப்பினையும் பெற்று என்பால் உள்ள குறைகளை எல்லாம் நீக்கினவனாய், அடியேன் உள்ளத்துள்ளே ஞானவடிவினனாய் நின்று தேன் போலவும் அமுது போலவும் இனியனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே.
2279 | ஊரானை யுலகேழாய் நின்றான் தன்னை பேரானைப் பிறர்க்கென்று மரியான் தன்னைப் ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை சீரானைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.5 |
கயிலை மலையை இருப்பிடமாக உடைய வனாய், ஏழுலகமும் பரந்து இருப்பவனாய், ஒற்றைப்பிறையை அணிந்தவனாய், உமாதேவியை விடுத்து என்றும் நீங்காதவனாய், அடியார் அல்லாதார் நினைத்தற்கு அரியனாய், பேயோடு எந்நாளும் சுடுகாட்டில் கூத்தாடுதலில் தெவிட்டாதவனாய், தான் விடத்தை உண்டு அமரர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், வேதமந்திரங்களைக் கூறிப் பிரமனும் திருமாலும் துதிக்கும் புகழுடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
2280 | மூவனை மூர்த்தியை மூவா மேனி பாவனைப் பாவ மறுப்பான் தன்னைப் மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு தேவனைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.6 |
யாவரினும் முற்பட்டவனாய், அடியார்கள் விரும்பிய வடிவில் காட்சி வழங்குபவனாய், என்றும் மூத்தலில்லாத திருமேனியை உடையவனாய், தானே மூவுலகம் முழுதும் பரவியிருப்பவனாய், அடியவர்களின் தீவினையைப் போக்குபவனாய், ஓவியத்து எழுதவொண்ணா அழகிய உமையோடு விரும்பியிருப்பவனாய், தேவர்கள் நடுங்குதலைக் கண்டு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அமுதத்தை ஈந்ததேவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
2281 | துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத் இறந்தார்க ளென்பே யணிந்தான் தன்னை மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னை சிறந்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.7 |
பற்றறுத்த சான்றோருக்குப் பற்றுக்கோடாகும் வழியாய் இருப்பவனாய், அடியார்களுடைய துன்பத்தைப் போக்கி அவர்களை ஆட்கொள்ள வல்லவனாய், இறந்தவர்களுடைய எலும்பையே அணிந்தவனாய், இரவில் கூத்தாடவல்லவனாய்த் தன்னை மறந்த அசுரர்களின் மும்மதில்களையும் அழித்தவனாய், வேறுபற்றில்லாத அடியார்களுக்கு என்றும் மேம்பட்டு அருளுபவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
2282 | வாயானை மனத்தானை மனத்துள் நின்ற தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச் தாயானைத் தவமாய தன்மை யானைத் சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.8 |
அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி, அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய், மாசற்றவனாய், கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய், பிறையைச்சடையில் சூடியவனாய், தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய், மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும்தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
2283 | பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் தன்னைப் வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை திகைச்சுடரைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.9 |
தீவினையாகிய இருளைப் போக்கும் ஞானச் சுடராய், அடியார்களின் பாவங்களைப் போக்குபவனாய்ப் பழி ஏதும் இல்லாதவனாய் நஞ்சினை உண்டுதேவர்க்கு அமுதம் ஈந்தவனாய்க் கிளைத்தெழுந்த தீயாகி அசுரருடையமும் மதில்களையும் அழித்தவனாய், நடுவுநிலை தவறாதவனாய் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவனாய், மேலான ஒளிவடிவினனாய், விண்ணவர்களுக்கு மேலும் உயர்வுதரும் அப்பக்தியாய் உள்ளவனாய், மேம்பட்ட தேவர்களுக்கும் ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
2284 | மலையானை மாமேரு மன்னி னானை தலையானை யென்தலையி னுச்சி யென்றுந் துலையாக வொருவரையு மில்லா தானைத் சிலையானைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.10 |
கயிலை மலையை உடையவனாய், மேரு மலையில் தங்கியிருப்பவனாய், வளர்ந்த செஞ்சடையினனாய், வானோருள் மேம்பட்டவனாய், என் தலையின் உச்சியில் என்றும் நிலைபெற்றிருப்பவனாய், எங்கும் தனக்கு நிகராவார் இல்லாதவனாய்த் தன்னை அணுகாது பகையைப்பூண்ட அசுரர் மதில்கள் மூன்றும் அழியுமாறு பயன்படுத்திய வில்லை உடையவனாய் இருக்கும் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
2285 | தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் தன்னைத் பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப் ஆத்தனை யடியேனுக் கன்பன் தன்னை தீர்த்தனைத் தென்கூடல் திருவா லவாய்ச் |
6.019.11 |
பிறன் மனைவியை விரும்பிய இராவணனுடைய தோள்களையும் பத்துத்தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய வீணை இசைகேட்டு அருள் செய்தவனாய், அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்கு இரங்கிப் பாசுபதாத்திரம் ஈந்தவனாய், நம்பத்தகுந்தவனாய், அடியேன் மாட்டு அன்பு உடையவனாய், அளவற்றபல ஊழிக்காலங்களையும் கண்டும் தன் நிலைபேற்றில் மாறுபடாது இருக்கும் பரிசுத்தனாகிய தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாலவாய் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிந்திக்கப், பெற்றேன், தென்கூடல், சிவனடியே, திருவா, லவாய்ச்சிவனடியே, உடையவனாய், திருவாலவாய்ச், என்றும், அழித்தவனாய், வல்லான், அணிந்தவனாய், மறுப்பான், இருப்பவனாய், அமுதம், நஞ்சுண், ஈந்தவனாய், நின்றான், நஞ்சினை, உள்ளவனாய், மேம்பட்ட, இருக்கும், தேவர்க், தேவாதி, தேவர்கள், அடியார்களுடைய, தொடர்ந்து, விரும்பிய, செய்தவனாய், மூன்றும், லவாய்ச், சூடியவனாய், வல்லசுரர், சடைமுடிமேல், திருமுறை, திருச்சிற்றம்பலம், முன்னே, மும்மதில்களையும், கொண்டு, வல்லவனாய், உமாதேவியை, அடியேன், வெல்லா, திருவாலவாய், கங்கையை, உமையோடு, போலவும்