முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.015.பாவநாசத்திருப்பதிகம்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.015.பாவநாசத்திருப்பதிகம்

4.015.பாவநாசத்திருப்பதிகம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
145 | பற்றற் றார்சேர் பழம்பதியைப் சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் வெற்றி யூரில் விரிசுடரை ஒற்றி யூரெ முத்தமனை |
4.015.1 |
உலகப் பற்றற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன், பாசூரில் உறையும் பவளம், சிற்றம்பலத்தில் உள்ள கனி, தீண்டுதலுக்கு அரிய திருஉருவம், வெற்றியூரில் விரிந்த ஒளி, தூயவர்கள் தலைவன், கடல் ஒருபுறம் சூழ்ந்த ஒற்றியூர் உத்தமன் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தில் நிலையாக இருத்தினேன்.
146 | ஆனைக் காவி லணங்கினை கானப் பேரூர்க் கட்டியைக் வானப் பேரார் வந்தேத்தும் மானக் கயிலை மழகளிற்றை |
4.015.2 |
ஆனைக்காவில் உள்ள தெய்வம், ஆரூரில் உறையும் தலைவன், கானப் பேரூரில் உள்ள கரும்பின் கட்டி, கானூரில் முளைத்த கரும்பு, வானத்தினின்றும் நீங்காதவராகிய தேவர் வந்து வழிபடும் திருவாய்மூரில் உறையும் வலம்புரிச் சங்குபோல்வான். பெருமைமிக்க கயிலைமலையில் உறையும் இளைய களிறு, சந்திரனும், சூரியனும் ஆகியவன் என்னும் பெருமானை அடியேன் மறக்க மாட்டேன்.
147 | மதியங் கண்ணி ஞாயிற்றை அதிகை மூதூ ரரசினை விதியைப் புகழை வானோர்கள் நெதியை ஞானக் கொழுந்தினை |
4.015.3 |
பிறையைக் குறுங்கண்ணியாக உடைய சூரியன், உலகமயக்கத்தைப் போக்கும் மருந்து, திரவதிகையாகிய பழைய ஊரில் உறையும் அரசு, திருவையாற்றில் விரும்பி உறையும் தலைவன், வேதவிதியாக உள்ளவன், எல்லாப் புகழும் தன்பால் வந்து சேரும் மெய்ப்பொருள், தேவர்கள் விரும்பித்தேடும் ஞானஒளி, பெருஞ் செல்வம், ஞானக் கொழுந்து, ஆகிய பெருமானை விருப்புற்று நினைத்த அளவில் அடியேனுடைய உள்ளம் மகிழ்ச்சியில் நிறைவுற்றது.
148 | புறம்ப யத்தெம் முத்தினைப் உறந்தை யோங்கு சிராப்பள்ளி கறங்கு மருவிக் கழுக்குன்றிற் அறஞ்சூ ழதிகை வீரட்டத் |
4.015.4 |
புறம்பயத்தில் உறையும் எங்கள் முத்து, புகலூரில் விளங்கும் பொன், உறையூரில் ஓங்கிக் காணப்படும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள உலகுக்கு ஒளிதரும் சூரியன், அருவிகள் ஒலிக்கும் கழுக்குன்றத்தில் தரிசிக்க வருபவர்களுக்குப் பற்றுக்கோடு, அறச்செயல்கள் யாண்டும் செய்யப்படுகின்ற அதிகை வீரட்டத்தில் உள்ள ஆண் சிங்கம் ஆகிய பெருமானை அடியேன் அடைந்தேன்.
149 | கோலக் காவிற் குருமணியைக் ஆலங் காட்டி லந்தேனை பாலிற் றிகழும் பைங்கனியைப் சூலத் தானைத் துணையிலியைத் |
4.015.5 |
கோலக்காவில் உள்ள நல்ல நிறமுடைய மாணிக்கம், குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான், ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன், தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர், பால்போல் இனிக்கும் புதுமை மாறாத பழம், பராய்த்துறையில் உள்ள பசிய பொன், சூலம் ஏந்தியவன், ஒப்பற்றவன் ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பி வணங்கினேன்.
150 | மருக லுறைமா ணிக்கத்தை கருகா வூரிற் கற்பகத்தைக் பெருவே ளூரெம் பிறப்பிலியைப் திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் |
4.015.6 |
மருகலில் தங்கும் மாணிக்கம், வலஞ்சுழியில் உள்ள தமிழ்ப்பாமாலை, கருகாவூரில் உள்ள கற்பகம், காண்பதற்கு எளிதில் இயலாத கதிரவன் ஒளி, பெருவேளூரில் உள்ள பிறவாயாக்கைப் பெரியோன், விரும்பித் தொழுபவர்கள் பின் பிரிந்து செல்ல மனம் கொள்ளாதவகையில் உள்ள திருவாஞ்சியத்தில் உறையும் எம் செல்வன் ஆகிய பெருமானை அடியேன் மனத்தில் நிலையாக இருத்தினேன்.
151 | எழிலார் இராச சிங்கத்தை குழலார் கோதை வரைமார்பிற் நிழலார் சோலை நெடுங்களத்து அழலார் வண்ணத் தம்மானை |
4.015.7 |
அழகுமிக்க அரச சிங்கம், இராமேச்சுரத்தில் உறையும் அழகிய காளை, குழல்வாய் மொழியம்மையைத் தன் மலை போன்ற மார்பில் கொண்ட குற்றாலத்தில் உறையும் எங்கள் கூத்தன். நிழல் மிகுந்த சோலைகளையுடைய நெடுங்களத்தில் உறையும் நித்தியகலியாணன், தீ நிறத்தலைவன் ஆகிய பெருமானை அடியேன் அன்பினால் அடியேனோடு இணைத்து வைத்துக்கொண்டேன்.
152 | மாலைத் தோன்றும் வளர்மதியை ஆலைக் கரும்பி னின்சாற்றை சோலைத் துருத்தி நகர்மேய மேலை வானோர் பெருமானை |
4.015.8 |
மாலையில் தோன்றும் ஒளி வளரும் சந்திரன், மறைக்காட்டுள் உறையும் தலைவன், ஆலையில் பிழியப்படும் கரும்பின் இனிய சாறு, அண்ணாமலையிலுள்ள எம் தலைவன், சோலைகளை உடைய துருத்திநகர்க் கோயிலில் விரும்பி உறையும் சூரியனைப் போல ஒளிவீசும் அசைவற நின்ற பேராற்றலன், மேலே உள்ள தேவர்கள் தலைவன் ஆகிய பெருமானை அடியேன் விருப்பத்தோடு விழுங்கி விட்டேன்.
153 | சோற்றுத் துறையெஞ் சோதியைத்
துருத்தி மேய தூமணியை ஆற்றிற் பழனத் தம்மானை யால வாயெம் மருமணியை நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ணெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத் தோற்றக் கடலையட லேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே. |
4.015.9 |
சோற்றுத்துறையில் உறையும் ஞானஒளி, துருத்தியில் விரும்பி உறையும் தூயமணி, ஆற்றின்வளம் மிக்க திருப்பழனத் தலைவன். ஆலவாயிலுள்ள சிந்தாமணி, திருநீற்றால் விளங்கும் திண்ணிய தோள்களை உடைய, நெய்த்தானத்தில் உறையும் எம் நிலவொளி, பிறவிக்கடலை அழிக்கும் ஆற்றல் மிக்க காளை ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பித் தொழுதேன்.
154 | புத்தூ ருறையும் புனிதனைப் வித்தாய் மிழலை முளைத்தானை பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் வைத்தே னென்றன் மனத்துள்ளே |
4.015.10 |
புத்தூரில் உறையும் தூயோன், பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை, மிழலையில் விதையாகி முளைத்தவன், வேள்விக்குடியில் உறையும் எம் வேதியன், நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன், பொதிய மலையில் விரும்பி உறையும் பழையோன், மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக இருத்தினேன்.
155 | முந்தித் தானே முளைத்தானை அந்திச் செவ்வான் படியானை சிந்தை வெள்ளப் புனலாட்டிச் எந்தை பெம்மா னென்னெம்மா |
4.015.11 |
ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன், மூத்த வெண்ணிறக் காளையை இவர்ந்தவன். மாலைநேரச் செவ்வானின் நிறத்தினன். இராவணன் ஆற்றலை அழித்தவன் ஆகிய பெருமானை உள்ளத்தில் தோன்றும் அன்பு என்னும் தீத்தத்தால் அபிடேகித்து, இனிய சொற்களாலாகிய பாமாலைகளை அவன் திருவடிகளில் சேர்ப்பித்து எந்தையே, இறைவனே, என் தலைவனே என்று பலகாலும் அவனை அழைத்து மகிழ்பவருடைய தீவினைகள் அழிந்துவிடும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாவநாசத்திருப்பதிகம் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - உறையும், பெருமானை, அடியேன், தலைவன், விரும்பி, இருத்தினேன், தேவர்கள், நிலையாக, தோன்றும், தொழுதேனே, விழுங்கி, குளிரத், துருத்தி, தோளைக், தோள்கள், சிங்கம், வைத்தேனே, குளிருமாறு, தம்மானை, மாணிக்கம், எல்லாப், உள்ளத்தில், முளைத்த, சேரும், திருச்சிற்றம்பலம், திருமுறை, கரும்பின், என்னும், எங்கள், ஞானஒளி, பாவநாசத்திருப்பதிகம், சூரியன், விளங்கும்