முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.014.தசபுராணம்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.014.தசபுராணம்
4.014.தசபுராணம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
134 | பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட |
4.014.1 |
பெரிய மலையைச் சுற்றிக் கடைகயிறாகக் கொண்ட பாம்பினை விடுத்து நீங்கிய தேவர் ஓடி அஞ்சும்படியாகத் திருமால் திருமேனியை ஒழித்தற்பொருட்டும், விண்ணைச்சுடும் பொருட்டும் எழுந்து விசையொடு சென்று அந்நஞ்சு எங்கும் பரவ, 'பெருமானே! இவ் விடத்துன்பம் நீங்குதற்கு ஒரு கழுவாய் அருளிச்செய்வாயாக' என்று எல்லோரும் வேண்டவும் அருளினால், அப்பெரிய விடத்தை, மற்றவர்களைத் தாக்காதவாறு உண்ட பெருமானே எல்லா அண்டங்களுக்கும் அரசனாவான்.
135 | நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்டமூட பரமொரு தெய்வமெய்த விதுவொப்பதில்லை பிரமனு மாலுமேலை முடியோடுபாத பரமுத லாயதேவர் சிவனாயமூர்த்தி |
4.014.2 |
பரவிய ஓசையை உடைய வெள்ளப்பெருக்கு மேற் சென்று நீண்ட கண்டங்களை மூழ்க்க, நிலத்திலே நின்ற தீத்தம்பத்தில் பரம்பொருளாகிய ஒப்பற்ற தெய்வம் அடைய, பிரமனும் திருமாலும் இதனை ஒத்த தீப்பிழம்பு முன்னும் இல்லை என்று கருதி அந்நாளில் இரு பக்கங்களிலும் நின்று பணியுமாறு அவர்கள் அதன் முடியையும் அடியையும் அறிய முடியாமல் நின்ற பெரியோனாய் மேம்பட்ட முற்பட்ட தேவனாம் சிவமூர்த்தியாகிய பெருமானே நமக்குப் பாதுகாவல் நல்கும் சரணியன் ஆவான்.
136 | காலமு நாள்களூழி படையாமுனேக சாலவு மாகிமிக்க சமயங்களாறி ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழுமுண்டு பாலனு மாயவற்கொர் பரமாயமூர்த்தி |
4.014.3 |
நாண்மீன்கள் முதல் ஊழி முடியப் பாகுபட்ட காலத்தையும் படைத்தற்கு முன்பு ஒன்றாய் நின்றவனாய், மும் மூர்த்திகள் உருவிலும் அவர்கள் உயிருக்கு உயிராய் அமைந்தவனாய், அறுவகைச் சமயத்தோருக்கும் அவ்வவர் பொருளாய் விளங்கி நிற்பவனாய், உள்ள சோதி வடிவான பெருமான் வாமனனாகி மண்ணும் மேலை விண்ணுலகும் அடங்கிய ஏழுலகமும் உண்டு. ஓர் ஆலிலை மேல் சிறு குழந்தையாய்ப் பள்ளி கொண்ட திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாய் உள்ளவன். அவன் தான் நமக்கு ஒப்பற்ற சரணியன்.
137 | நீடுயர் விண்ணுமண்ணு நெடுவேலைகுன்றொ சூடிய கையராகி யிமையோர்கணங்கள் ஓடிய தாரகன்ற னுடலம்பிளந்தும் ஆடிய மாநடத்தெ மனலாடிபாத |
4.014.4 |
நெடிது உயர்ந்த விண்ணும் மண்ணும் நெடிய கடல் மலைகளொடு ஏழுலகமும் முழுவதும் வருந்த வருந்திய தாரகனுடைய கொடுமைகளுக்கு ஆற்றாமல் தேவர் கூட்டத்தார் குவிந்த கையராகிப் பெருமானுடைய புகழ்களைக் கூறியவாறு தொழுத அளவில், தன் இறுதியை நினைத்து உயிர்தப்பி ஓடிய தாரகனுடைய உடலைப் பிளந்தும் நீங்காத கோபம் நீங்குதற்பொருட்டு மகாதாண்டவத்தை ஆடிய தீயாடியப்பருடைய திருவடிகளே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குவன.
138 | நிலைவலி யின்றியெங்கு நிலனோடுவிண்ணு றலைநலி வஞ்சியோடி யரியோடுதேவ கொலைநலி வாளிமூள வரவங்கைநாணு மலைசிலை கையிலொல்க வளைவித்தவள்ள |
4.014.5 |
எதிர்த்து நிலைத்து நிற்பதற்குரிய வலிமை இல்லாமையால், மண்ணையும், விண்ணையும் எங்கும் அழித்துக் கொண்டு சஞ்சரிக்கும் திரிபுரங்கள் துன்புறுத்தும் துயரத்துக்கு அஞ்சி ஓடித் திருமாலோடு தேவர்கள் அடைக்கலம் என்று அடையத் தன் அருளால் கொலைத் தொழிலால் வருத்தும் திருமாலாகிய அம்பில் தீக்கடவுள் இணையவும், கையிலுள்ள வாசுகி என்ற பாம்பாகிய நாணில் தீப்பாயவும் மேருமலையாகிய வில் கையில் தளரவும் முப்புரங்களும் சாம்பலாகிவிடுமாறு வில்லை வளைவித்துச் செயற்படுத்திய அருட் கொடையாளனாம் அப்பெருமானே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான்.
139 | 139,நீலநன் மேனிசெங்கண் வளைவெள்ளெயிற்ற காலைநன் மாலைகொண்டு வழிபாடுசெய்யு பாலனை யோடவோடப் பயமெய்துவித்த காலனை வீடுசெய்த கழல்போலுமண்டர் |
4.014.6 |
கருநீல மேனியனும் சிவந்த கண்ணினனும் வளைந்த வெள்ளைக் கோரப் பற்களை உடையவனும் நெருப்புப் போன்ற சிவந்த மயிர் முடியை உடையவனும் ஆகிய காலன், மார்க் கண்டேயனைத் தேடிவந்த அன்று, அம்முனிவன் காலையிலே நல்ல மலர் மாலைகளைக் கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்த நேரத்தில் அவனிடத்து வந்து அணுகி அவனை மிகவும் அச்சுறுத்தி அவன் உயிரைக் கவரக்கயிற்றை வீசினானாக, அக்காலனை உதைத்து அழித்த சிவபெருமான் திருவடிகளே தேவர்கள் தொழுது வாழ்த்தித் தரைமேல் சூடும் திருவடிகளாகும்.
140 | உயர்தவ மிக்கதக்க னுயர்வேள்விதன்னி பயமுறு மெச்சனங்கி மதியோனுமுற்ற அயனொடு மாலுமெங்க ளறியாமையாதி சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணனெந்தை |
4.014.7 |
தவத்தில் மேம்பட்ட தக்கன் நிகழ்த்திய மிகச் சிறப்பான வேள்வியில் அவியைப் பெற்று உண்ண வந்த தேவர்களும் அச்சம் மிக்குற்ற வேள்வித் தலைவனும் அக்கினியும் சந்திரனும் ஒறுக்கப்பட்டு அடைந்த நிலைமையை நோக்கி அச்சத்தோடு நின்று பிரமனும், திருமாலும், 'எங்கள் அறியாமை முதலிய குற்றங்களைப் பொறுத்தருள்வாய்', என்று வணங்கி அப்பாற் செல்ல, வெற்றியுற்ற தன்மையைக் கண்ட, தீயைப் போன்ற செந்நிறத்தன் ஆகிய எங்கள் தந்தையின் திருவடிகளைக் கண்டு வழிபடுவதே பிறவாதிருக்க விரும்பும் உயிர்களின் கடமையாகும்.
141 | நலமலி மங்கைநங்கை விளையாடியோடி உலகினை யேழுமுற்று மிருண்மூடமூட அலர்தர வஞ்சிமற்றை நயனங்கைவிட்டு அலர்தரு சோதிபோல வலர்வித்தமுக்க |
4.014.8 |
அழகும் பண்பும் மிக்க பார்வதி எம்பெருமானோடு ஓடி விளையாடிய பொழுது அவனுடைய கண்களைக் கைகளால் பொத்த, ஏழு உலகங்களையும் முழுதுமாக இருட்டுக் கவர்ந்து கொள்ளவே, எம்பெருமானுடைய ஒற்றை நெற்றிக்கண் அந்த இருள் அகலுமாறு திறக்க, அதுகண்டு அஞ்சிப் பார்வதி கண்களை மூடிய கைகளை எடுத்துவிட்டு எம்பெருமானை வணங்க, சந்திரனைப் போலவும், சூரியனைப் போலவும் ஏனைய இருகண்களையும் ஒளிவிடச் செய்த அம்முக்கண் மூர்த்தியே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான்.
142 | கழைபடு காடுதென்றல் குயில்கூவவஞ்சு மழைவடி வண்ணனெண்ணி மகவோனைவிட்ட எழில்பொடி வெந்துவீழ விமையோர்கணங்க தழல்படு நெற்றியொற்றை நயனஞ்சிவந்த |
4.014.9 |
கரும்புகள் காடுபோல வளர்ந்துள்ள கருப்பங் கொல்லையில் தென்றல் உலவ, குயில்கூவ, ஐந்துமலரம்புகளை உடையவனாய் நெருங்கி வந்து, தனக்குப் பக்க பலமாக இருப்பதாகக் கூறிய கார்மேக வண்ணனாகிய திருமாலையும் இந்திரனையும் விட்டு நீங்கிய, மலர் அம்புகளை விடுத்த மன்மதனுடைய அழகிய உடல் சாம்பலாகித் தரையில் விழ அதனைக் கண்ட தேவர் கூட்டங்கள் நெருப்பு என்று சொல்லி அஞ்சி நீங்குமாறு நெருப்பை வெளிப் படுத்தும் நெற்றியின் ஒற்றைக்கண் சிவந்த தீ நிறத்தவனாகிய எங்கள் தந்தையே நமக்குச் சரணியன் ஆவான்.
143 | தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக உடன்வழி பாடுசெய்த திருமாலையெந்தை சுடரடி யான்முயன்று சுழல்வித்தரக்க அடல்வலி யாழியாழி யவனுக்களித்த |
4.014.10 |
பெரிய தாமரைப் பூக்கள் ஆயிரத்தில் ஒன்று குறைய, வழிபாடு நிறைவதற்காகத் தன் செந்தாமரைக் கண் ஒன்றை இடந்து அதனால் அருச்சித்து வழிபாட்டை நிறைவு செய்த திருமாலை எம் தந்தையாகிய பெருமான் மகிழ்ந்து, தன் ஒளிமிக்க சேவடியால் வட்டமாகச் சக்கரத்தை உண்டாக்கி அதனைச் சுழலச் செய்து, சலந்தரனுடைய மார்பைப் பிளந்த கொடுமை மிக்க வலிமை உடைய சக்கரத்தைப் பாற்கடலையுடைய திருமாலுக்கு அளித்தான். அவனே எமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான்.
144 | கடுகிய தேர்செலாது கயிலாயமீது முடுகுவ தன்றுதன்ம மெனநின்றுபாகன் விடுவிடு வென்றுசென்று விரைவுற்றரக்கன் நெடுநெடு விற்றுவீழ விரலுற்றபாத |
4.014.11 |
விரைந்து செல்லும் தேராயினும் அது கயிலை மலை மீது செல்லாது; உன் வீரத்தைப் பெரிதாகக் கருதாது விட்டு ஒழி. என்னிடத்தில் கோபிப்பது அறம் அன்று' என்று நிறுத்திய தேரில் நின்று கூறிய பாகனை வெகுண்டு, வேகமாகச் சென்று விரைவாக இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட, அவனுடைய தலைகளும் தோள்களும் நெடுநெடு என்னும் ஓசையோடு இற்றுவிழுமாறு அழுத்தியது சிவபெருமானுடைய திருவடியின் விரல் ஒன்று. அத்தகைய திருவடிகளை என் உள்ளம் எண்ணலுற்றது.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தசபுராணம் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஒப்பற்ற, அடைக்கலம், நமக்கு, எங்கள், சிவந்த, மேம்பட்ட, நின்று, பெருமானே, சரணியன், சென்று, கொண்டு, தேவர்கள், நல்குபவனாவான், வழிபாடு, விட்டு, போலவும், அவனுடைய, பார்வதி, உடையவனும், மண்ணும், எங்கும், பிரமனும், நீங்கிய, திருச்சிற்றம்பலம், திருமுறை, திருமாலும், அவர்கள், தாரகனுடைய, ஏழுலகமும், தசபுராணம், பெருமான், திருவடிகளே