முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.001.திருவதிகைவீரட்டானம்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.001.திருவதிகைவீரட்டானம்

4.001.திருவதிகைவீரட்டானம்
பன் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பன் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது.
1 | கூற்றாயின வாறு விலக்ககிலீர் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில |
4.001.1 |
கெடில ஆற்றின் வடகரையில்விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் டலாடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.
2 | நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் நஞ்சாகிவந் தென்னை நலிவதனை அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில |
4.001.2 |
அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண்படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்கமாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம்போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.
3 | பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் துணிந்தேஉமக் காட்செய்துவாழலுற்றாற் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில |
4.001.3 |
அதிகை... அம்மானே! உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
4 | முன்னம்அடி யேன்அறி யாமையினான் பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ அன்னநடை யார்அதி கைக்கெடில |
4.001.4 |
அன்னம்போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ!
5 | காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் நீத்தாய கயம்புக நூக்கியிட வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில |
4.001.5 |
ஆரவாரித்துப் பெருகும் கெடிலக் கரையிலமைந்த அதிகை வீரட்டானப்பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச் செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின் ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில்விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில் ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய் வயிற்றோடு ஏனையஉள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு அறியாதேனாய் நாளை வீணாக்கினேன்.
6 | சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில |
4.001.6 |
அதிகை... அம்மானே! இறந்தவர் மண்டையோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழுதிலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.
7 | உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் பயந்தேயென் வயிற்றின்அகம்படியே அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில |
4.001.7 |
அதிகை... அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மையல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப்புரட்டி அறுத்துச் சூலை நோய் உள் உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன். இனி, உமக்குத் தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
8 | வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் கலித்தேயென் வயிற்றின் அகம்படியே அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில |
4.001.8 |
அதிகை ... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்துவாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலைநோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.
9 | பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை என்போலிகள் உம்மை யினித்தௌயார் அன்பேஅமை யும்அதி கைக்கெடில |
4.001.9 |
அதிகை ... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தௌயமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும்.
10 | போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் வேர்த்தும்புரண்டும்விழுந் தும்எழுந்தால் ஆர்த்தார்புனல் சூழ்அதிகைக்கெடில |
4.001.10 |
ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன்சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவதிகைவீரட்டானம் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அம்மானே, அடியேன், னத்துறை, கைக்கெடிலவீரட்டா, அடியேனை, சூலைநோய், துன்புறுத்தும், போக்கி, பெருமானே, மறவேன், விட்டேன், ஒன்றும், சூலைநோயைப், அருளுவீராக, துடக்கி, வயிற்றின், என்னும், யேன்அதி, திருச்சிற்றம்பலம், கரையிலமைந்த, கெடிலக், வருத்தும், அருளுவாயாக, திருமுறை, துன்பம், அதற்கு, அடியேனுக்குத், பொழுதிலும், உறுப்புக்களைக், வொப்பது, மண்டையோட்டில், துரந்து, யிற்பலி, திருவதிகைவீரட்டானம், பிச்சை, உமக்கு, இதற்குமுன், செயற்படாமல், திருவதிகை, என்னைத்