முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.084.திருப்புறவம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.084.திருப்புறவம்

3.084.திருப்புறவம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3701 | பெண்ணிய
லுருவினர் பெருகிய புனல்விர கண்ணியர் கடுநடை விடையினர் கழறொழு நண்ணிய பிணிகெட வருள்புரி பவர்நணு புண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலி |
3.084.1 |
சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப் பாகமாகக் கொண்ட வடிவமுடையவர். பெருக்கெடுக்கும் கங்கை நீரோடு, பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர். விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர். தம் திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து அருள்புரிபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த பதியாவது, புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3702 | 3702
கொக்குடை
யிறகொடு பிறையொடு குளிர்சடை அக்குடை வடமுமொ ரரவமு மலரரை திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் |
3.084.2 |
கொக்கின் இறகோடும், பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான். எலும்பு மாலை அணிந்தவர். பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர். திசைகளையே ஆடையாகக் கொண்ட உருவினர். அவர் மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3703 | கொங்கியல்
சுரிகுழல் வரிவளை யிளமுலை பங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொ தங்கிய கரதல முடையவர் விடையவ பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் |
3.084.3 |
வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும், வரிகளையுடைய வளையல்களையும், இளமை வாய்ந்த முலைகளையும் உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான். அவர் மழுவோடு, மானையும் கரத்தில் ஏந்தியவர், இடப வாகனமுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல் பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க, அதில் மூழ்காது அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3704 | மாதவ
முடைமறை யவனுயிர் கொளவரு மேதகு திருவடி யிறையுற வுயிரது சாதக வுருவியல் கானிடை யுமைவெரு போதக வுரியதண் மருவின ருறைபதி |
3.084.4 |
பெரிய தவம் செய்த மறையவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர் விலகும் படி செய்தவரும், பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும் படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3705 | காமனை
யழல்கொள விழிசெய்து கருதலா தூமம துறவிறல் சுடர்கொளு வியவிறை ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ பூமக னலரொடு புனல்கொடு வழிபடு |
3.084.5 |
சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர். பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும் புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர். அவர் வீற்றிருந்தருளும் தலமாவது, வேள்வி வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதி, பிற வாத்தியங்கள் ஒலிக்க, தீபமேற்றிப் பிரமன், மலரும், நீரும் கொண்டு வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3706 | சொன்னய
முடையவர் சுருதிகள் கருதிய, பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி முன்னைய முதல்வினை யறவரு ளினருறை புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி |
3.084.6 |
இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க தோத்திரங்களைச் சொல்பவர்களும், வேதங்கள் கடைப்பிடிக்கும்படி கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும், வேதத்தின் பிற்பகுதியான உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும் வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும், தம் திருவடிகளைப் போற்றி வழிபட, அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் ஆணவம், கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது, பொன் முடிப்புப் போன்ற புன்னையரும்பு, பொதியவிழ்வது போல மலர, அதிலிருந்து பொன் போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3707 | வரிதரு
புலியத ளுடையினர் மழுவெறி பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி எரிதரு முருவின ரிமையவர் தொழுவதொ புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி |
3.084.7 |
சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர். பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர். யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத் திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையையுடையவர். எரிபோல் மிளிர்கின்ற சிவந்த மேனியுடையவர். தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர். இத்தகைய சிவபெருமான் பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3708 | வசிதரு
முருவொடு மலர்தலை யுலகினை நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது ஒசிதர வொருவிர னிறுவின ரொளிவளர் பொசிதரு திருவுரு வுடையவ ருறைபதி |
3.084.8 |
வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித் துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும், ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3709 | தேனக
மருவிய செறிதரு முளரிசெய் ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை வானகம் வரையக மறிகடல் நிலனெனு போனக மருவின னறிவரி யவர்பதி |
3.084.9 |
உள்ளிடத்தில் தேன் பொருந்திய, இதழ்கள் பல செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து, சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைக்கும் பிரமனும், ஏழுவகையாக அமைந்த வானகம், மலை, கடல், நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற்கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3710 | கோசர
நுகர்பவர் கொழுகிய துவரன பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த பூசுரர் மறைபயி னிறைபுக ழொலிமலி |
3.084.10 |
நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக் கொள்பவர்களும், துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் திருச்சிற்றம்பலம் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்ற முடையவர்கள். பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள் சமணர்கள், இவ்விருவகை நீசர்களை விட்டு, சிவபெருமானைத் தியானியுங்கள். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, இப் பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
3711 | போதியல்
பொழிலணி புறவநன் னகருறை வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு |
3.084.11 |
மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான சிவபெருமானைப் போற்றி, அந்தணர்களின் தலைவனும், மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புறவம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்புறவம், என்னும், திருத்தலமாகும், சிவபெருமான், புறவமே, வீற்றிருந்தருளும், பொருந்திய, மருவிய, திருச்சிற்றம்பலம், திருவடி, ருறைபதி, வீற்றிருந்தருளுகின்ற, அப்பெருமான், மருவின, அணிந்தவர், தலமாவது, பெருமையர், பொருள், வானகம், பதியானது, போற்றி, வேதத்தின், பொழிலணி, கொண்டு, பதியாவது, அந்தணர்கள், ழொலிமலி, மிகுந்த, திருமுறை, உமாதேவியோடு, வரிகளையுடைய, உமாதேவியைத், முடையவர், இறைவனைப்