முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.085.திருவீழிமிழலை
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.085.திருவீழிமிழலை
3.085.திருவீழிமிழலை
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
3712 | மட்டொளி
விரிதரு மலர்நிறை சுரிகுழன் பட்டொளி மணியல்கு லுமையமை யுருவொரு கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி |
3.085.1 |
மலர் விரிய நறுமணம் கமழும், நௌந்த கூந்தலையுடையளாய், மடமைப் பண்புடைய பெண்ணானவளாய், பட்டாடையில் ஒளிமிக்க மேகலா பரணத்தை அணிந்தவளான உமா தேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான், சடைமுடியின்கண் கட்டப்பட்டு விளங்கும் பிரகாசிக்கின்ற கங்கைநீரோடு, கடிக்கும் பாம்புசேர வசிக்கின்ற சடைமுடியில் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும், தேய்ந்த கலைகளையுடைய சந்திரனையும் அணிந்து வீற்றிருந்தருளும் பதி திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3713 | எண்ணிற
வரிவளை நெறிகுழ லெழின்மொழி பெண்ணுறு முடலினர் பெருகிய கடல்விட கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர் விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி |
3.085.2 |
சிவபெருமான், எண்ணற்ற வரிகளையுடைய வளையல்களையும், சுருண்ட கூந்தலையும் அழகிய மொழியையும், இளமுலைகளையும் உடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர். பெருகித் தோன்றிய கடல் விடமுண்ட கண்டத்தினர். நெற்றிக் கண்ணையுடையவர். விரைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கையினர். விண்ணில் திகழும் பிறைச்சந்திரனை அணிந்த சடையினர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி, திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3714 | மைத்தகு
மதர்விழி மலைமக ளுருவொரு வைத்தவர் மதகிரி யுரிவைசெய் தவர்தமை தெத்தென விசைமுரல் சரிதையர் திகழ்தரு வித்தக நகுதலை யுடையவ ரிடம்விழி |
3.085.3 |
மை பூசிய அழகிய விழிகளையுடைய உமாதேவியை, சிவபெருமான் தம் உடம்பின் இடப்பாகமாக வைத்தவர். மதம் பிடித்த யானையின் தோலை உரித்தவர். தம்மை அடைந்தவர் தாளத்துடன் இசைபாடுகின்ற புகழையுடையவர். பாம்பை அணிந்தவர். அதிசயமான மண்டையோட்டைக் கொண்டவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3715 | செவ்வழ
லெனநனி பெருகிய வுருவினர் கவ்வழ லரவினர் கதிர்முதிர் மழுவினர் முவ்வழ னிசிசரர் விறலவை யழிதர வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி |
3.085.4 |
சிவபெருமான் செந்நிறமான அழல்போன்ற மேனியுடையவர். நெருப்புப் போன்று விடமுடைய, கவ்வும் தன்மையுடைய பாம்பை அரையில் கச்சாக இறுக்கமாகக் கட்டியவர். சுடர் விடும் மழுப்படை உடையவர். தம்மைத் தொழாத, பகைமையுடைய, சினம் மிகுந்த மூன்று அசுரர்களின் வலிமை அழியுமாறு அவர்களின் மதில்களை எரியுண்ணும்படி மிகவும் கோபித்தவர். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3716 | பைங்கண
தொருபெரு மழலைவெ ளேற்றினர் எங்கணு முழிதர்வ ரிமையவர் தொழுதெழு அங்கண ரமரர்க ளடியிணை தொழுதெழ வெங்கண வரவின ருறைதரு பதிவிழி |
3.085.5 |
பசிய கண்களையும், சிறு முழக்கத்தையுமுடைய பெரிய வெண்ணிற இடபத்தைச் சிவபெருமான் வாகனமாகக் கொண்டவர். எல்லா இடங்களிலும் பிச்சை ஏற்றுத் திரிபவர். தேவர்களால் தொழப்படும் தன்மையர். தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய அடியவர்களாலும் தொழுது போற்றப்படுபவர். கொடிய கண்ணையுடைய பாம்பை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3717 | பொன்னன
புரிதரு சடையினர் பொடியணி உன்னினர் வினையவை களைதலை மருவிய தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மின்னென மிளிர்வதொ ரரவினர் பதிவிழி |
3.085.6 |
இறைவன் பொன்போன்று ஒளிரும் முறுக்கேறிய சடைமுடி உடையவர். திருவெண்ணீறு அணிந்த திருமேனியர். தம்மை நினைந்து போற்றும் அடியவர்களின் வினைகளை வேரோடு களைந்து அருள்புரியும் ஒப்பற்றவர். இனிய இசையுடன் போற்றப் படும் புகழையுடையவர். அழகிய திருமார்பில் மின்னலைப் போல் ஒளிரும் பாம்பணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதி, திருவீழி மிழலை என்னும் திருத்தலமாகும்.
3718 | அக்கினொ
டரவரை யணிதிக ழொளியதொ டிக்குக மலிதலை கலனென விடுபலி கொக்கரை குழன்முழ விழவொடு மிசைவதொர் மிக்கவ ருறைவது விரைகமழ் பொழில்விழி |
3.085.7 |
சிவபெருமான், அக்குப்பாசியோடு பாம்பையும் அரையில் அணிந்தவர். ஒளிரும் ஆமையோட்டை மார்பில் பூண்டவர். கரும்பின் சுவை போன்று இனிய மொழிகளைப்பேசி, தம் கையில் நீங்காது பொருந்திய மண்டையோடாகிய பாத்திரத்தில் இடப்படுகின்ற பிச்சையை ஏற்பவர். கொக்கரை, குழல், முழவு முதலான வாத்தியங்கள் இசைக்க, நிகழும் விழாக்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்று மகிழும் பண்பினர். தம்மினும் மிக்கவரில்லையாக மேம்பட்ட அப்பெருமான் வீற்றிருந்தருளுவது நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3719 | பாதமொர்
விரலுற மலையடர் பலதலை பூதமொ டடியவர் புனைகழ றொழுதெழு ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடை வேதமொ டுறுதொழின் மதியவர் பதிவிழி |
3.085.8 |
தம் பாதத்திலுள்ள ஒரு விரலை ஊன்றி, கயிலை மலையின்கீழ் இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி செய்தவர். பூதகணங்களும் அடியவர்களும் தம்முடைய அழகிய திருவடிகளைத் தொழுது போற்றத்தக்க புகழையுடையவர். ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர். அச்சிவபெருமான் வீற்றிருந் தருளும் பதியாவது, வேதம் ஓதுதலுடன், தமக்குரிய ஆறு தொழில்களையும் செய்கின்ற அறிஞர்களாகிய அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3720 | நீரணி
மலர்மிசை யுறைபவ னிறைகட நாரண னெனவிவ ரிருவரு நறுமல ஓருணர் வினர்செல லுறலரு முருவினொ வீரண ருறைவது வெறிகமழ் பொழில்விழி |
3.085.9 |
நீரில் விளங்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், நிறைந்த நீருடைய கடலில் துயிலும் திருமாலும் ஆகிய இவர்கள் இருவரும் இறைவனின் நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடியையும், மலரணிந்த திருமுடியையும் காண வேண்டும் என்ற ஒரே உணர்வினராய்ச் சென்றும், காணற்கு அரியவராய்ப் பேரொளியாய் ஓங்கி நின்ற வீரம் பொருந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3721 | இச்சைய
ரினிதென இடுபலி படுதலை பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென மொச்சைய வமணரு முடைபடு துகிலரு விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி |
3.085.10 |
பிரமனின் மண்டையோட்டில் இடப்படுகின்ற பிச்சையை இனிதென ஏற்கும் விருப்பமுடைய சிவபெருமானின் பெருமையைச் சிறிதும் அறியும் உணர்வில்லாதவர்கள் சமணர்களும், புத்தர்களும் ஆவர். நீராடாமையால் துர்நாற்றத்தை உடைய சமணர்களும், துவைத்து உடுத்தாமையால் முடைநாற்றமுடைய திருச்சிற்றம்பலம் ஆடையைப் போர்ப்பவர்களாகிய புத்தர்களும் அழிவதற்குக் காரணமான வித்தை செய்பவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நறுமணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
3722 | உன்னிய
வருமறை யொலியினை முறைமிகு இன்னிசை யவருறை யெழிறிகழ் பொழில்விழி மன்னிய புகலியுண் ஞானசம் பந்தன சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி |
3.085.11 |
இறைவன் அருளிச்செய்ததாகக் கருதப்படும் அருமறையின் ஒலியினை முறையாக இசையோடு பாடிப் போற்றும் அந்தணர்கள் வசிக்கின்றதும், அழகிய சோலைகள் விளங்குவதுமான திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தைப் போற்றி, நிலைபெற்ற புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் வண்தமிழால் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் இம்மையில் துயரற்றவராவர். மறுமையில் வீடுபேறடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீழிமிழலை - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவீழிமிழலை, என்னும், திருத்தலமாகும், மிழலையே, சிவபெருமான், வீற்றிருந்தருளும், பதிவிழி, கமழும், நறுமணம், பொழில்விழி, அணிந்தவர், பாம்பை, சோலைகள், தொழுது, ருறைவது, சரிதையர், ஒளிரும், அப்பெருமான், புகழையுடையவர், கொண்டவர், திருச்சிற்றம்பலம், உடையவர், சடையினர், இடப்படுகின்ற, பிச்சையை, பொருந்திய, புத்தர்களும், விரைகமழ், திருமுறை, சூழ்ந்த, அந்தணர்கள், நிறைந்த, சமணர்களும், மதியவர், கடலில், இடமாவது, விளங்கும், தோன்றிய, போன்று, திகழ்தரு, விசைமுரல், இத்தகைய, வைத்தவர், அரையில், பதியானது, அணிந்த, போற்றும், இறைவன், பெருகிய, மிடறினர், கொக்கரை