முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.012.திருக்கோட்டாறு
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.012.திருக்கோட்டாறு

3.012.திருக்கோட்டாறு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
2921 | வேதியன்
விண்ணவ ரேத்தநின் றான்விளங் ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்ல |
3.012.1 |
வேதங்களை அருளிச் செய்த சிவபெருமான் விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான். அவ்வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான். அழகிய கிளிகள் கொஞ்சும் குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிப் பிரானான அவனை நினைந்து வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை.
2922 | ஏலம லர்க்குழன்
மங்கைநல் லாள்இம பாலம ருந்திரு மேனியெங் கள்பர கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் ஆலநீழற்கீ ழிருந்தறஞ் சொன்ன |
3.012.2 |
மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான, இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான், வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான்.
2923 | இலைமல்கு
சூலமொன் றேந்தினா னுமிமை மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் அலைமல்கு வார்சடை யேற்றுகந் தவழ |
3.012.3 |
சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக் கையில் ஏந்தியவன். விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன். கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன், காய்களும், கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
2924 | ஊனம
ரும்முட லுள்ளிருந் தவ்வுமை வானம ரும்மதி சென்னிவைத் தமறை தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் தானம ரும்விடை யானும்எங் கள்தலை |
3.012.4 |
இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன். உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன். வேதங்களை அருளிச் செய்தவன். இடபத்தை வாகனமாக உடையவன். அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான்.
2925 | வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் |
3.012.5 |
சிவபெருமான் நறுமணம் கமழும் மாலை யணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும் வலிமையுடையவன். செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன். அனைத்துயிர்களும் விரும்பி அடையத்தக்க அவன், கொம்புகளிலுள்ள மலர்களை வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு அருள்புரிபவன். அவனே எங்கள் தலைவன்.
2926 | பந்தம
ரும்விரன் மங்கைநல் லாளொரு வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை |
3.012.6 |
சிவபெருமான் பந்துபோன்ற திரட்சியான விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன். வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன். மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத் தலத்தில் வீற்றிருந்தருள்கின்ற, அனைத்துயிர்களிடத்தும் செவ்விய அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை.
2927 | துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும் வண்டம ருங்குழன் மங்கைநல் லாளொரு பங்கனும் தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள் அண்டமு மெண்டிசை யாகிநின் றவழ கனன்றே | 3.012.7 |
துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில் சூடியவன் சிவபெருமான். நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவன். பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவன். கடலும், நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும், எட்டுத்திசைகளுமாகி நின்ற அழகன் அல்லனோ?
2928 | இரவம
ருந்நிறம் பெற்றுடை யவிலங் கரவம ரக்கயி லையெடுத் தான்வலி குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள் |
3.012.8 |
இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க, அவன் வலிமையை அழித்த சிவபெருமான், குரா மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி, தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான்.
2929 | ஓங்கிய
நாரண னான்முக னும்உண நீங்கிய தீயுரு வாகிநின் றநிம கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம |
3.012.9 |
செருக்குடைய திருமாலும், பிரமனும் உணரா வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். நிழல்தரும் கோங்குமலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான். தேவர்கட்கெல்லாம் தேவனாவான்.
2930 | கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் கொடுக்கலில் லாக்குழ கன்அம ருந்திருக் இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை |
3.012.10 |
சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும், சிறுபாயைச் சுமந்து திரியும் சமணர்களுக்கும் தன்னை நாடாததால், அருள் புரியமாட்டாத அழகன் சிவபெருமான். திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடுகின்றவர்களும், தேவர்கட்குத் தலைவராவர்.
2931 | கொடியுயர்
மால்விடை யூர்தியி னான்திருக் அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு கடிகம ழும்பொழிற் காழியுண் ஞானசம் படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை |
3.012.11 |
இடபத்தைக் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டு திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க, திருநடனம் புரியும் அருளாளன். அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோட்டாறு - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருக்கோட்டாறு, என்னும், கோட்டாற்றுள், சிவபெருமான், சூழ்ந்த, திருத்தலத்தில், சோலைகள், உமாதேவியை, தலத்தில், கூந்தலையுடைய, பாகமாகக், மலர்கள், நிறைந்த, வீற்றிருந்தருளுகின்ற, கொண்டவன், ததிருக், ரும்மலர்ச், சோலைசூழ்ந், கமழும், எங்கள், கார்திருக், மங்கைநல், சூழ்ந்தழ, விரும்பி, வண்டுகள், நறுமணம், தலைவன், திருமுறை, வீற்றிருந்து, லாளொரு, றாடவல், அடியவர்கட்கு, நல்லாளாகிய, லார்க்கில்லை, திருச்சிற்றம்பலம், தண்பொழில், அருளிச், எழுந்தருளியுள்ள, கனன்றே, நினைந்து, பங்கனும், வேதங்களை, லார்திருக், இறைவன், சூழ்ந்தெழி, தேத்தவல், பாகமாக