முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.067.திருப்பெரும்புலியூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.067.திருப்பெரும்புலியூர்
2.067.திருப்பெரும்புலியூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர்.
தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
2189 | மண்ணுமோர்
பாக முடையார் விண்ணுமோர் பாக முடையார் கண்ணுமோர் பாக முடையார் பெண்ணுமோர் பாக முடையார் |
2.067. 1 |
திருப்பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், தாம் கொண்டருளிய பேருருவில் மண்விண் ஆகிய உலகங்களை ஒவ்வொரு பாகமாகக் கொண்டவர். திருமாலை ஒருபாகமாக ஏற்றவர். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். வேதங்களை உடையவர். விமலர். உமையம்மைக்குத் தம்முடலில் ஒருபாகத்தை அளித்ததால் கண்களிலும் ஒருபாதியையே பெற்றவர். கங்கையைச் சடையில் கரந்தவர்.
2190 | துன்னு
கடற்பவ ளஞ்சேர் மின்னு சுடர்க்கொடி போலும் கன்னி களின்புனை யோடு பின்னு சடைப்பெரு மானார் |
2.067.2 |
கடலில் பொருந்திய பவளம் போன்ற தூயனவாகிய நீண்ட தோள்களையும், மின்னுகின்ற ஒளி பொருந்திய கொடிபோன்ற மேனியையும் உடைய கங்கையைப், பிற நதிக்கன்னியரின் நீரோடு, கலை வளரும் மாலைபோன்ற பிறைமதியைப் புனைந்த பின்னிய சடையை உடைய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.
2191 | கள்ள
மதித்த கபாலங் துள்ள மிதித்துநின் றாடுந் வெள்ள நகுதலை மாலை பிள்ளை மதிப்பெரு மானார் |
2.067.3 |
கள்ளங்கருதிய பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித் துள்ளி மிதித்து நின்றாடும் தொழிலராகிய அழகிய செல்வரும், கங்கை சிரிக்கும் தலைமாலை ஆகியன மிளிர்கின்ற விரிசடைமேல் பிள்ளைமதியையும் புனைந்துள்ளவரும் ஆகிய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.
2192 | ஆடலிலைய
முடையார் பாடலிலைய முடையார் ஊடலிலைய முடையார் பீடலிலைய முடையார் |
2.067. 4 |
நடனலயம் உடையவர். அரிய நான்கு மறைகளைத் தாங்கிப் போற்றும் ஆறு அங்கங்களாகிய இலயம் உள்ள பாடல்களைப் பாடுபவர். பன்மையும் ஒருமையுமாகிய கோலத்தைச் செய்து, ஐம்புலனடக்கம் இன்மையால் நாம் ஐயுறுமாறு இருப்பவர். யோகம் என்னும் ஒளிநெறியை மேற்கொண்டு பெருமை பொருந்திய நள் இரவில் நடனம் புரிபவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.
2193 | தோடுடை
யார்குழைக் காதிற் காடுடை யாரெரி வீசுங் நாடுடை யார்பொரு ளின்ப பீடுடை யார்பெரு மானார் |
2.067.5 |
பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர். ஒரு காதில் தோட்டையும் ஒருகாதில் குழையையும் உடையவர். சாம்பலைப் பூசியவர். அனலில் நின்று ஆடுதற்கு இடுகாட்டை இடமாக உடையவர். எரிவீசும் கையுடையார். கடலால் சூழப்பட்ட நாடுகள் அனைத்தையும் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லனவற்றை நாள்தோறும் விரும்பிய பெருமை உடையவர். எல்லோர்க்கும் தலைவராயிருப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகிறார்.
2194 | கற்ற
துறப்பணி செய்து முற்றி தறிதுமென் பார்கண் மற்றி தறிதுமென் பார்கண் பெற்றி பெரிது முகப்பார் |
2.067.6 |
கல்வி கற்றதன் பயனை அறிந்த பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்குக் கண்ணாயிருப்பவர். இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு முதல்வராய் இருப்பவர். வேத புராணங்களாய் விளங்குபவர். இதனைப் பின் அறிவோம் என்பார் மனத்தில் இருப்பவர். தொண்டர்களைப் பெரிதும் உகப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.
2195 | மறையுடை
யாரொலி பாடன் குறையுடை யார்குறை தீர்ப்பார் கறையுடை யார்திகழ் கண்டங் பிறையுடை யார்சென்னி தன்மேற் |
2.067.7 |
வேதம் ஓதுகின்றவர்கள், ஒலிக்கின்ற பாடல்களால் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர். மனக்குறை உடையவர் ஆகியோர் குறைகளைத் தீர்ப்பவர். இளமைத்தன்மையர், அழகர். நம் செல்வராயிருப்பவர். கண்டத்தில் விடக்கறை உடையவர். கங்கையைச் சடையில் கரந்தவர். சென்னியின்மேல் பிறை உடையவர்.
2196 | உறவியு
மின்புறு சீரு துறவியுங் கூட்டமுங் காட்டித் மறவியஞ் சிந்தனை மாற்றி பிறவி யறுக்கும் பிரானார் |
2.067. 8 |
உறவும் இன்பமும் ஓங்குமாறு செய்து வீட்டின்பத்தை எளிதாகத் தந்து துறவுள்ளமும் பற்றுள்ளமும் காட்டித் துன்ப இன்பங்களைத் தந்து மறத்தலுடைய சிந்தனையை மாற்றி மறவாமையுடன் வாழவல்லார்; பிறவியைப் போக்கும் பிரானார் பெரும்புலியூரை பிரியாதுறைகின்றார்.
2197 | சீருடை
யாரடி யார்கள் நீருடை யார்பொடிப் பூசு தாருடை யார்விடை யூர்வார் பேருடை யார்பெரு மானார் |
2.067.9 |
புகழுடைய அடியவர்களுக்குப் பெரியோரைப் போல்வர். சடையில் கங்கையை உடையவர். திருநீறுபூசும் நினைவுடையவர். விரிந்த கொன்றைமாலையைச் சூடியவர். விடையை ஊர்ந்து வருபவர். தலைமைத்தன்மை உடையவர். அழகிய ஆயிரம் பெயருடையவர். பெருமானாக விளங்குபவர். அவ்விறைவர் பெரும்புலி யூரைப் பிரியாது உறைகின்றார்.
2198 | உரிமை
யுடையடி யார்கள் கருமை யுடையன காட்டி கருமை யுடைநெடு மாலுங் பெருமை யுடைப்பெரு மானார் |
2.067.10 |
உரிமையுடைய அடியவர்கட்கும், மனம் பொருந்த நினைப்பவர்கட்கும் காண இயலாதனவற்றைக் காட்டி அருள் செய்யும், ஆதிக்கும் ஆதியாய முதல்வர். கரிய திருமாலும் மணமுடைய தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் காணாப் பெருமை யுடைய பெருமான். அவ்விறைவர் பெரும் புலியூரில் பிரியாது உறைகின்றார்.
2199 | பிறைவள
ரும்முடிச் சென்னிப் நறைவள ரும்பொழிற் காழி மறைவள ருந்தமிழ் மாலை நிறைவளர் நெஞ்சின ராகி |
2.067. 11 |
பிறைவளரும் முடியினை உடைய சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்தகாழிப் பதியில் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய வேதமாக வளரும் இத்தமிழ்மாலையால் பரவவல்லவர்கட்குத் துயர் நீக்கமும் நெஞ்சு வளர் நிறையும் உளவாம். அவர்கள் நீடிய பேரின்ப உலகில் வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பெரும்புலியூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெரும்புலி, உடையவர், முடையார், யூர்பிரி, பிரியாது, உறைகின்றார், மானார், செய்து, பெருமை, பெரும்புலியூரைப், பெருமான், இருப்பவர், சடையில், பொருந்திய, தறிதுமென், பார்கண், அவ்விறைவர், காட்டி, காணாப், முதல்வர், நற்றமிழ், அறிவோம், யார்பெரு, மாற்றி, சென்னிப், காட்டித், விளங்குபவர், யார்கள், பிரானார், தாங்கிப், இறைவர், கொண்டவர், பிரியாதுறையும், திருச்சிற்றம்பலம், கரந்தார், விமலர், திருமுறை, கங்கையைச், திருப்பெரும்புலியூர், செல்வர், பெரும்புலியூரில், வளரும், கரந்தவர், சடையிற்