முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.068.திருக்கயிலாயம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.068.திருக்கயிலாயம்

1.068.திருக்கயிலாயம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் இமயமலையிலுள்ளது.
சுவாமிபெயர் - கயிலாயநாதர்.
தேவியார் - பார்வதியம்மை.
733 | . பொடிகொளுருவர் புலியினதளர் கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் இடியகுரலா லிரியுமடங்கல் கடியவிடைமேற் கொடியொன்றுடையார் |
1.068.1 |
மேகங்களின் இடிக்குரல் கேட்டு அஞ்சிய சிங்கங்கள், நிலைகெட்டு ஓடத்தொடங்கும் சாரலை உடைய கயிலை மலையில் வாழும் இறைவர், திருநீறு பூசிய திருமேனியை உடையவர். புலியின் தோலை உடுத்தவர். முப்புரி நூல் விளங்கும் மார்பில் மணம் கமழும் கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்தவர். விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர். விரைந்து செல்லும் விடை மீது ஏறி அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே தம் கொடியாகக் கொண்டவர்.
734 |
புரிகொள்சடைய ரடியர்க்கௌயார் தெரியவுருவில் வைத்துகந்த பரியகளிற்றை யரவுவிழுங்கி கரியமிடற்றர் செய்யமேனிக் |
1.068.2 |
பெரிய களிற்றி யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள் மிக்க கயிலை மலையில் விடம் உண்ட கரிய கண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமை மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்த தேவர் தலைவராவார்.
735 |
மாவினுரிவை மங்கைவெருவ மேவு மதியு நதியும்வைத்த தேவர்தேவர் திரிசூலத்தர் காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் |
1.068.3 |
திரங்கிய தோலை உடைய குரங்குகள் வாழும் காடுகளும் பொழில்களும் மலையிடையே இயற்கையாக அமைந்தசுனைகளும் சூழ்ந்த கயிலைமலைப் பெருமானார் உமையம்மை அஞ்சயானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு முடிமீது பிறை கங்கை ஆகியவற்றைக் கொண்ட இறைவர், தம் திருவடிகளை நினைந்து போற்றும் தேவர்களின் தேவர். முத்தலைச் சூலத்தை உடையவர்.
736 |
முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட தென்னீருருவ மழியத்திருக்கண் மன்னீர்மடுவும் படுகல்லறையி கன்னீர்வரைமே லிரைமுன்றேடுங் |
1.068.4 |
இயற்கையாகத் தோன்றிய மலைக் குகைகளில் வாழும் புலிகள், பசியினால் சினமடைந்து கல்லால் இயன்ற மலை மிசை உணவாதற்குரிய இரைகளையும், அருந்துவதற்கு நிலைபெற்ற நீரையுடைய மடுக்களையும் தேடும் கயிலை மலையில் உறையும் தலைவர், கடலில் பரவித் தோன்றிய நஞ்சினைத் திரட்டி உண்டவர் மன்மதனின் அழகிய உருவம் அழியக் கண் சிவந்த நுதலை உடையவர்.
737 |
ஒன்றும்பலவு மாயவேடத் நன்றுநினைந்து நாடற்குரியார் தென்றியிருளிற் றிகைத்தகரிதண் கன்றும்பிடியு மடிவாரஞ்சேர் |
1.068.5 |
இரவில் சிதறித் தனிமைப்பட்ட யானைகள் குளிர்ந்த மலைச் சாரலின் வழிகளில் விரையச் சென்று கன்றும் பிடியுமாய் இணையும் கயிலை மலைக்குரிய இறைவர். ஒருவராக இருந்தே பற்பல வடிவங்களைக் கொண்ட ஒப்பற்ற பரம்பொருளாவார். தம் திருவடிகளை அடைய எண்ணும் அடியவர்கள் பேரின்பத்தை அடையும் விருப்போடு நாடுதற்குரியவர்.
738 |
தாதார் கொன்றை தயங்குமுடியர் போதார்பாக மாகவைத்த மூதாருலகின் முனிவருடனா காதார்குழையர் வேதத்திரளர் |
1.068.6 |
கயிலைமலை இறைவர், மகரந்தம் நிறைந்த கொன்றைமாலை விளங்கும் முடியினை உடையவர். தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக ஏற்ற தூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண் வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அருளிச் செய்தவர். வலக் காதில் குழை அணிந்தவர். வேத வடிவாய் விளங்குபவர்.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
739 |
தொடுத்தார் புரமூன் றெரியச்சிலைமே எடுத்தான்திரள்தோள் முடிகள்பத்து கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் |
1.068.8 |
கயிலைமலை இறைவர் முப்புரங்களை மேருவில்லை வளைத்து எரியாகிய ஒளி பொருந்திய அம்பைத் தொடுத்து எரித்து அழித்தவர். கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் திரண்ட தோள்கள் பத்துத் தலைகள் ஆகியன நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். அவன் பிழையுணர்ந்து வருந்த அவனை அடிமையாக ஏற்று வாள் முதலிய படைகள் கொடுத்தவர். மார்க்கண் டேயனின் உயிரைக் கவர அவன்மேல் நெருங்கி வந்த எமனைச் சினந்து அவனைக் காலால் உதைத்தவர்.
740 |
ஊணாப்பலிகொண் டுலகிலேற்றா பூணாணார மாகப்பூண்டார் பேணாவோடி நேடவெங்கும் காணாவண்ண முயர்ந்தார்போலுங் |
1.068.9 |
கயிலை மலை இறைவர் உலகில் மகளிர் இடும் பலியை உணவாகக் கொண்டு அதனை ஏற்றவர். விளங்கும் மணி களைக் கொண்டுள்ள நாகங்களை அணிகலனாகப் பூண்டவர். எல்லோராலும் புகழப்பெறும் திருமால் பிரமர்கள் அடிமுடி காண விரும்பிச் சென்று தேட எங்கும் விளங்கும் எரியுருவோடு அவர்கள் காணாதவாறு உயர்ந்து நின்றவர்.
741 |
விருதுபகரும் வெஞ்சொற்சமணர் பொருதுபகரு மொழியைக்கொள்ளார் எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் கருதும்வண்ண முடையார்போலுங் |
1.068.10 |
தாம் பெற்ற விருதுகளைப் பலரிடமும் சொல்லிப் பெருமை கொள்ளும் இயல்புடைய கொடுஞ்சொல் பேசும் சமணரும் வஞ்சனையான மனமுடைய சாக்கியரும் பிற சமயத்தவரோடு சண்டையிட்டுக் கூறும் சொற்களைக் கேளாதவராய், புகழ்ந்து போற்றுவார்க்கு அணிமையானவராய் விடை ஒன்றைச் செலுத்தி உணவிடுவார்பால் இரந்து உண்பவராய் இகழ்பவரும் தம் பெருமையை நினைந்து போற்றும் இயல்பினராய் விளங்குபவர் கயிலைமலை இறைவர்.
742 |
போரார்கடலிற் புனல்சூழ்காழிப் காரார்மேகங் குடிகொள்சாரற் தேராவுரைத்த செஞ்சொன்மாலை வாராபிணிகள் வானோருலகின் |
1.068.11 |
கரையோடு போர் செய்யும் கடலினது நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன், கரிய மேகங்கள் நிலையாகத் தங்கியுள்ள சாரலை உடைய கயிலைமலை இறைவர்மேல் தௌந்துரைத்த இச்செஞ்சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதும் அடியவர்பால் பிணிகள்வாரா. அவர்கள் வானோர் உலகில் மருவும் மனத்தினராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கயிலாயம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மலையாரே, இறைவர், உடையவர், விளங்கும், கயிலைமலை, கொண்டு, தோன்றிய, பொருந்திய, சிவந்த, மலையில், வாழும், திருமுறை, சென்று, குளிர்ந்த, விளங்குபவர், அவர்கள், உலகில், திருச்சிற்றம்பலம், முதலிய, நினைந்து, பெருமானார், அணிந்தவர், திருக்கயிலாயம், பேசும், கொன்றை, திருவடிகளை, போற்றும்