முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.069.திரு அண்ணாமலை
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.069.திரு அண்ணாமலை

1.069.திரு அண்ணாமலை
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இது நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்.
தேவியார் - உண்ணாமுலையம்மை.
743 |
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் மூவார்புரங்க ளெரித்தவன்று தூமாமழைநின் றதிரவெருவித் ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் |
1.069.1 |
நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சியகாட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியா வரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர்.
744 |
மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் நஞ்சைக்கண்டத் தடக்குமதுவு வெஞ்சொற்பேசும் வேடர்மடவா அஞ்சொற்கிளிக ளாயோவென்னும் |
1.069.2 |
குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவர வரும் அழகிய சொற்களைப் பேசும் கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும்.
745 |
ஞானத்திரளாய் நின்றபெருமா ஊனத்திரளை நீக்குமதுவு ஏனத்திரளோ டினமான்கரடி ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் |
1.069.3 |
இராப்போதில் பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கிவரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகம நூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.
746 |
இழைத்தவிடையா ளுமையாள்பங்க தழைத்தசடையார் விடையொன்றேறித் பிழைத்தபிடியைக் காணாதோடிப் அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் |
1.069.4 |
தன்னைவிட்டுப் பிரிந்த பெண் யானையைக் காணாத பெரிய கையை உடைய மதம் பொருந்திய ஆண் யானை, குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலை உடைய திருவண்ணாமலை இறைவர், நூல் போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச் சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.
747 |
உருவிற்றிகழு முமையாள்பங்க செருவில்லொருகால் வளையவூன்றிச் பருவிற்குறவர் புனத்திற்குவித்த அருவித்திரளோ டிழியுஞ்சாரல் |
1.069.5 |
பெரிய வில்லை ஏந்திய குறவர்கள் விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர், உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர். இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணை எய்து முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர்.
748 |
எனைத்தோரூழி யடியாரேத்த நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் கனைத்தமேதி காணாதாயன் அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் |
1.069.6 |
மலைச்சாரலில் புல் மேய்க்கச் சென்ற ஆயன்கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில் அனைத்தெருமைகளும் வீடு திரும்பும் விருப்போடு ஒன்று திரளும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை, அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும்.
749 |
வந்தித்திருக்கு மடியார்தங்கள் பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் முந்தியெழுந்த முழவினோசை அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் |
1.069.7 |
விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும், பழமையான மலைப் பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு நினைவின்றி இருக்கும் அடியவர்களின் ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும் பாவங்களையும் போக்கியருளும் பரமனாவான். அவனது கோயில் திருவண்ணாமலையாகும்.
750 |
மறந்தான்கருதி வலியைநினைந்து நிறந்தான்முரிய நெரியவூன்றி திறந்தான்காட்டி யருளாயென்று அறந்தான்காட்டி யருளிச்செய்தார் |
1.069.8 |
தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர்களை அழித்து அருள்புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத் தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.
751 |
தேடிக்காணார் திருமால்பிரமன் மூடியோங்கி முதுவேயுகுத்த கூடிக்குறவர் மடவார்குவித்துக் றாடிப்பாடி யளக்குஞ்சாரல் |
1.069.9 |
மலையை மூடி ஓங்கி வளர்ந்த பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள் பலவற்றைக் குறவர்குலப் பெண்கள் ஓரிடத்தே குவித்து வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திருவண்ணாமலை இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன் ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர்.
752 |
தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா வட்டமுலையா ளுமையாள்பங்கர் அட்டமாளித் திரள்வந்தணையும் |
1.069.10 |
தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலை மயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின் சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய், மலைச்சாரல்களில் சிங்க ஏறுகள் கூட்டமாய் வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக.
753 |
அல்லாடரவ மியங்குஞ்சாரல் நல்லார்பரவப் படுவான்காழி சொல்லான்மலிந்த பாடலான வல்லாரெல்லாம் வானோர்வணங்க |
1.069.11 |
இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில் உறையும் இறைவரை, நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய, சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய அருஞ்சொல்லமைப்புக்கள் நிறைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு அண்ணாமலை - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மலையாரே, திருவண்ணாமலை, இறைவர், பெருமானார், விளங்கும், திருவண்ணாமலையில், அடியவர்கள், உறையும், தணையுஞ்சாரல், உணர்த்தும், ரிமையோர், வந்தணையும், மலைச்சாரலில், குவித்து, நின்றுண்ணும், கூட்டமும், அசுரர்களை, பழமையான, இறைவன், பாவந்தீர்க்கும், பெண்கள், அடிவாரத்தை, முப்புரங்களை, வானோர்கள், திருச்சிற்றம்பலம், திருமுறை, அழித்து, வானோர், சொற்களைப், தலைவர், அண்ணாமலை, பேசும், பொருள்போலும், தோன்றிய